நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை நான்காம்
வெள்ளிக்கிழமை
வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும் மருந்தினுக்கா
வேண்டினும் மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொல்லாமலும்
தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும் வீண்
வம்பு புரியாமலும் மிக்க பெரியோர்கள் சொலும்
வார்த்தை தள்ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத் தமியேனுக்கு
அருள் புரிந்து சர்வ காலமும் எனைக் காத்தருள வேண்டினேன் சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே..
எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்
அவர்கள் கேட்டு இவ் இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி
நன்மைகள் செயவும் எள் அளவும் முடியாது நின்
உனதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின் உதவாத
நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை யாகும்
அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து
முப்பத்திரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும்
நின்னைக் கருது நல்லடியவர்க்கு எளி வந்து சடுதியில்
காத்து ரட்சித்து ஓர்ந்து
வனச நிகர் நின் பாதம் நம்பினேன் வந்தருள் செய்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே..
சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை
மா தேவி நின்னைச் சத்யமாய் நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி
துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த
வாழ்வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அநு கூலி
திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக் கொணாதோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே..
அபிராமவல்லி போற்றி போற்றி..
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
என்ன ஒரு தமிழ்... அம்மையின்மேல் என்ன ஒரு நம்பிக்கை...
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்... அபிராமி அம்மா பாதம் பணிந்தேன்.
ஓம் சக்தி
பதிலளிநீக்குவாழ்க வையகம்
அபிராமவல்லி போற்றி போற்றி! அம்மன் பாடலை பாடி அபிராமி அம்மையை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குதிருக்கடவூர் அபிராமி அன்னையை வணங்கிக் கொண்டோம்.
பதிலளிநீக்குஅன்னை எம்மையும் காக்க வேண்டி நிற்போம்.
ஓம் சக்தி ஓம்...
பதிலளிநீக்கு