நெல்லைத் தமிழன்
பயணக்குறிப்புகள்
ஃஃஃ
ஃஃஃ
கீழைப்பழையாறைக் கோயில்
பஞ்சவன் மாதேவி என்று அழைக்கப்பட்ட பழுவேட்டரையர் பரம்பரையைச் சேர்ந்த பெண். ராஜராஜ சோழனின் மனைவியருள் ஒருவர். அவர் ராஜராஜ சோழனின் அன்பைப் பெற்றவள். ராஜராஜ சோழனின் பட்டத்து இளவரசனான ராஜேந்திர சோழனுக்கு அவள் உதவிகள் செய்திருக்கவேண்டும்.
இளவரசனுக்கும் அரசருக்கும் இடையே பாலம் அமைத்திருக்கலாம். அரசரை உடனடியாக அணுகி அரசியல் பேசும் இடத்தில் இருந்ததால், அரசியல் பிரச்சனைகள் இருவருக்குமிடையே எழுந்துவிடாமல் ராஜேந்திரனை அரவணைத்திருக்கலாம்.
அதனால்தானோ என்னவோ பஞ்சவன் மாதேவி இறந்த பின்னர், அவருக்கு பள்ளிப்படை ராஜேந்திர சோழன் அமைத்திருக்கிறான். இதைத் தவிர, ராஜேந்திர சோழனுக்கு போட்டி வந்துவிடக்கூடாது என்பதற்காக அவள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதெல்லாம் எனக்கு நம்பும்படியாகத் தோன்றவில்லை.
இளவரசனுக்கும் அரசருக்கும் இடையே பாலம் அமைத்திருக்கலாம். அரசரை உடனடியாக அணுகி அரசியல் பேசும் இடத்தில் இருந்ததால், அரசியல் பிரச்சனைகள் இருவருக்குமிடையே எழுந்துவிடாமல் ராஜேந்திரனை அரவணைத்திருக்கலாம்.
அதனால்தானோ என்னவோ பஞ்சவன் மாதேவி இறந்த பின்னர், அவருக்கு பள்ளிப்படை ராஜேந்திர சோழன் அமைத்திருக்கிறான். இதைத் தவிர, ராஜேந்திர சோழனுக்கு போட்டி வந்துவிடக்கூடாது என்பதற்காக அவள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதெல்லாம் எனக்கு நம்பும்படியாகத் தோன்றவில்லை.
ராஜராஜ சோழன், அருண்மொழித் தேவனாக (பட்டத்துக்கு வருவதற்கு முன்பு) இருந்தபோதும், அரசனாக ஆனபோதும், அவனை அவனது தமக்கையார் (அக்கா) குந்தவை தேவியார் வழிநடத்தினார் என்பதைப் பற்றி நாம் படித்திருப்போம். அரசியலில், தன் முக்கியத்துவம் குறையக்கூடாது என்று அவர் நினைத்திருந்தால்? அதற்காக ராஜேந்திர சோழனையும் தன் கைப்பிடிக்குள் இறுக்கிக்கொள்ள நினைத்திருந்தால்?..
அத்தை குந்தவை நாச்சியாரால் பிரச்சனைகள் தனக்கு வந்து, அதனை பஞ்சவன் மாதேவியார் எப்போதும் தீர்த்திருந்தால்… அரச குடும்பத்தில் அரசியல் இல்லாமல் இருக்குமா? இந்த மாதிரி சிந்தனைகளை வைத்தே பல கதைகள் புனையலாம்.
அத்தை குந்தவை நாச்சியாரால் பிரச்சனைகள் தனக்கு வந்து, அதனை பஞ்சவன் மாதேவியார் எப்போதும் தீர்த்திருந்தால்… அரச குடும்பத்தில் அரசியல் இல்லாமல் இருக்குமா? இந்த மாதிரி சிந்தனைகளை வைத்தே பல கதைகள் புனையலாம்.
எனக்கும் ராஜராஜ சோழன் குடும்பத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதும் எண்ணம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. விரைவில் அதை எழுதிய பின்னர், அதன் பின்னணியைப் பற்றித் தெரிவிக்கிறேன்.
நம்ம முகலாயர்களின் உணவுப் பழக்கம்லாம் நீங்களும் படித்திருப்பீர்கள். எப்படிப்பட்ட செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்ஸ் இருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு ஐட்டமும் செய்த பிறகு அந்த ஐட்டத்தைச் சரிபார்த்து (சாப்பிட்டுப்பார்த்து) அதற்குரிய பாத்திரத்தில் இட்டு சீலிட்டு அடுத்த கட்டுக்குச் சென்று அங்கும் இன்னொரு சீலிட்டு பிறகு உணவு மேசை வரத் தயாரா இருக்கும், அரசர் சாப்பிடுவதற்கு முன்பு அதனை சாப்பிடும் அதிகாரியும் உண்டு. உணவில் பிரச்சனை ஏற்பட்டால், அந்த முழு chainம் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் (ஆகியிருக்கிறார்கள்).
