நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 09, 2024

திருக்காளத்தி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 26
சனிக்கிழமை


திருமலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்ததும் மன்னார்குடி திருப்பதி வண்டியில்
இருக்கை பதிவு செய்தாயிற்று.. 

தஞ்சை வழியே செல்கின்ற வண்டி நாங்கள் நினைத்த மாதிரி இல்லை.. 

மன்னார்குடி அளவுக்கு தஞ்சாவூர் பெரிய ஊர் இல்லை என்பதால் இங்கிருந்து தொலை தூர வண்டியாக சென்னைக்கு மட்டும் ஒன்று  புறப்படுகின்றது.. 

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 
அதிக வருவாய் ஈட்டித் தருவதில் தஞ்சாவூர் ரயில்வே நிலையத்திற்கு இரண்டாவது இடம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

மன்னார்குடி திருப்பதி வண்டியை மயிலாடுதுறையில்  பற்றிக் கொள்ள திட்டமிட்டு அதன்படி முதல் நாள் ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயிலில்  தரிசனம் செய்து விட்டு மயிலாடுதுறை நிலையத்தில் 



மயிலாடுதுறை

இரவு தங்கியிருந்து அதிகாலை குளித்து காலை (7:15) திருப்பதி விரைவு வண்டியில் பயணித்து மாலை (3:00) மணியளவில் திருப்பதிக்கு வந்து சேர்ந்தோம்.. 


அன்று மாலை திருச்சானூர்.. அங்கே ஸ்ரீ பத்மாவதித் தாயார் தரிசனத்திற்குப் பிறகு ஸ்ரீ காளஹஸ்தி.. 




முதலில் -
கோயிலுக்குப் பின்புறம் உள்ள ஸ்ரீ விஸ்வநாதர் ஆலய தரிசனம்..

ஸ்ரீ பாதாள விநாயகரை வணங்கி விட்டு ஸ்வாமி தரிசனம்.. மறுநாள் காலையில் ஸ்ரீ கண்ணப்பர் மலை..




கண்ணப்பர் மலையில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்.. 


காளத்தி மூலஸ்தானம்





பொன்முகலி ஆறு














தினந்தோறும் விடியற்காலை கோயில்வாசலில் 
வாழைக்கன்றுடன் மாவிலைத் தோரணம்  
கட்டுகின்றனர்..

காளத்தி கோயிலுக்குள் நிழற்பட சாதனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை..

திருமலையில் எடுத்த படங்கள் 
அடுத்து வரும் பதிவுகளில்..
**

கண்ணப்பர் வரலாற்றை
திருநாவுக்கரசர் குறித்தருள்கின்ற திருப்பாடல்..

காப்பதோர் வில்லும் அம்புங் 
கையதோர் இறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் 
தூயவாய்க் கலசம்  ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய 
குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் 
குறுக்கை வீரட்ட னாரே. 4/49/7
-: திருநாவுக்கரசர் :-





சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில்  உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே.. 3/36/1
-: திருஞானசம்பந்தர் :-
*
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. முன்னர் பார்த்ததற்கு (போட்டோவில்தான்!) சற்று மாறுதலை தெரிகிறீர்கள்.  சமீபத்தில் நான் காளஹஸ்தி சென்று வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சர்க்கரை படுத்துகின்ற பாடு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அப்பர், சம்பந்தர் தேவார பாடல்களை பாடி காளத்தி நாதரை வணங்கி கொண்டேன்.
    படங்கள் எல்லாம் மிக அருமை. மயிலாடுதுறை ரயில் நிலையம், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் என்று படிக்கும் போது பழைய நினைவுகள் வந்து போகிறது.

    மாடும் கன்றும் , பொன்முகலி ஆறு படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மயிலாடுதுறை ரயில் நிலையம், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் என்று படிக்கும் போது பழைய நினைவுகள் வந்து போகிறது., ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  3. காளஹஸ்தி தரிசனம் பெற்றோம்.

    படங்கள் பலவும் கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. திருப்பதிக்கு ஒரு பயணம் - மகிழ்ச்சி. காளஹஸ்தி தரிசனம், படங்கள் நன்று. அனைவருக்கும் நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..