நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 5
திங்கட்கிழமை
முதலில் குழம்பிற்கான மசாலாப் பொடி :
தேவையான பொருட்கள்:
மல்லி 100 gr
மிளகு 2 Tbsp
சீரகம் 2 tsp
சோம்பு 2 tsp
அரிசி மாவு ஒரு 2 tsp
ஏலக்காய் 5
மஞ்சள் தூள் ஒரு tsp
பட்டை சிறு துண்டு
கசகசா ஒரு tsp
பிரிஞ்சி இலை 2
அன்னாசிப் பூ ஒன்று
அரிசி மாவு மஞ்சள் தூள் இரண்டும் தவிர்த்த ஏனையவற்றை வெயிலில் நன்றாக உலர்த்தி மிக்ஸியில் அரைத்து அரிசி மாவு மஞ்சள் இவற்றைக் கலந்து காற்று புகாத கலனில் வைத்துக் கொள்வது நல்லது..
இந்த மசாலாப் பொடி தான் குழம்பிற்கு..
இனி குழம்பு வைப்பது எப்படி எனப் பார்க்கலாம்..
நூல்கோல் (நடுத்தரமாக) 2
பல்லாரி வெங்காயம் 2
தக்காளிப்பழம் ஒன்று
பச்சை மிளகாய் 3
தேங்காய் ஒருமூடி
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 10 பற்கள்
முந்திரிப் பருப்பு 15
குழம்பு மசாலாத் தூள் ஒரு Tbs
கடலை மாவு அரை Tbs
கசகசா அரை Tbs
சோம்பு அரை Tbs
கிராம்பு இரண்டு
இஞ்சி பூண்டு
விழுது ஒரு Tbsp
மஞ்சள் தூள் அரை tsp
குழம்பு மசாலா ஒரு Tbsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
மல்லித்தழை, சிறிதளவு புதினா இலைகள் 5/9
தாளிப்பதற்கு :
சோம்பு அரை tsp
பட்டை சிறிது
கிராம்பு 2
ஏலக்காய் 2
அன்னாசிப்பூ ஒன்று
சூரியகாந்தி எண்ணெய் தேவைக்கு
கல் உப்பு தேவைக்கு
முதலில் மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காயைத் துருவிப் போட்டு அதனுடன்
முந்திரிப் பருப்பு, கசகசா, சோம்பு, கிராம்பு இஞ்சி பூண்டு
ஆகியவற்றைச்
சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்..
அடுத்து நூல்கோலை சுத்தம் செய்து தேவைக்கேற்ற மாதிரி நறுக்கிக் கொள்ளவும்..
இத்துடன், வெங்காயத்தையும் சன்னமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்..
அடுத்ததாக வாணலி ஒன்றில் 4 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு ஏலக்காய், அன்னாசிப் பூ, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளுங்கள்.
இத்துடன்,
நூல்கோலையும்
சன்னமாக நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நூல்கோல்,
வெங்காயம் வதங்கியதும், தக்காளிப் பழத்தை நறுக்கிப் போட்டு வதக்கவும் ,
அடுத்ததாக பச்சை மிளகாயைக் நெடுக்காகக் கீறிப் போட்டு வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மல்லித் தூள் , மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஒரு ஸ்பூன், சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்..
இறுதியாக வேறொரு வாணலியில் சிறிதளவு மல்லித் தழை, சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த இடத்தில் நாம் 1 ஸ்பூன் அளவு கடலை மாவை, ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் தளர்ச்சியாகக் கரைத்து வாணலியில் சேர்க்க வேண்டும்.
கடலை மாவு சேர்த்த இந்த கலவையானது கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து தேவையான அளவு சுடு நீரை விட்டு, ஒரு கொதி வந்ததும்
குழம்பில் உப்பு காரம் சரியாக இருக்கிறதா நூல்கோல் வெந்து விட்டதா?.. - என்று பார்த்து, மிதமான சூட்டில் சற்று நேரம்
கொதிக்க வைத்தால், தரமான குழம்பு தயார்.
