நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 07, 2023

சப்த ஸ்தானம் 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 24
 ஞாயிற்றுக்கிழமை

சித்திரை விசாகம் ஆகிய நேற்று (சனிக்கிழமை) காலை ஆறு மணியளவில் திரு ஐயாற்றில் இருந்து ஸ்ரீ அரம் வளர்த்த நாயகியுடன் ஸ்ரீ ஐயாறப்பரும் ஸ்ரீ சுயம்பிரகாஷிணி தேவியுடன் ஸ்ரீ நந்தியம் பெருமானும் ஆறு தலங்களை வலம் வருகின்ற வைபவமாக ஏழூர் பல்லக்கு விழா தொடங்கியது..

நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல்லக்குகளுடன் புறப்பட்டு ( முன்னதாகவே) திருநெய்த்தானம் வரை எல்லா தலங்களையும் தரிசித்து வேண்டுதலை நிறைவு செய்தனர்..

மாலை ஆறு மணியளவில் மழை பிடித்துக் கொண்டதால் திருச்சோற்றுத் துறையிலேயே பல்லக்குகள் தங்கியிருப்பதாக திருவேதிகுடியில் அறிந்தோம்..

அந்த அளவில் மழையின் ஊடாகவே தஞ்சைக்குத் திரும்பியாயிற்று.. 

நாளை  திருநெய்த்தானத்தில் எல்லா பல்லக்குகளையும் தரிசிக்க இறைவன் நல்லருள் கூட்ட வேண்டும்..

படங்களுக்கு நன்றி
தருமபுரம் ஆதீனம்,
சிவகணங்கள்
திருவையாறு..













பதிவின் பகுதி இரண்டு

திருக்கண்டியூர் மற்றும் திருவேதிகுடியில் அடியேன் எடுத்த படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன..

திருக்கண்டியூர்







திருவேதிகுடி






ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் மிக அருமை.
    திருவையாறு படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன் அழகான படங்கள்.
    , திருக்கண்டியூர் ,திரு வேதிகுடி தரிசனம் கிடைத்தது
    நீங்கள் எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் யாவும் சிறப்பு. நல்ல தரிசனம். மழை மண்ணையும், மனதையும் குளிரச்செய்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. தரிசனம் நன்று
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. திருவையாறு எம்பெருமானை படத்தின் வாயுக் லாக தரிசித்து பக்தியோடு வணங்கி கொண்டேன். தாங்கள் எடுத்த படங்களும் அழகாக இருக்கிறது. இன்று இறை தரிசனங்கள் சிறப்பாக கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் மிக நன்று. உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது.

    நான் திருக்கண்டியூருக்குச் செல்லும்போது சிவன் கோவிலையும் தரிசனம் செய்யணும் என்று நினைத்துக்கொள்வேன். வேளை வரவில்லை.

    பதிலளிநீக்கு
  6. அருமையான படங்கள். நேற்றே நினைத்துக்கொண்டேன், சப்தஸ்தானப் பல்லக்குகளின் படங்களைப் பகிர்வீர்கள் என. அநேகமாக எல்லாக் கோயில்களுக்கும் போயிருந்தாலும் சப்தஸ்தானத்தின் போதெல்லாம் போகும் அளவுக்கு உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. கூட்டத்தில் தாங்காது. :( இங்கே உங்கள் மூலமாகப் பார்த்து வணங்கிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..