இது மாதிரித்தானே ராஜராஜன் காலத்திலும் இருந்திருக்கும்... அப்போ மகனுக்கும் தகப்பனுக்கும், அவரவர் பதவிகளினால் பிரச்சனை வந்திருக்கும்தானே. இடையில் உறவுகளும் சிண்டு முடிந்திருக்கும்தானே.
சரி… இடுகை எங்கேயோ போகிறது. திரும்ப ‘பள்ளிப்படை’க்கு வருவோம்.
6 வாரங்களுக்கு முன்பு கும்பகோணம் சென்றிருந்தபோது பல வைணவத் தலங்களையும் இடையில் வருகின்ற புராதனமான சிவ தலங்களையும் தரிசித்தேன். தஞ்சை ராஜராஜேச்வரம், பிறகு அரண்மனை ஆகியவைகளைப் பார்த்த பிறகு 4 மணிக்கு, கும்பகோணம் திரும்பும் வழியில் பட்டீச்வரம் கோவிலைத் தரிசித்தேன். இது பற்றி தனியே எழுதுகிறேன். பிறகு கார் ஓட்டுநரிடம், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பார்க்கணும் என்றேன். அதற்கு அவர், அடுத்த வைணவக் கோயில் அருகில்தான் அது இருக்கிறது என்று சொல்லி என்னை கீழ்ப்பழையாறைக்குக் கூட்டிச் சென்றார்.
நாங்கள் அன்று 4 வைணவக் கோவில்களையும் ஒரு சிவாலயத்தையும் தரிசிக்கவேண்டியது பாக்கி இருந்தது. வைணவக் கோயில்களில் முக்கியமான திருவெள்ளியங்குடி என்ற தலம் மாலை 6.30க்கு நடை சாத்தப்பட்டுவிடும். அதற்கு முன்பு 4 கோவில்கள் (நாதன் கோவில், திருவிண்ணகரம், திருவிடைமருதூர் மற்றும் சேந்தனூர் ஆகியவை)
சிதிலமடைந்துள்ள ராஜகோபுரம் |
யாருமே இல்லை.
வெகு வயதான பெண்மணி மெதுவாக கோயிலின் கருவறையில் சிவலிங்கத்திற்கு விளக்கேற்றிக்கொண்டிருந்தார். அவரை அழைத்து (எங்கள் மரபு, கோயில் கருவறைக்குள், அதற்கு முந்தைய மண்டபத்துக்குள் யாரும் இல்லாமல் செல்லக்கூடாது. அதற்குரியவர்கள் இருந்து அழைத்தால் மட்டுமே செல்லணும். அது இறைவன் இருக்கும் இடம்), இதுதானா ‘பஞ்சவன் மாதேவி’ பள்ளிப்படை என்று கேட்டேன். அதற்கு அவர், இது இல்லை. ஆனால் இந்தக் கோவிலும் சோழ மன்னர் பரம்பரைதான் கட்டி, பராமரித்தனர் என்றார். என் ஆர்வம் வடிந்துவிட்டது. மண்டபத்திலிருந்து கீழ் இறங்கினேன்.
இறங்கிய பிறகு கோயிலின் அர்ச்சகர் நுழைவுவாயில் வழியாக வந்தார். அவர், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பட்டீஸ்வரம் கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் மசூதி தெருவில் இருக்கிறது என்றார். ஓட்டுநரோ, இன்னும் நிறைய வைணவத் தலங்களுக்கு நாங்கள் செல்லவேண்டி இருந்ததால் அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம். பட்டீச்வரம் திரும்பப் போகணும் என்றால் மற்ற கோவில்களில் தரிசனம் கஷ்டமாயிடும் என்றார், எனக்கு அது ஏமாற்றம்தான். பிறகு நாங்கள், இந்தக் கோயிலின் எதிர்ச் சாலையில் நுழைந்து வைணவக் கோயிலான திருநந்திபுர விண்ணகரம் (ஜெகன்னாதப் பெருமாள்) சென்றோம்.
அதனால் அந்த முறை பள்ளிப்படையைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, நான் சென்ற கோவில், பாடல் பெற்ற தலம் என்பதும் எனக்கு அப்போது தெரியாததாலும், அவசரத்தாலும் ஈசனை விளக்கொளியில் ஒருமித்த மனத்தோடு தரிசிக்கும் வாய்ப்பை இழந்தேன்.
இந்தத் தலத்தின் ஈசன், சோமேசர். அம்பாள், சோம கலாம்பிகை..
அப்பர், இந்தத் தலத்து ஈசனைப் பாடியது 5ம் திருமுறையில் உள்ளது.
அப்பர், இந்தத் தலத்து ஈசனைப் பாடியது 5ம் திருமுறையில் உள்ளது.
தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலியினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே
அலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே..
பொருள்: தலைமுடியைப் பறித்துக்கொண்டு மழுங்கிய தலையராக உள்ள சமணர்கள் நினைத்தாலும் இறைவனின் பேரொளியை மறைக்க இயலுமா? பொழில்கள் சூழ்ந்த பழையாறையின் இறைவனின் திருவடிகளை நினைந்து உய்வீர்களாகுக..
நிலியினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே
அலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே..
பொருள்: தலைமுடியைப் பறித்துக்கொண்டு மழுங்கிய தலையராக உள்ள சமணர்கள் நினைத்தாலும் இறைவனின் பேரொளியை மறைக்க இயலுமா? பொழில்கள் சூழ்ந்த பழையாறையின் இறைவனின் திருவடிகளை நினைந்து உய்வீர்களாகுக..
இதில் நாம கவனிக்கவேண்டியது, அப்பரின் காலம் 7ம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட அதே சமயத்தில், இந்தக் கோவிலின் வெகு அருகிலேயே திருமங்கை ஆழ்வார் பாடிய வைணவ திவ்யதேசக் கோயிலும் இருந்திருக்கிறது. சைவமும் வைணவமும் அந்தக் காலகட்டத்தில் தழைத்தோங்கியிருந்திருக்கிறது.
ஃஃஃ
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..
பார்க்கலாம் கூடிய விரைவில்!...
நலம் வாழ்க..
ஃஃஃ
நலம் வாழ்க..
ஃஃஃ
குட்மார்னிங். படங்கள் அற்புதம். நான் சென்றவருடம் ஒரு அவசர ஓட்டத்தில் பட்டீஸ்வரம் சென்றேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம்...
நீக்குபட்டீஸ்வரத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயம்... துர்க்கை அம்மன் சிலை, சோழர் கோவில்களில் இருப்பது மரபு. சில துர்க்கை சிலைகளை, கோவில் சன்னிதி என்பதுபோல் மாற்றிவிட்டார்கள். பட்டீஸ்வரம், தேனுபுரீஸ்வரர் கோவில்தான். அதில் இப்போது துர்க்கை சன்னிதியாக்கி அதனையே தனிக் கோவில்போல் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் படித்திருக்கிறேன்.
அது சரி... பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரரைச் சேவித்தீர்களோ?
பள்ளிப்படை பார்க்காத ஏமாற்றம் எங்களையும் தாக்குகிறது. முறையாக கேமிராவில் எடுக்கப்படும் படங்களுக்கு அழகே தனி.
பதிலளிநீக்குபார்க்கணும்னு மனதில் தோன்றிவிட்டால், அதற்கேற்ற வாய்ப்பு தானாகவே அமைந்துவிடும். இது இயற்கை. அதனால்தான் 'குரு எனக்கு வேணும்' என்று ஒருவன் மனதில் தீர்மானித்துத் தேடினால் தானாகவே ஒரு குரு அவனை நல்வழிப்படுத்த அமைவார் என்று சொல்கிறார்கள்.
நீக்குபள்ளிப்படையைப் பார்த்துவிட்டேன். அதுபற்றி விரைவில்.
படங்களும் , வரலாறும் அருமை.
பதிலளிநீக்குராஜராஜன், சுந்தர சோழர், ஆதித்த சோழன் எல்லோருக்கும் பிரச்சனைகள் இருந்து இருக்கு தானே!
அரசபதவி என்பது மலர் கிரீடம் இல்லை, முள் கிரீடமாக உறுத்தியும் இருக்கும்.
வாங்க கோமதி அரசு மேடம்.... கொஞ்சம் நாம யோசிச்சோம்னா, எல்லோருக்கும் வாழ்க்கை என்பது ஓரளவு சமமானதே என்று தோன்றும். எல்லோருக்கும் அவரவர் நிலையில் பல்வேறு கஷ்டங்கள், வருத்தங்கள், அப்போ அப்போ சுகங்கள் என்று வாழ்க்கை ஓடுகிறது.
நீக்குநான் சில, 'மடங்களில் தலைவர்களை'ப் பார்க்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. அவர்களுக்கும் எவ்வளவு கடினமான வேலை அது என்பதை நாம் பார்த்தால்தான் தெரியும்.
இரண்டு குழந்தைகளைப் (அதற்கு மேலேயோ) பெற்றவர்கள் நிச்சயம் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை அனுபவிப்பார்கள் (இருவரும் அவரவர் வசதியில் வித்தியாசமாக இருப்பார்கள், அவர்கள் குடும்பக் கஷ்டம்...). இதுக்காக ஒரே ஒரு குழந்தையைப் பெற்றவர்களும் சுகமாக இருந்துவிட முடியாது... நன்றி.
நீங்கள் சொல்வது சரி.
நீக்குஎல்லோருக்கும் அவரவர் நிலையில் பல்வேறு கஷ்டங்கள் வருத்தங்கள் எல்லாம் உண்டு. அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், அப்போ அப்போ கிடைக்கும் சந்தோஷங்களை அனுபவித்து வாழ்க்கை ஓடுகிறது.
வாழ்க்கை ஓட வேண்டும் ஓட வில்லை என்றால் கஷ்டம்.
