நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 07, 2024

சிவ சிவ 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 24
 வியாழக்கிழமை


மகாசிவராத்திரியை முன்னிட்டு இப்பதிவு..


அம்பிகை - தானே தற்பரையாய் - ஈசன் எம்பெருமானை வழிபட்ட திருத்தலங்கள் :
திருக்குமரி, திருஆலவாய், திருக்கச்சி, திரு ஆனைக்கா..


அம்பிகை மயிலாக வழிபட்ட தலங்கள் :
திருமயிலை, மயிலாடுதுறை..

அம்பிகை பசுவாக வழிபட்ட தலங்கள் :
சங்கரன் கோயில்,  திருவாடுதுறை, திருப் பந்தணைநல்லூர், திருக்கொண்டீச்சுரம்..

அம்பிகை பத்ரகாளியாக வழிபட்ட தலம் திருமங்கலக்குடி ..

சப்த கன்னியரில்  பிராம்மி எனும் சக்ரமங்கை வழிபட்ட தலம் சக்ரப்பள்ளி (ஐயம்பேட்டை)  

மகேஸ்வரி எனும் அரிமங்கை வழிபட்ட தலம்
அரியமங்கலம்..

கௌமாரி எனும் சூலமங்கை வழிபட்ட தலம் சூலமங்கலம்..

வைஷ்ணவி எனும் நந்திமங்கை வழிபட்ட தலம்
நல்லிச்சேரி..

வராகி எனும் பசுமங்கை வழிபட்ட தலம்
பசுபதிகோயில்..

இந்திராணி எனும்  தாழ மங்கை வழிபட்ட தலம் தாழமங்கை.

சாமுண்டி எனும் புள்ளமங்கை
வழிபட்ட தலம் திருப்புள்ளமங்கை.

இத்தலங்கள் அனைத்தும் தஞ்சையை அடுத்து  அமைந்துள்ளன.. 


கணபதி வழிபட்ட தலம் :
கணபதீச்சுரம் (திருச்செங்காட்டங்குடி)
கற்பகநாதர் குளம் (வேதாரண்யம்),
திரு இடைமருதூர், காஞ்சி அநேகதங்காவதம்.

கந்தன் வழிபட்ட தலம் :
திருச்சேய்ஞலூர், சிக்கல், புள்ளிருக்கு வேளூர், திருச்செந்தூர், கீழ்வேளூர்.

ஊழியிலும் ஈசனுடன் இருப்பவர் நந்தியம்பெருமான்.. இருப்பினும் அவர் வழிபட்ட தலங்கள் :
காசி, திரு ஐயாறு, திருமழபாடி..

ஐராவதம் வழிபட்ட தலம் திருவெண்காடு..


காமதேனு / பசு வழிபட்ட தலங்கள் பலவாகும் :
கரூர் ஆநிலை, சிக்கல், ஆவூர், ஆமாத்தூர், பட்டீஸ்வரம், பசுபதி கோயில், தென்குடித் திட்டை, புள்ளிருக்கு வேளூர்..

அகத்தியர் வழிபட்ட தலங்கள் :
பாபநாசம் (நெல்லை) திருமறைக்காடு, அகத்தியம்பள்ளி,
திருமங்கலக்குடி, ஈங்கோய்மலை மேலும் பல..

ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபட்ட தலங்கள்..

சங்கு வேண்டி வழிபட்ட தலங்கள் :
திருவலம்புரம், திரு தலைச்சங்காடு..


சக்கரம் வேண்டி வழிபட்ட தலங்கள் :
திருவீழிமிழலை, திருமாற்பேறு..

மச்ச அவதாரத்தில் தேவராயன்பேட்டை (சேலூர்) தஞ்சைக்கு அருகில்..

கூர்ம அவதாரத்தில் கச்சபேஸ்வரம் (காஞ்சி), கச்சூர்.

வாமன அவதாரத்தில் திருமாணிக்குழி..

நரசிம்ம அவதாரத்தில் தாமல் (காஞ்சி).

பரசுராம அவதாரத்தில் திருப்பழுவூர் (அரியலூர்), திருநின்றியூர்..

பலராம அவதாரத்தில் காஞ்சிபுரம்  (பலபத்ர ராமேஸ்வரம்), கோடியக்கரை..


ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட தலங்கள் :
திரு உசாத்தானம், கோயிலூர் (பட்டுக்கோட்டை),
திருமறைக்காடு,  இராமேஸ்வரம், பாபநாசம் (தஞ்சை)..

ஸ்ரீ ராமன், இளைய பெருமாள், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகியோர் வழிபட்ட தலம் திரு உசாத்தானம் (கோயிலூர் - பட்டுக்கோட்டைக்கு அருகில்)


ஸ்ரீ அனுமன் வழிபட்ட தலம் திருகுரக்குக்கா..

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் சீர்காழி ..

ஸ்ரீ மஹாலக்ஷ்மி வழிபட்ட தலம் -
திருநின்றியூர்..

பிரம்மன் வழிபட்ட 
தலங்கள்: 
பிரமபுரம் (சீர்காழி) 
கண்டியூர், திருப்பட்டூர் மற்றும் பல தலங்கள்.

