நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 28, 2024

பட்டாபிஷேகம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15
வியாழக்கிழமை


கடந்த திங்களன்று (18/9) காலையில் திரு ஐயாறு - அந்தணக் குறிச்சியில் நந்தியம்பெருமான் ஜனன வைபவத்தைத் தொடர்ந்து -

திரு ஐயாறு கோயிலில் முன்னிரவுப் பொழுதில் நந்தியம்பெருமானுக்கு மகா அபிஷேகம் தீப ஆராதனையுடன் பட்டாபிஷேக விழா நடைபெற்றது..

நந்தியம்பெருமானை கணங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் கயிலாய மாமலையின் அதிகார ருத்ர நந்தி என்றும் சிவபெருமான்  அடையாளம் காட்டி பட்டமளிப்பதாக ஐதீகம்..

திருக்கோயிலின் முன் மண்டபத்தில் மூலஸ்தானத்திற்கு நேராக வைத்து அபிஷேகம் நடத்தப் பெற்றது.. 

இத்தனை வருடங்களில் இந்த ஆண்டு தான் தரிசிக்கின்ற பாக்கியம் கிடைத்தது.. 

அந்த வைபவத்தின் படங்கள் இன்றைய பதிவில்..

படங்கள் : தஞ்சையம்பதி

















மகா தீப ஆராதனைக்குப் பின்
அம்பாளும் ஸ்வாமியும் நந்தீசனுடன் திரு வீதி 
உலா எழுந்தருளினர்..

செங்கோல் - பட்டம்
நன்றி காவிரிக்கோட்டம்

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழிண்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி...
-: காஞ்சிப்புராணம் :-


நந்தீசர் திருத்தாள் போற்றி..
ஐயாறப்பர் 
அறம் வளர்த்த நாயகி திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. படங்கள் மூலம் நானும் தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. நேற்று பதிவு இல்லையே... என்ன ஆச்சு என்று கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. நமது தளங்களில் பின்னூட்டமிட்டு விட்டு பின் தொடரும் ஆப்ஷனை க்ளிக் செய்து விட்டு வந்து விடுவேன்.  அந்த போஸ்டுக்கு வரும் பின்னூட்டங்களும், பதில்களும் எனது மெயில் பாக்ஸுக்கு வந்து விடும்.  Follow செய்ய எளிதாக இருக்கும்.  இரண்டு நாட்களாய் இது எனக்கு வேலை செய்யவில்லை.  எனக்கு மட்டும்தானா?  நண்பர்களின் அனுபவம் என்ன?  மறுபடி நினைவு வைத்துக்கொண்டு தளத்துக்கு வந்து பார்த்தால்தான் மற்ற நண்பர்களின் கருத்துகளையும், நம் கருத்துக்கான பதிலையும் படிக்க முடியும் என்கிற நிலை.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அனைத்தும் நன்று. இனிய வைபவம். தமிழகத்தின் கோயில்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த எத்தனை விஷயங்கள் இருக்கின்றன - பிரமிப்பு.

    பதிலளிநீக்கு
  5. பட்டாபிஷேக படங்கள் நன்றாக இருக்கின்றன. தரிசித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் பட்டாபிஷேக விழாவை நேரில் பார்த்தது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..