மடத்து தலைமை மிகவும் கஷ்டம் தான் மடத்தின் சொத்துக்களை பரிபாலிக்க வேண்டும்,
அதை ஆக்கபூவமாக செலவழிக்க வேண்டும். அவர்கள் பொறுப்பில் உள்ள கோவிலகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அனைத்தையும்
கவனிக்கும் பொறுப்பு இருக்கே!
எல்லாம் துறந்தும் கடமையை துறக்க முடியாது.
தாயுக்கு ஒரு குழந்தை வசதியாக ஒரு குழந்தை கஷ்டபடுவது துன்பம் தான்.
நீங்கள் நன்றாக வாழ்வியலை புரிந்து வைத்து இருக்கிறீர்கள்.
உடையார் நாவலில் ராஜேந்திர சோழனை முந்நிலை படுத்தி இருப்பார் இல்லையா பாலகுமரன். படிக்க வில்லை இன்னும் படிக்க வேண்டும். மனசு குமார் உடையார் நாவலைப் பற்றி விமர்சனம் செய்து இருந்தார்.
பதிலளிநீக்குஉடையார் நாவல், ராஜ ராஜ சோழனை (அருண்மொழித் தேவன்) முன்னிலைப் படுத்தும் நாவல். பாலகுமாரனே கங்கைகொண்ட சோழன் (ராஜேந்திரன்) பற்றியும் நாவல் எழுதியிருக்கிறார்.
நீக்குஎனக்கு சந்தர்ப்பவசமாக உடையார் மின்னூல் கிடைத்தது.
சிதிலமடைந்த ராஜகோபுரம் மனதை வருத்தமடைய செய்கிறது.
பதிலளிநீக்குபாடல்பெற்ற தலங்களை எல்லாம் பார்த்து விட்டோம் மாயவரத்தில் இருக்கும் போது. அதனால் இந்த கோவிலையும் பார்த்து இருப்பேன் நினைவில் இல்லை.
நாதன் கோவில் (நந்திபுர விண்ணகரம்) வைணவக் கோவிலைப் பார்த்திருந்தீர்கள் என்றால் இதனைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது.
நீக்குசோழ அரசர்கள் நிறைய திருப்பணிகளை ஆரம்பித்து, போர்ச் சூழலால் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனாலும் கோபுரம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
பழையாரையை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் சகோ.
பதிலளிநீக்குஅவன் அருளால் அவன் தாள் வணங்கும் நாள் வரும்.
கும்பகோணம் அருகிலுள்ள எல்லா சிவன் கோவிலையும் விஷ்ணு கோவிலையும் தரிசிக்கச் சந்தர்ப்பம் வரும்.
நீக்குகடைசி கேள்வி துரை செல்வாராஜூ அவர்கள் கேள்வி தானே ?
நீக்குஅதற்கு தான் நான் கூடிய விரைவில் பார்ப்பீர்கள் சகோ என்று போட்டேன் நெல்லை.
கும்பகோணம் அருகிலுள்ள சிவன், விஷ்ணு கோவில் போய் வந்து விட்டோம்.
எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வரும் போது அவர்களையும் அழைத்து போய் காட்டி விடுவோம்.
குழந்தைகளை தூக்கிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளையும் தூக்கிக் கொண்டு தலங்களை தரிசனம் செய்து இருக்கிறோம். அந்த காலத்தில் , சைக்கிளில் இரண்டு பேரும் சென்று இருக்கிறோம் , அப்புறம் காரில் பயணம் இறைவன் அருளால்.
இப்போது கூட்டம் இல்லாத இடம், போக்குவரத்து குறைவாக பார்க் செய்ய வசதி உள்ள இடங்களுக்கு மட்டுமே சார் கார் ஓட்டுவார்கள். மற்ற இடங்களுக்கு ஓலோ ஆட்டோ, டாக்ஸி.
நீங்கள் சொல்வது போல் இப்போது வசதி வாய்ப்புகள் வந்த பின் கோவில் தரிசனம் எளிதாகி விட்டது, நேரமும், பணமும், மனவலிமை, உடல் தெம்பு இவைகளுடன் இறைவன் அருளும் இருந்தால் எல்லோருக்கும் எல்லாம் சாத்தியம் ஆகும்.
முன்பு என் கணவரிடம் காமிரா கிடையாது கோவிலை மனதால் பார்த்து அதனை வீட்டில் வந்து வரைந்து வைப்பார்கள். சிவதலங்கள் எத்தனை பார்த்து இருக்கிறோம், திவ்யதேசம் எத்தனைப் பார்த்து இருக்கிறோம் என்று எழுதி வைத்து இருப்பார்கள்.
யார் யாருடன் எத்தனை தடவை அந்த கோவிலை பார்த்து இருக்கிறோம் என்று எழுதி வைத்து இருப்பார்கள்.
அவர்கள் அண்ணா இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியாக இருக்கும் ஊர்களுக்கு சென்று மாலை மரியாதையுடன் சில கோவில்கள் பார்த்து இருக்கிறோம்.
