நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 4
ஞாயிற்றுக்கிழமை
திருக்கோயில் நடை முறையில் ஏகபட்ட விஷயங்களை இழந்து விட்டோம்..
குறிப்பாக
நந்தவனத்தார், பூத்தொடுப்போர், ஓதுவார்மூர்த்திகள்,
வாத்தியக் கலைஞர்கள்..
முக்கியமாக மூன்று கால பூஜைகளிலும்
நாகஸ்வர இசையுடன் மேளம் முழங்குவது நின்றே போயிற்று..
இவை போதாதென்று
கோயில்களின் திருவிழாக் கால அறிவிப்புகள் அழைப்பிதழ்கள் கூட பாரம்பரிய முறையில் வருவது
இல்லை..
பாரம்பரிய மாதத்தின் நாள் நட்சத்திரங்கள் முகூர்த்த நேரங்கள் இவை அறிவிப்புகளில் குறிக்கப்படுகின்ற வழக்கமும் குறைந்து விட்டது..
நாளின் பொழுதையும் நட்சத்திரத்தையும் திதியையும் அடிப்படையாகக் கொண்டு தான் பூஜைகள் விழாக்கள் நடத்தப்படுகின்றன..
இவற்றை மறைப்பதால் யாருக்கென்ன பயன்?..
ஆனால் இதையெல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்
காணலாம்..
ஜனவரி பதினான்காம் தேதிக்கும் பொங்கலுக்கும்
என்ன சம்பந்தம்?..
ஜனவரி பதினான்காம் தேதி பொங்கல் தினத்தன்று - என்று தமிழ் நாட்டின் தோக்காக்களின் (தொ.காட்சி) செய்தி வாசிப்பில் சொன்னார்கள்..
ஜனவரி பொங்கல் என்று விளம்பர அமைப்புகளும் கவர்ச்சி காட்டி ஆடின..
தை முதல் நாள் தைப்பொங்கல் நாள் என்றெல்லாம் ஏன் இவர்கள் சொல்வதில்லை?..
தொல்லைக் காட்சியினருக்குத் தெரியாவிட்டால் தொலையட்டும்..
நம்மவர்களும் இப்படியே உளறித் திரிகின்றனர்..
இதேபோல தைப் பொங்கல் அன்று ஈவு இரக்கமின்றி
இங்கிலிபீசைக் கொண்டு வந்து ஒட்ட வைத்துக் கொள்கின்ற அநாகரிகமும் வளர்ச்சி அடைந்துள்ளது..
கூடுதல் தகவலாக கல்யாண பிரியாணி என்ற விளம்பரங்களுடன் எல்லா தரப்பினரும் இறைச்சிக் கடை திறக்கின்றனர்..
எதிர்காலத்தில் தைப் பொங்கல் - பிரியாணி தினம் என்று கூட மாற்றப்படலாம்.
இதற்கு ஏற்றார்போல
பொங்கல் தினத்தை ஒட்டி - இரண்டு மூன்று நாட்களுக்கு விருந்து என்ற பெயரில் பலவித உபசரிப்பு நடத்துவதில் இரு பாலரும் முனைப்பு காட்டி தீராப் பழிக்கு ஆளாகின்றனர்..
தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக சமர்ப்பிக்கபடும் பழங்கள் கூட
ஏவாரிகளின் விருப்பத்திற்கு மாற்றப்பட்டு விட்டன..
பாரம்பரிய பழங்கள்
எல்லாம் உடலுக்கு நல்லவையே.. நன்மை அளிப்பவையே..
ஆனால்,
இன்றைக்கு வெளிநாட்டுப் பழங்கள் தான் விற்பனை முன்னனியில்..
குளங்கள் அழிக்கப்பட்டதால் தாமரைப் பூவுக்கு பற்றாக்குறை..
வேளாண் நிலங்களில் பூந்தோட்டங்களும் குறைவு படுவதால் நல்ல மலர்கள் கிடைப்பதில்லை..
அவற்றுக்குப் பதிலாக வாசனையற்ற மலர்களே அர்ச்சனைத் தட்டில்..
துளசி போல அருமருந்தில்லை.. ஆனாலும் அதனிடம் ஈடுபாடு கொள்வோர் வெகு சிலரே..
பல் கூச்சத்தைப் பேசுகின்ற நிகழ்ச்சிகள் ஏராளம்.. ஆனால் பொது இடத்தில் சபைக் கூச்சம் பேசப்படுவதில்லை..
முடி உதிர்வதைப் பற்றிக் கவலை கொள்கின்ற இளைய தலைமுறையினர் உறவுகள் உதிர்ந்து போனதை உணர வில்லை..
கோயிலில் வழங்கப்படுகின்ற பஞ்சாமிர்தம் முதல் எலுமிச்சம் பழம் வரை எல்லாமே நன்மை அளிப்பவை...
ஆனால் எல்லாவற்றிலும் கலப்படம்.. ரசாயனம்..
தாம்பூலத் தட்டில் வைக்கப்படும் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பும் ஆரோக்கியமே..
மாரியம்மன் கோயில்களின் அடையாளங்களாகிய மஞ்சளும் வேம்பும்
காணிக்கையாக இடப்படுகின்ற மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.. பலர் கூடுகின்ற இடத்தின் கிருமி நாசினிகளே.
விழாக் காலங்களில் அலங்காரத் தோரணங்கள் ஆகின்ற வாழைகளும் மா இலைகளும் சில நாள் கழித்து உலர்ந்து சருகு ஆகுமே அன்றி அழுகும் தன்மை உடையவை அல்ல... தென்னை பனை ஓலைகளும் அப்படியே!..
அந்தப் பாரம்பரியங்கள் தொடர்கின்றனவா எனில் இல்லை..
ஏன் இப்படி?..
என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்..
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
நீங்கள் சொல்லி இருப்பவற்றைப் படிக்கும்போதே பகீரென்றுதான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? கையறு நிலை!
பதிலளிநீக்குஅறநிலையத்துறை அற அழிப்புத்துறையாக மாறி நான்கு வருடங்கள் ஆகின்றன. கோவிலில் பணியாளர்களைக் குறைத்து, சம்பளத்தை மிச்சமாக்கி அனைத்தையும் அடிக்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் ஆதங்கம் புரிகிறது.
பதிலளிநீக்குநாதஸ்வரம் எல்லாம் எங்கே ? எலெக்ட்ரிக் மணிச் சத்தம்தான் இப்பொழுது.
நல்லகாலம் விஷேட தினங்களில் பஞ்சாமிர்தம் இருக்கிறது இதுவும் எவ்வளவு காலத்துக்கு செய்வார்களோ,?
இறைவனுக்கு சாத்தும் அபிஷேகப் பொருட்கள் மாறாது இருந்தாலே போதும் என்ற நிலைதான்.