நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 06, 2023

அரங்கன் உலா

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 23
 சனிக்கிழமை


திரு அரங்கத்தில்
சித்திரைப் பெருவிழாவில் 
அரங்கனின் திருக்காட்சி..

காணொளிக்கு நன்றி
Gift of Srirangam


அரங்கத் திருநகர் அணியமுதன்
அடியவர்க்கென்றே  வருகின்றான்..
குளிர் நிழல் இருந்து அருள்கின்றான்..
குளிரக் குளிர பணிமின்கள்..

குறைகள் அனைத்தும் அவன் அறிவான்..
குன்றா நலனும் அவன் தருவான்..
கோவிந்த ஹரி ஹரி நாராயணா
கோவிந்த ஹரி ஹரி நாராயணா..

திருமா மகளும் உடன் இருக்க
திருவருள் புரியும் திரு அரங்கா
நாளும் பொழுதும் நலம் கொண்டு
நானிலம் வாழ்ந்திட அருள்வாயே..


கற்பக விருட்சத்துக் கார் முகிலே
கழலிணை பணிந்தேன் ஆரமுதே
அற்புதம் அருளும் மணி வண்ணா
அடியவன் சரணம் நாரணனே..
***

பதிவின் பகுதி இரண்டு

அழகர் உலா

ஸ்ரீ கள்ளழகர் மண்டூக மகரிஷியின் 
பொருட்டு
வைகையில் இறங்கிய
கோலாகலம்..

படங்கள்
 காணொளி
நன்றி 
 ஸ்டாலின் Photography
 மதுரை
















ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய,.
***

7 கருத்துகள்:

  1. திருவிழா காட்சிகள் கண்முன்னே.  சற்று நேரம் நான் மதுரையில் இருந்தேன்!

    பதிலளிநீக்கு
  2. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. சித்திரை பெருவிழா கண்டு வணங்கினோம். காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கள்ளழகர் வைகையில் இறங்கிய வைபவ தரிசனம் கண்டு கொண்டேன். அழகான அழகரை கண் குளிர கண்டு கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீரங்கத்தில் சித்திரைத்திருவிழா தேர் நிகழ்வோடு முடிந்து விட்டது. நேற்றுச் சித்ரா பௌர்ணமிக்குக் கஜேந்திர மோக்ஷம். நம்பெருமாள் அம்மாமண்டபம் வருவார். மாலை வரை அங்கே தான் இருப்பார். நேற்று என்னவோ தெரியலை. சுத்தமா அந்த நினைப்பே வரலை. பெருமாள் பக்கத்து வீட்டு மண்டகப்படிக்கு வந்தும் போய்ப் பார்க்கவே இல்லை. பெருமாள் நினைவே இல்லாமல் போனது எப்படி? இதுவும் அவன் விளையாடலே என நினைத்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீரங்கம், மதுரை சித்திரை திருவிழா காணொளிகள், உங்கள் கவிதை , மற்றும் விழா படங்கள் எல்லாம் மிக அருமை.
    தரிசனம் செய்தேன், நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..