தனியாக போனால் அண்ணன் பேரை சொல்லி போக மாட்டார்கள் அவர்கள் வந்தால் மட்டுமே. சலுகைகளை ஏற்க வெட்கபடுவார்கள்.
அத்தை கேட்பார்கள் மன்னார்குடிக்கா போனாய் அண்ணன் பேரை சொன்னால் சிறப்பு தரிசனம் செய்யலாமே ! என்று.
கால்வலி மருந்து சொல்லி இருக்கிறேன் என் பதிவில் .
நீக்குநீங்கள் கேட்டீர்கள் அல்லவா கால்வலி மருந்து.
மீரா பாலாஜியின் குறிப்பு, எனக்கு டாக்டர் சொன்ன குறிப்பு,
எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் செய்தி இவை இருக்கிறது.
கோமதி அரசு மேடம்... எனக்கும் சில சமயம் சிறப்பு தரிசனம் வாய்த்திருக்கிறது. இருந்தாலும் எனக்கு அப்படிப்பட்ட சமயங்களில் மன நிறைவு குறைவுதான். ஆனால், இறைவன் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கான் என்று நினைத்து சமாதானப்பட்டுக்கொள்வேன்.
நீக்குஇந்த மாதிரி அதிகாரிகள் தொடர்பு இருக்குமானால், அதனை நான் தெய்வ தரிசனத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டேன். நாம என்ன வேறு சலுகைகளா கேட்கிறோம், தெய்வதரிசனம்தானே செய்யப்போகிறோம்.
கோபுரம் மனதை வருத்தியது. கடைசியில் பழையாறை பள்ளிப்படை போகவில்லையா? நாங்க இன்னமும் பழையாறையே போகவில்லை. நந்திபுர விண்ணகரம் போகணும்னு நினைச்சுப் போக முடியாமலே இருக்கு. பார்ப்போம். படங்களும் தகவல்களும் சிறப்பாக உள்ளது. ஆனால் நீங்க சென்ற அவசரத்தைப் போலவே அவசரமா எழுதினாப்போல் ஓர் நினைப்பு. :)
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம்... எல்லாம் போய்விட்டேன்.
நீக்குசுலபமான வேலை, கும்பகோணத்தில் தங்கி, கார் (3000 ரூ) அல்லது ஆட்டோ (2000 ரூ) எடுத்துக்கொண்டு போனால், ஒரு நாளில் 15 கோவில்களை நாம் கவர் பண்ணிவிட முடியும்.
அவசரமா எழுதலை. நான் எழுத வந்தது பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை. அதை நோக்கிய எழுத்து இது.
பட்டீஸ்வரம் பக்கத்திலேயே இருக்கும் திருசத்திமுற்றத்துத் தழுவக்குழைந்த நாயகியைத் தரிசிக்காமல் வந்துட்டீங்களே!
நீக்கு"நாராய், நாராய், செங்கால் நாராய்" பாடின சத்திமுற்றப்புலவர் இந்த ஊர் தான்!
அங்கேயே பெருமாள் கோவிலும் இருக்குன்னு நினைக்கிறேன். நிறைய சிவத் தலங்கள் இருக்கு. நான் மட்டும் தனியாப் போயிருந்தபோதும், மனைவியுடன் சென்றிருந்தபோதும் வைணவக் கோவில்களைத் தரிசிக்கவேண்டும் என்று நினைத்திருந்ததால் (அப்புறம் எப்பத்தான் 106 கோவில் தரிசனம் முடிப்பது?) நிறைய தலங்களுக்குச் செல்லவில்லை. பெருமாளைச் சேவிப்பது குறைந்த நேரமென்றாலும், கோவில்களுக்குள் நடப்பது நீண்ட தொலைவு (திருவிடைமருதூர், பட்டீஸ்வரம் தேனுபுரீச்வரர் கோவில் போன்று).
நீக்குகும்பகோணத்தில் 3-4 நாட்கள் தங்கியிருந்து தரிசிக்க ஏராளமான திருத்தலங்கள் இருக்கின்றன. பார்ப்போம்... அவன் கருணை இருக்கின்றதா என்று.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும்... னு வரும். +2ல படித்த ஞாபகம்.
இஃகி,இஃகி,இஃகி, நான் ஆறாப்பிலேயே படிச்சுட்டேனே, நாராய், நாராய், செங்கால் நாராய்,; யாயும் ஞாயும் யாராகியரோ எல்லாமும்! :P:P:P:P:P
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்... 'யாயும் ஞாயும் யாராகியரோ' பாடல், நாங்க அடல்ட் ஆகறதுக்கு முன்னால் எங்க சப்ஜக்ட்ல வைக்கலை. எங்களுக்கு முந்தைய தலைமுறையில் வைத்தபோது (உங்களுக்கு), பசங்க படிக்கறதை விட்டுட்டு சிறிய வயதிலேயே கல்யாணம், காதல்னு ஆரம்பிச்சுட்டாங்களாம் (செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தம் கலந்ததுவே). அதுனால எங்க தலைமுறைல அதை பசங்க பாடத்துக்கு வைக்கலை. ஹிஹிஹி... (நீங்க தடுக்குல பாஞ்சா நாங்க கோலத்துல பாய்வோமாக்கும்)
நீக்குபயணம் தொடரட்டும்
பதிலளிநீக்குவாங்க கரந்தை ஜெயகுமார் சார்.
