நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 02, 2023

தஞ்சை தேர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
திங்கட்கிழமை

நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் 
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அல்லியங்கோதை உடனுறை தியாகராஜர், ஸ்ரீ நீலோத்பலாம்பாள், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனாகிய சுப்ரமணிய ஸ்வாமி, ஸ்ரீ சண்டிகேசர் யதாஸ்தானத்தில் இருந்து முத்துமணி அலங்கார சப்பரத்தில்  கோயிலில் இருந்து, மேல ராஜ வீதியில் உள்ள தேர்நிலைக்கு எழுந்தருளினர்.. 

காலை ஏழு மணியளவில் ஆரூரா.. தியாகேசா.. என்ற முழக்கத்துடன் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது..

சிவநேசச் செல்வர்களாகிய அன்பர்கள் ராஜ வீதிகளின் பல்வேறு இடங்களிலும் - பந்தல் அமைத்து - நீரும் மோரும் பானகமும் விசிறிகளும் வழங்கி மகிழ்ந்தனர்..

ராஜவீதிகளின் பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது....






















மேல ராஜவீதியில் ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயிலின் அருகில் தேர் நிலை  நின்றிருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.. 

சென்ற வருடத்தை விட இவ்வருடம்  அதிகமான கூட்டம்.. 

கடும் நெரிசலில் கசப்பான நிமிடங்களும்  அமைந்து விட்டன.. உடல் நலக் குறைவுடையோரும் இருப்பார்களே என்ற எண்ணம் இல்லாதவர்களால் ஏற்பட்ட பிரச்னை..

இந்த அளவில் தரிசனம் பெரும் பாக்கியம்..

அடுத்த ஆண்டு கூடுதல் உடல் நலத்துடன் தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்கு பெருவுடையார் அருள்புரிவாராக!..

பதிவின் பகுதி இரண்டு

படங்கள் காணொளி
நன்றி: நம்ம தஞ்சாவூர்














இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

23 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தேர் உலா காட்சிகள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  2. ஆண்டவனின் அருள்வலத்தை அழகான புகைபபடங்கள் வாயிலாக தரிசித்ததில் சந்தோஷம்.  ஏன் உங்கள் உடல்நலம் இன்னும் சரியாகவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் உடல் நிலை மெதுவாக சீரடைந்து கொண்டு இருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்.. ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  3. பானகமும் நீர்மோரும் நான் முதன்முதலில் சுவைத்தது நாகப்பட்டினம் கோடைத் திருவிழாவில்.  அங்கு ஏதோ அம்மன் கோவில் வருடாந்திர உற்சவம் என்று நினைவு.  எனது அம்மப்பா, அம்மம்மா, மாமாக்கள் இருந்த ஊர் நாகை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மப்பா, அம்மம்மா..... எல்லாம் இலங்கை வானொலியின் தாக்கம். அவங்க நம்மைவி நல்ல தமிழ் பேசுவாங்க

      நீக்கு
    2. எந்த தாத்தா பாட்டி என்று சுருக்கமாக புரிய வைக்கத்தான்!

      நீக்கு
    3. நான் கேட்க இருந்ததை நெல்லை அவர்கள் கேட்டு விட்டார்..

      நம்மிடையே உறவு முறைகளுக்கு பெயர் இல்லையா!..

      எது எப்படியோ நாம் அவற்றை விட்டு விட்டோம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  4. இனிய தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  5. திருத்தேர் காட்சிகள் மிக அருமை.

    உங்களுக்கு இந்த வருடம் தரிசனத்திற்குக் கொடுத்துவைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்த வருடம் தரிசனத்திற்குக் கொடுத்துவைத்திருக்கிறது.//

      தங்களது கருத்து உண்மையே...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  6. காணொளி முக நன்று.

    ஓம் நமசிவாய கோஷத்தை ஹர ஹர மஹாதேவா பிடித்துக்கொண்டுவிட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர் இழுக்கப்படும் போது ஆரூரா.. தியாகேசா.. என்று தான் முழக்கமிட்டார்கள்..

      காணொளி தயாரித்தவர்கள் வேறு இசை சேர்த்திருக்கலாம்..

      மகிழ்ச்சி.. நன்றி..
      ஓம் நம சிவாய..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தேர்த் திருவிழா படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. முதல் தேர் காட்சிகள் திருவாரூரா ? அம்மையப்பன், பிள்ளையார், முருகர் என அனைவரையும் அவரவர்கள் தேர்களோடு தரிசித்துக் கொண்டேன்.

    முதல் படம் அக்கோவிலின் கோபுர தரிசனம் கிடைக்கப் பெற்றேன். தேரின் மரசிற்ப வேலைப்பாடுகள் படம் மிகவும் அழகாக உள்ளது.

    இரண்டாவது தஞ்சை பெருவுடையார் கோவிலின் தேர்த் திருவிழா படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளது. எவ்வளவு கூட்டம்? மக்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வருவது கண் கொள்ளா காட்சி.

    /இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி உள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே/

    பாடலைப் பாடி இறைவனையும், இறைவியையும் கண்ணாற கண்டு தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவில் உள்ளவை அனைத்தும் தஞ்சையில் நடந்த திருவிழா படங்கள்..

      //மக்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வருவது கண் கொள்ளா காட்சி.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இரு கோவில்களின் தேர்த் திருவிழா படங்கள் ஒவ்வொன்றையும் பெரிதாக்கி பார்த்து ரசித்தேன். ஓடும் தேரை பார்த்தால் மிகவும் நல்லதென்பார். காணொளியில் அந்த காட்சியையும் கண்டு அகமகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இரு கோயில்களின் தேர்த் திருவிழா படங்கள் அல்ல..

    தஞ்சையில் நடந்த தேர்த் திருவிழா..

    நான் இன்னும் விளக்கமாகச் சொல்லியிருக்கலாமோ!..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
  10. தேர் திருவிழா படங்கள் எல்லாம் அருமை.

    காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      ஓம் நம சிவாய..

      நீக்கு
  11. நானும் பார்த்தேன் என்றாலும் இங்கே தஞ்சையிலும் எப்படித் தியாகராஜர்? அதான் புரியலை. ஒரு வேளை உற்சவர் ஆரூரில் இருந்து கொண்டு வந்தார்களா? ஆரூரா, தியாகேசா என்றே கோஷங்கள் எழுந்தன. தஞ்சைப் பெருவுடையாருக்கு எனத் தனியாக உற்சவர் இல்லையோ?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..