நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 29, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 16
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
குன்றக்குடி


தனன தந்த தந்த தனன தந்த தந்த 
தனன தந்த தந்த ... தனதான


அழகெ றிந்த சந்த்ர முக டங்க லந்த
அமுத புஞ்ச இன்சொல் ... மொழியாலே

அடிது வண்ட தண்டை கலிலெ நுஞ்சி லம்பொ
டணிச தங்கை கொஞ்சு ... நடையாலே

சுழியே றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
தொடுமி ரண்டு கண்க ... ளதனாலே

துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற 
பெண்கள் துயரை யென்றொ ழிந்து ... விடுவேனோ

எழுது கும்ப கன்பி நிளைய தம்பி நம்பி
யெதிர டைந்தி றைஞ்சல் ... புரிபோதே

இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
மொழிய வென்ற கொண்டல் ... மருகோனே

மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
ல்மநுவி யம்பி நின்ற ... குருநாதா

வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க 
மலைவி ளங்க வந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


அழகிய நிலவைப் போன்ற முகத்தினாலும் திரண்டு
வருகின்ற அமுதம் போன்ற  இனிய பேச்சினாலும்

பாதங்களில்  கிடக்கின்ற தண்டைகளும் 
சிலம்புகளும் அணி சதங்கைகளும்
கொஞ்சி ஒலிக்கின்ற நடையினாலும்

மனதை நீர்ச்சுழி எனச் சுழலச் செய்கின்ற  
விஷம் நிறைந்த கண்களாலும் 
 
நெருங்கிய தனங்களாலும் 
மனதை மயக்கும் பெண்கள் தருகின்ற  
துயரில்  ஒழிந்து விடுவேனோ?..

கும்பகர்ணனின் இளையவனாகிய 
விபீஷணன் எதிரில் வந்து சரணம் என்று  
வணங்கி நிற்க மனம் மகிழ்ந்து,

இலங்கை அசுரனை  வெற்றி கொண்ட மேக நிறத்து கோதண்ட ராமனின் மருமகனே..

 செங்கரத்தில் மழுவினை உடையவராகிய  
சிவபெருமான் விரும்பிக் கேட்டபோது பிரணவத்தை 
உபதேசித்த குருநாதனே..

வளம் மிக்க குன்றக்குடியைக் காத்து, தூய்மையான மலையின் மீது வீற்றிருக்கும் பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. கோதண்டராமனின் மருமகன்....   முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகு. இன்றைய அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ் பாடி முருகனை வணங்கிக் கொண்டேன்.
    அருமையான அதன் விளக்கமும் படித்துக் தெரிந்து கொண்டேன்.
    முருகா சரணம்.
    முத்துக்குமரா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. பிரணவத்தை உபதேசித்த குருநாதா சரணம்.

    வெள்ளி நாளில் திருப்புகழ். படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  5. முருகப்பெருமானுக்கு சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..