நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 31, 2024

கரந்தை 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 18
ஞாயிற்றுக்கிழமை


வருடந்தோறும் பங்குனி மாதம் 3,4,5 நாட்களில் தஞ்சை 
கரந்தட்டாங்குடி எனப்படும் கரந்தை ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயிலில்  உதயத்தின் போது சூர்ய ஒளி சிவ சந்நிதியில் படர்கின்றது..  

வெகு காலத்துக்குப் பிறகு பங்குனி 5 - மூன்றாம் நாள் (18/3) தரிசனம் செய்தேன்..

இத்தலத்தில் ஈசனை
வசிஷ்ட மகரிஷி தனது பசுவாகிய நந்தினியுடன்  வழிபட்டதாக ஐதீகம்.. வசிஷ்டர் அருந்ததி திருமேனிகள் தெற்குக் கோஷ்டத்தில் இடம் பெற்றுள்ளன..

இத்தலத்தின் தொன்மையான பெயர் கருந்திட்டைக்குடி.. 

அப்பர் பெருமான் க்ஷேத்திரக் கோவையில் (6/71/3) இத்தலத்தினை வைத்துப் பாடியுள்ளார்.. வேறு  திருப்பதிகம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை..

தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்திற்கு முற்பட்டது இக்கோயில்..

கரிகால் சோழன் காலத்துக் கோயிலை -
 பராந்தக சோழர் செம்பியன் மாதேவியார் கற்றளியாக்கியதாக வரலாறு..

மூலவர் கருவறை கோஷ்டத்தில் ஞானசம்பந்தர், நடராஜர், அப்பர், கங்காளர், , விநாயகர், தக்ஷிணாமூர்த்தி,  வசிஷ்டர், அருந்ததி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காதரர், பிரம்மா, வீணாதரர், காலசம்ஹார மூர்த்தி, பிட்சாடனர், துர்கை என், அழகு மிகும் திருமேனிகள்.. கோட்டத்துச் சிற்பங்களால் சிறப்புடைய கோயில்..

முன் மண்டபத்தில் ஸ்ரீ வைரவருக்கு நேர் எதிராக நவக்கிரக நாயகர்கள்.. 

கிழக்கு தெற்கு மேற்கு என மூன்று பக்கமும் வாசல்கள்.. கிழக்கே திருக்குளம் என்பதால் நுழைய இயலாது..

நந்தி மண்டபம்






















இறைவன் 
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
அம்பிகை 
பிரஹந்நாயகி
தீர்த்தம் 
வசிஷ்ட தீர்த்தம்
தலவிருட்சம் வன்னி

மாமனனர் கரிகால் சோழர் இங்கு வழிபட்டு தோலில் ஏற்பட்ட தேமல் நோய் நீங்கப் பெற்றதாக ஐதீகம்..

அந்த விவரங்கள் நாளைய பதிவில்!..

கோயிலில் நான் எடுத்த படங்களில் ஒரு சில  இன்றைய பதிவில்.. 

நாளையும் பதிவு தொடரும்..

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என்னெஞ்சுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே!.. 4/76/6
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்டது இந்தக் கோவில் என்பது வியப்பு.  படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வசிஷ்டேஸ்வரர் பிரஹந்நாயகி கோவில் வரலாறு அறிந்தோம்.

    படங்கள் பல கண்டு கொண்டு வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  4. இன்றைய பதிவை மிகவும் ரசித்தேன். தவறுதலா வேற ஒரு கருத்து போயிடுத்து. அதை பப்ளிஷ் பண்ண வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு
      நன்றி..

      நீக்கு
  5. தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்ட கோவில் - உங்களால் தரிசனம் எங்களுக்கும்! நன்றி.

    படங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..