பதஞ்சலி, வியாக்ரபாதர் வழிபட்ட 
தலம் : திருப்பட்டூர்

முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட தலம் திரு ஆரூர்.

தசரதர் வழிபட்ட தலம் திருக்கொள்ளிக்காடு.

நள சக்கரவர்த்தி 
வழிபட்ட தலம் - 
திருநள்ளாறு.

வசிஷ்டர் வழிபட்ட தலம் :  தென்குடித் திட்டை, கரந்தை (தஞ்சை).

பிருங்கி முனிவர் வண்டு வடிவில் வழிபட்ட தலங்கள் : திருவண்டுறை, திருச்செங்கோடு..


கொங்கணர் வழிபட்ட தலங்கள் :
திருப்பதி, தஞ்சை.

கருவூரார் வழிபட்ட தலங்கள் :
கரூர் ஆநிலை, தஞ்சை, நெல்லை.

குபேரன் வழிபட்ட தலம்: தஞ்சை..

தேவர்கள் எறும்பு வடிவில் வழிபட்ட தலம்:
திருஎறும்பூர்.

நவக்கிரக நாயகர்கள் வழிபட்ட தலங்கள் :

சூரியன் திருப்பரிதி நியமம்சூரியமூலை, திருமங்கலக்குடி மற்றும் பல.
சந்திரன் - திங்களூர். 
அங்காரகன் -
புள்ளிருக்கு வேளூர்.
புதன் - திருவெண்காடு.

பிரகஸ்பதி - (தென்குடித்திட்டை, திருவலிதாயம்.
சுக்கிரன் - கஞ்சனூர்.

சனைச்சரன் - காசி.
ராகு கேது -
திருக்காளத்தி, மேலப்பெரும்பள்ளம்

பஞ்ச பாண்டவர் வழிபட்ட தலம் பற்பல - குறிப்பாக ஐயாவாடி..

இடும்பன் வழிபட்ட தலம் : இடும்பாவனம்.


யானை, சிலந்தி, நாகம்
வழிபட்ட தலம் :
திருக்காளத்தி..


யானை சிலந்தி 
வழிபட்ட தலம் :
திரு ஆனைக்கா..

ஜடாயு, சம்பாதி 
வழிபட்ட தலம் : 
புள்ளிருக்கு வேளூர்..

கரிக்குருவி/வலியன் வழிபட்ட தலங்கள்:
மதுரை, திருவலிவலம், திருவலிதாயம்..


நண்டு வழிபட்ட தலம்  
திருந்துதேவன்குடி..


நாரை வழிபட்ட தலம் 
திருநாரையூர்.

குயில் வழிபட்ட தலம் 
திருக்கோழம்பம்..

குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றும் வழிபட்ட தலம் 
குரங்கணில்முட்டம்..

வாலி வழிபட்ட தலம்
திருகுரங்காடுதுறை..

தேவர்கள் பற்பல வடிவங்கள் கொண்டு வழிபட்ட தலங்கள் நிறைய இருக்கின்றன...

நரசிம்ம, பரசுராமர், பலராமர் - வழிபட்ட தலங்கள் தவிர்த்து மற்றவை நினைவின் அடுக்கில் இருந்து எழுதியுள்ளேன்..

தொகுப்பில் பல தலங்கள் விடுபட்டிருக்கலாம்.. 
பொறுத்துக் கொள்க..


கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி 
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி 
அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி 
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி 
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 6/32/1
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. நமச்சிவாய என்று செல்வோம். நன்மைகள் யாவும் பெறுவோம்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி ..

      நீக்கு
  3. சிவ சிவ சிவாயநமக.......

    சிவராத்திரி தொகுப்பு பகிர்வு நிறைந்த பல தகவல்களுடன் பலதும் அறியக் கூடியதாக மிகவும் சிறப்பான தொகுப்பாக தந்துள்ளீர்கள். பாராட்டுகள் .

    படங்களும் துணை நிற்கின்றது.

    நினைவின் அடுக்கில் இருந்து இத்தனை தகவல்களையும் எமக்கு அளிக்க அந்த ஈஸ்வரன் உங்களுடன் இருந்திருக்கிறான்.அவன் உங்களுக்கு சகல நலங்களையும் தருவான் .
    ஓம் நமசிவாய .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இத்தனை தகவல்களையும் எமக்கு அளிக்க அந்த ஈஸ்வரன் உங்களுடன் இருந்திருக்கிறான்.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு
  4. அருமையான தொகுப்பு. சிவராத்திரிக்கு சிந்திக்க வேண்டிய பதிவு.
    படங்கள் நன்றாக இருக்கிறது, விவரங்கள் அருமை.
    அப்பர் தேவாரத்தை பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன்.
    சிவபெருமான் எல்லா நலங்களும் எல்லோருக்கும் தர பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. ///சிவபெருமான் எல்லா நலங்களும் எல்லோருக்கும் தர பிரார்த்திப்போம்..///

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. விவரங்கள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..