நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வியாழக்கிழமை
இன்று
திரு ஏரகத் திருப்புகழ்
(சுவாமிமலை)
தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த ... தனதான
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
![]() |
| ஸ்ரீ சுவாமிநாத சுவாமி |
குழந்தைப் பேறின்றி வருந்துகின்ற
இளம் தம்பதியர்க்கு வரப்ரசாதமான திருப்புகழ் இது..
முருகா முருகா
ஸ்வாமிநாத குருவே சரணம்
சிவாய நம ஓம்
**


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..