நீக்குஇவ்வளவு இடங்களுக்கு அழைத்துச் சென்ற இறைவன் பழையாறையும் தரிசனம் செய்ய வைப்பான்.
பதிலளிநீக்குதிருவிண்ணகரம் அற்புதமான கோவில்.
படங்கள் அனைத்தும் மிக அருமை. எல்லாக் கோவில்களிலும் அனேகமாக ஒரு முற்றுப் பெறாத கோபுரம் இருக்கும். அதையும் கோபுரமாக்க யாராவது வருவார்கள்.
வாங்க வல்லிம்மா... சில கோவில்களின் பிரம்மாண்டம் நம்மை வியக்கவைக்கும். திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, பிரம்மதேசம்-சிவன், மன்னார்கோவில், திருவிடைமருதூர், பட்டீச்வரம் தேனுபுரீஸ்வரர் என்று பெரிய லிஸ்டே இருக்கிறது.
நீக்குமுற்றுப்பெறாத கோபுரங்களை சரிசெய்ய வேண்டாம், ஆனால் அதில் செடிகள் வளர்ந்து பாழ்படாமல் காப்பாற்ற முனையலாம். கீழ்ப்பழையாறை கோபுரம் தரும் உணர்வு தனி. அங்கு சென்றால்தான் அது புரியும்.
ஆஹா ..... வரலாறு அருமையாக நகர்ந்து வருகிறது. தொடரட்டும்.
பதிலளிநீக்குஎன்னது... காலைல நான் கிழக்கில்தானே சூரியனைப் பார்த்தேன்.
நீக்குகோபு சார்... தொடர்ந்து எல்லாத் தளங்களுக்கும் வந்து, எது உங்கள் மனத்தைக் கவர்கிறதோ அதற்குப் பின்னூட்டம் இடணும் (எல்லாத்துக்கும் பின்னூட்டம் இட முடியலைனா). தொடர்பில் இருக்கணும்னு நான் கேட்டுக்கொள்கிறேன். வருகைக்கு நன்றி.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஅண்ணா அவர்களை நானும் அவ்வண்ணமே கேட்டுக் கொள்கிறேன்
நீக்குகோபு அண்ணன் இங்கின வந்தாரோ? இல்ல அவரின் குரல் கேட்டதைப்போல ஒரு ஃபீலிங்:)).. நான் தான் யூ ரியூப்பில அவரின் வொயிஸ் கேட்டிருக்கிறேனெல்லோ:).
நீக்குஅருமை...
பதிலளிநீக்குவரலாறு வாசிக்கும் போது ஆவல் அதிகமாகிறது.
வாங்க பரிவை சே.குமார். நேரம் கிடைக்கும்போது இதற்கு முந்தைய இடுகைகளையும் பார்த்துவிடுங்கள்.
நீக்கு// சைவமும் வைணவமும் //
பதிலளிநீக்குஇரண்டும் ஒன்று தான்...
இரண்டும், இறைவனை எப்படி உருவகப்படுத்துகின்றன என்பதில்தான் வித்தியாசம் திண்டுக்கல் தனபாலன். என் தனிப்பட்ட கருத்து, 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'. பெரியவர்கள், தங்கள் அதீத சக்தியால் அதனை உணர்ந்து உருவகப்படுத்தியுள்ளார்கள்.
நீக்குஉங்களை, நானும் இன்னொருவரும் கண்டு, நீங்கள் எப்படி இருப்பீர்கள், குணங்கள் என்ன என்றெல்லாம் எழுதினால், இரண்டுபேருடைய விளக்கமும் ஒத்துப்போக வாய்ப்பு உண்டா?
ஆனால், ஒவ்வொரு வழியில் செல்பவர்கள், அவர்களின் பாதையில் செல்வதுதான் சரி என்பதும் என் எண்ணம். நாமேதான் நமக்கான பாதை எது என்பதை உணர முடியும், தீர்மானிக்க முடியும். அப்படி நமக்கு சக்தி இல்லையென்றால், நாம் நம்புபவர்கள் சொல்வதை வைத்து அப் பாதையில் பயணிக்கவேண்டியதுதான்.
தங்களின் எண்ணம் சரி தான் ஐயா...