இறுதியாக மல்லித் தழை புதினா இலைகளைத் தூவி இறக்கி பரிமாற வேண்டியதுதான்.
நாமே நமக்காகத் தயாரித்த நூல்கோல் குழம்பு..
நமது கவனத்தில் தயாரிக்கப்பட்ட
மசாலா , கடலை மாவு இவற்றால் நூறு சதவீதம் ஆரோக்கியம் தான்..
இவற்றுடன்
முந்திரிப் பருப்பு சேர்த்துச் செய்வதால் தான் குழம்பின் தரத்திற்குச் சொல்ல வேண்டியதில்லை...
நூல்கோலில் வைட்டமின் A ,C, E மாங்கனீஸ், பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் K இதயத்தில் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
நமது சமையல்
நமது ஆரோக்கியம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
கடலைமாவு சேர்த்தும் குழம்பு வைத்ததில்லை. நூல்கோலும் வாங்கியதில்லை. முன்பு ஓரிருமுறை வாங்கியிருக்கிறோம். முள்ளங்கிக்கு சகோதரன் போல இருக்கும் என்று நினைக்கிறேன். நூல்கோலுக்கு பதில் அது கிடைக்காத பட்சத்தில் முள்ளங்கி போடலாமோ!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்கு/முள்ளங்கிக்கு சகோதரன் போல இருக்கும் என்று நினைக்கிறேன். /
ஹ ஹா ஹா. அதன் உறவு முறையை பொருத்தமாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இன்னொரு காய்கறியான சவ்சவ் (பெங்களூர் கத்திரிக்காய்) நூல்கோலின் பெங்களூர் சகோதரி தெரியுமோ .. :)) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம், ஆமாம் முள்ளங்கி சுவை கொஞ்சம் இருக்கும். எங்கப்பா நூல்கோல் வாங்கவே இல்லையே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். வாங்கிட்டா போச்சு என்று சொல்லியிருக்கேன்.
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நூல்கோல் குழம்பு செய்முறை அருமையாக உள்ளது. சேர்த்திருக்கும் மசாலா சாமான்கள் அனைத்தும் உடல் நலத்திற்கு ஏற்றவாறு இருக்கின்றன. நான் கசகசா மட்டும் அவ்வளவாக சேர்ப்பதில்லை. எங்கள் வீட்டில் என் கணவருக்கு மட்டும் மசாலா வாசனையே பிடிக்காது என்பதால். எங்களுக்காக முன்பு சப்பாத்திக்கு இந்த நூல்கோல் குருமா மாதிரி இந்த மசாலா சாமான்களை வைத்து செய்துள்ளேன். அதுபோல் கடலை மாவு மட்டும் கரைத்து சேர்த்து வெங்காய பாம்பே சட்னி செய்துள்ளேன். நீங்கள் தந்த குறிப்புகள் குறித்துக் கொண்டேன். ஒருதடவை நூல்கோல் வாங்கும் போது இவ்விதம் செய்து பார்க்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நூல்கோல் குழம்பு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகுருமா போல இருக்கிறது சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
கடலை மாவு சேர்க்க மாட்டேன். மற்றப்படி மற்ற காய்கறிகள் போட்டு செய்து இருக்கிறேன். நூல்கோல் போட்டது இல்லை. அடுத்த தடவை நூல் கோல் போட்டு செய்துப்பார்க்க வேண்டும்.
நூல்கோல் குழம்பு கிட்டத்தட்ட குருமா போல இல்லையா துரை அண்ணா. சப்பாத்திக்கு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. நூல்கோலை மற்றகாய்களுடன் சேர்த்து செய்ததுண்டு இப்படி
பதிலளிநீக்குநூல்கோல் மட்டும் போட்டுச் செய்ததில்லை. செய்து பார்த்தா போச்சு!
கீதா
நூல்கோல் குழம்பு நன்றாக உள்ளது .
பதிலளிநீக்குஇன்று எங்கள் சமையலில் நூல்கோல் கூட்டு.