நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 14, 2025

அறம் நாலு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 2
வெள்ளிக்கிழமை


தனதானத் தனதான தனதானத் ... தனதான

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...
 குருவாகிப்

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...  தருவாயே

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் : -
( நன்றி கௌமாரம் )

மீண்டும் மீண்டும் 
இறவாமல் பிறவாமல் இருப்பதற்கு வரம் தந்து

என்னை ஆளுகின்ற சற்குருவாகவும்,

மற்றெல்லா வகையிலும் துணை ஆகி பெரு வாழ்வினையும், 
 
முக்தி எனும்  நிலையான 
வீட்டையும் தந்தருள்வாயாக.

குறமகளாகிய வள்ளி நாச்சியாரின் மணவாளனே,

குகனே புகழுடைய குமரேசனே 

அறம், பொருள், இன்பம், வீடு என்கின்ற நான்கினையும் உபதேசித்து அருள்பவனே,

அவிநாசிப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே..
**

உலக வாழ்வினுக்கான
அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினையும் தந்து இவற்றின் வழி நிற்போர் தமக்கு வீடு பேறு எனும் முக்தியினையும் அருள்பவன் முருகப் பெருமான் என்பதை இத்திருப்புகழ் பாடலின் வழியாக நமக்கு உணர்த்துகின்றார் அருணகிரியார்..

முருகா முருகா..
முருகா முருகா..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. ஓம் முருகா... முருகா... முருகா...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    முருகப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. அவிநாசிப் பெருமாளே சரணம்.
    அனைவர் நலனையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..