நீக்குசரித்திர ஸம்பந்தமான வைணவஸ்தலங்கள், அதிகம் தரிசித்ததில்லை. மிகவும் அர்த்தம் பொதிந்த வகையில் எழுதி வருகிறீர்கள். படிக்க மிகவும் நன்றாக உள்ளது. படங்களும் அருமையாக வருவதைப் பார்த்து ரஸிக்கிறேன். உங்களுடைய இடுகையைப் படித்து வந்தாலே கோவில்களைப் பார்த்து,தரிசித்த புண்ணியம் கிடைத்து விடும் என்று நினைத்தேன். அதுதான் இப்போதைக்கு உண்மையும் கூட. நன்றி. அன்புடன்
பதிலளிநீக்குவாங்க காமாட்சி அம்மா.. சில வாரங்களாக உங்களுக்கு பின்னூட்டம் இடமுடியவில்லை, ஆயினும் முடிந்தபோது படித்துவிடுகிறீர்கள் என்பதை அறிந்து மிக்க சந்தோஷம்.
நீக்குசமீபத்துல எங்கயோ, 'பாதாள லிங்க சன்னிதி, திருவண்ணாமலை, ரமணர்' இவைகளைப் படித்தபோது எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது.
முடிந்தபோது ஓரிரு வார்த்தைகளிலாவது பின்னூட்டமிடுங்கள். நலமுடன் இருக்கப் ப்ரார்த்திக்கிறேன்.
ஆவ்வ்வ்வ் நாலாவது குஞ்சும் பொரித்துவிட்டது.. ஆரம்பம் ராஜராஜசோளன், அவரின் சொந்த பந்தம் எல்லாம் சொல்றீங்க எனக்குப் புரியவில்லை.
பதிலளிநீக்குஅம்பாள் சந்நிதி மிக அழகு.
அந்த ராஜகோபுரத்தை எதுக்கு அப்படியே கைவிட்டிருக்கிறார்கள்.. எவ்ளோ புல்லு முளைத்துவிட்டது... ஆனா அதுவும் ஒரு வித்தியாசமான அழகாக இருக்கு.
அதிரா.... சிரமம் பார்க்காமல் பொன்னியின் செல்வன் கதையைப் படிங்க. சோழர் குல வரலாறு ஓரளவு தெரியவரும். அப்படியே நீங்களும் வரலாற்றின்பால் எங்களைப்போல் ஈர்க்கப்படுவீர்கள்.
நீக்கு(ஏதோ மக்காச்சோள ரேஞ்சுக்கு ராஜ ராஜ சோழனை ஆக்கிப்புட்டீங்களே.. நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்... இலங்கையில் ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், அவனுடைய அம்மா வானவன் மாதேவி நினைவாக இலங்கை பொலனறுவியில் வானவன் மாதேச்வரம் என்ற கோவிலைக் கட்டியிருக்கிறான்... நீங்க வெள்ளை வாகனங்களுக்குப் பயப்படலைனா உங்க ஊர் போகும்போது பார்த்துட்டுவாங்கன்னு சொல்லுவேன் ஹா ஹா ஹா)
ஆவ்வ்வ்வ் பொலனறுவைக் கோயில் கேள்விப்பட்டேன் அது சிங்கள ஏரியா என்பதால் முன்பு போக முடியவில்லை, இப்போ எங்கும் போகலாம் என்கிறார்கள் பார்ப்போம், போகலாம் என மனம் நினைக்கையில் இப்போ புதுப்பிரச்சனை யாழில் ஆரம்பிச்சிருக்கு.. கத்தி வாளுடன் வீடுகளுக்குள் புகுந்து வெட்டி கொத்தி களவு நடக்கிறதாம்... நாளுக்கு நாள் செய்தி கேட்கப் பயமாக இருக்கு, வெளியே கதைக்கவும் பயம்:).
நீக்குமிகவும் வருத்தத்தை அளிக்கும் விஷயம். இந்த நிலம்தான் சாராயம், களவு இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பாக 80களில் இருந்தது என்றால் இனி வரும் தலைமுறை நம்புமா?
நீக்கு95 கடசிவரை அப்படித்தான் இருந்தது... அது ஒரு அருமையான காலம்....
நீக்குஉங்கள் மரபில் என்றில்லை நெல்லைத்தமிழன், எந்த மரபிலும்[இந்துக்கள்] கருவறைக்குள் யாரும் போகக்கூடாதுதானே[அர்ச்சகர் தவிர்த்து]. ஆனா மண்டபத்துள் போகக்கூடாதென்பது புதுசா இருக்கே எனக்கு.
பதிலளிநீக்குஅதிரா.. நெடிய கோவிலில், கருவரையை அடுத்து ஓரிரு மண்டபங்கள் இருக்கும், அதற்கு வெளியே துவாரபாலகர்கள் இருப்பர். பொதுவாக நாங்க துவாரபாலகர்களைத் தாண்டி உள்ள மண்டபத்தைத் தாண்டிச் சொல்லமாட்டோம். அதிலும் அப்போது யாருமே இல்லை, ஒரு வயதான அம்மாவைத் தவிர (அவர்தான் சன்னிதிக்கு விளக்கேற்றிக்கொண்டிருந்தார்).
