நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 02, 2024

திருமாலை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 19
சனிக்கிழமை


பச்சை மாமலைபோல் மேனி  பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்  இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே.. 873


ஒருவில்லால் ஓங்கு முந்நீர்  அடைத்து உலகங்கள் உய்ய
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில்  மதில் திரு அரங்கம் என்னா
கருவிலே திருவிலாதீர்  காலத்தைக் கழிக்கின்றீரே.. 882

வண்டினம் முரலும் சோலை  மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதுஅணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணி திரு அரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி நாய்க்கு இடுமின் நீரே..  885

சூதனாய்க் கள்வனாகித்  தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்  வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லி  புந்தியுள் புகுந்து தன்பால் 
ஆதரம் பெருக வைத்த  அழகனூர் அரங்கம் அன்றே.. 887

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் 
விதியிலேன் மதியொன்றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த 
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென் 
கண்ணினை களிக்குமாறே.. 888

குடதிசை முடியை வைத்துக்  குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்  தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை  அரவணைத் துயிலுமா கண்டு
உடல்எனக்கு உருகுமாலோ  என்செய்கேன் உலகத்தீரே.. 890

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்  பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன்  கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்  ஏழையேன் ஏழையேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும்  விரிபொழில்  அரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்தவாறும்  கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும்  ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் காலத்தைக் கழிக்கின்றாயே.. 895


ஊர் இலேன் காணி இல்லை   உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்  பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா  அரங்கமா நகருளானே.. 900
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

ரங்கா ரங்கா

ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம்
***

6 கருத்துகள்:

  1. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள் மனதை கரையச் செய்யும்படி உள்ளன. தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாசுரங்களைப் பாடி ஸ்ரீ ரங்கனை வழிபாட்டுக் கொண்டேன். ரங்கா. ரங்கா எனும் போதிலே மனதும் பாகாய் கரைந்துப்போகிறது. 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. பச்சமாமலை அரங்கனை தொழுவோம் .

    பிடித்த பாசுரம் .

    பதிலளிநீக்கு
  4. திருமலைக்குப் போய் வந்த படங்கள் வரும் என்று சொன்னீங்களே துரை அண்ணா. வந்திருக்கும் என்று நினைத்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பாசுரங்களை பாடி அரங்கனை துதித்து கொண்டேன்.
    பகிர்ந்த பாடல்களும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. அரங்கன் அனைவருக்கும் அருள் புரிய எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..