நீக்குஓம் அந்த கருவறை முன் ஒரு மண்டபம் இருக்கும் அதன் முன் நந்தி, நந்தியைத்தாண்டிப் போகக்கூடாது என்பார்கள், ஆனா ஆட்கள் இல்லை எனில் மண்டபத்தினுள் போய்க் கும்பிட ஆசை எனக்கு... ஹையோ ஆண்டவன் மன்னிக்கட்டும், அதுக்கு காரணம், எனக்கு எப்பவும் கடவுளுக்குக் கிட்டப் போய், வடிவா முகம் பார்த்துக் கும்பிட்டால்தான் திருப்தி:).
நீக்குநந்தியைத் தாண்டிச் செல்லலாம். கருவறைக்குள் செல்லக்கூடாது.
நீக்குஇறைவன் அருகே வணங்குவதுபோல் திருப்தி அளிக்கும் விஷயம் வேறு எதுவும் கிடையாது. எனக்கு திருப்பதி கடவுளின் வெகு அருகில் தரிசனம் செய்யும் பேறு (3-4 அடி தூரத்தில்) சிலமுறை வாய்த்திருக்கிறது.
படங்கள் அழகு. இப்படி பழம்பெரும் கோவில்களைப் பார்த்து நின்று நிதானமாக படம் எடுக்க வேண்டும் என ஆசை உண்டு. தமிழகப் பயணங்களில் சொந்த வேளைகளில் மூழ்கி விடுவதால் சாத்தியம் ஆவதில்லை. எப்போது நேரம் கிடைக்குமோ?
பதிலளிநீக்குநடுவில் சில பதிவுகள் விடுபட்டு இருக்கிறது. வாரக் கடைசியில் படிக்க வேண்டும்.
வாங்க வெங்கட். ஊருக்குச் சென்றால் உங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்தான். இந்த தடவை திருவரங்கத்தைப் பற்றி (பயணம்) வெகு விரைவில் எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்.
நீக்குநீங்கள் பத்ரிநாத், அந்தப் பகுதியில் ஒரு சிவன் கோவிலைத் தரிசனம் செய்ததை முன்பு எழுதியிருந்தீர்கள். அப்படிப்பட்ட பேறு எனக்கு எப்பொழுது கிடைக்குமோ....
விரிவான வரலாற்று விளக்கங்கள். கோயில் கோபுரம் அது ராஜ கோபுரமா? ராஜ கோபுரம் என்பது மிகவும் பெரியதாக பல நிலைகளைக் கொண்டிருக்கும் இல்லையா? இப்படி புல் முளைத்து இருக்கிறதே. வேதனையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அழகாக எடுத்திருக்கின்றீர்கள்
துளசிதரன்
வாங்க தில்லையகத்து துளசிதரன் சார். கோபுரம் இப்போதும் (புற்கள், செடிகள் முளைத்திருந்தபோதும்) மிக அழகாக ஜைஜாண்டிக்காக கம்பீரமாக இருக்கு. அங்கெல்லாம் நிற்கும்போது, அரசன்/அரசி வரும்போது கோவில் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் நினைக்கும்போது தனி உணர்வு வரும். நன்றி.
நீக்குஇந்தக் கோயில்கள் எதுவும் சென்றதில்லை நெல்லை. நிறைய தகவல்கள். மன்னர் ஆட்சியா இருந்தா என்ன இப்போதைய டெமொக்ரெட்டிக் ஆட்சியா இருந்தா என்ன....ஆட்சி என்றாலே அரசியல் இருக்கும் தானே..
பதிலளிநீக்குபடங்கள் தகவல்கள் எல்லாமே சிறப்பு.
கீதா
வாங்க கீதா ரங்கன். நீங்க ரொம்ப பிஸியாக இருக்கீங்க.
நீக்குதஞ்சைப் பகுதி சோழக் கோவில்கள் மிக அருமையா இருக்கு கீதா ரங்கன். நிச்சயம் ஒரு தடவை பாருங்க.
சுவாரஸ்யமான பதிவு ...
பதிலளிநீக்குஉடையார் நூலை கையில் வைத்துக்கொண்டே செல்கிறேன் இன்னும் படிக்கும் நேரம் தான் வரவில்லை ..அமைதியாக அதில் மட்டும் கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என வும் காத்திருக்கிறேன் ...
அருமையான தகவல்கள் நிச்சயமாக அந்த பக்கம் செல்லும் போது உங்கள் பதிவுகள் வழிகாட்டியாக வே இருக்கும் ...
வாங்க அனுராதா ப்ரேம்குமார். நன்றி.
நீக்குஉடையார் நூல், கொஞ்சம் ஜவ்வாக பாலகுமாரன் இழுத்திருப்பதாகத் தோன்றியது. ஆனால், அந்தக் கால ஆட்சி, மக்கள், எப்படி ஒவ்வொரு நிகழ்வும் நிகழ்ந்திருக்கும் என்று நிறைய கற்பனை செய்து நல்லாவே பாலகுமாரன் அவர்கள் எழுதியிருக்கிறார். (இருந்தபோதும் என் தனிப்பட்ட எண்ணம், கல்கி அவர்களைப்போல் ஒரு பெர்சனல் டச் பாலகுமாரன் எழுத்தில் இல்லை என்பது)