நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


செவ்வாய், அக்டோபர் 20, 2015

பனந்தீவுச் சுற்றுலா

துபாய்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்று..


சில தினங்களுக்கு முன் - துபையை நோக்கி காலை பத்து மணியளவில் புறப்பட்டோம்.. 

அபுதாபியிலிருந்து துபாய் செல்லும் சாலை
இருமருங்கிலும் பசுமையான மரங்கள்
துபாய் நகருக்குள் நுழைவு

துபாய் நகரில் கட்டுமானப் பணிகள்

ஏறத்தாழ ஒன்றரை மணி நேரப் பயணம்..

எங்கள் இலக்கு - 

Atlantis - The Palm Hotel & Resorts - Palm Jumeirah Island.. 

பனந்தீவு - பனை மரத் தீவு - Palm Islands..

துபையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவு -  ஜூமைரா. 

பனை வடிவில் (Palm Island - Jumeirah) அமைக்கப்பட்டுள்ளது..


இன்னும், இதே போல் - 
ஜபல் அலி மற்றும் டைரா - என, இரு தீவுகள் உருவாகிக் கொண்டுள்ளன..

துபை நகரில் - கடற்கரையின் ஓரத்தில் ஜூமைரா பனை மர வடிவ தீவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் மோனோ ரயில் நிலையத்தின் மூன்றாவது தளத்தில் எங்கள் காரை நிறுத்திவிட்டு, 

மெட்ரோ - ரயில் நிலையம்
மேலே - மின் தூக்கியில் சென்று -  மோனோ ரயிலில் பயணித்து தீவின் உச்சிப் பகுதி என விளங்கும் ஹோட்டல் அட்லாண்டிஸ் சென்றடைந்தோம்.
கடற்கரையின் அருகில் செயற்கை நீச்சல் குளம்
இதன் அருகில் - செயற்கை நீச்சல் குளங்கள்.. 
ரயிலில் இருந்தே காணக்கூடியதாக இருக்கின்றது..

மேலைத் தேசத்தின் கடற்கரையோ!.. - என, மனம் தடுமாறுகின்றது..

அந்த அளவிற்கு - நீச்சல் உடைகளுடன் அங்கும் இங்கும் திரிகின்றனர்..

ஆனாலும் - அரபு தேசத்தின் ஒரு பகுதி என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்..


நான்கு மாடி உயரத்திலிருக்கும் மோனோ ரயில் நிலையத்திலிருந்து - நகரும் படிக்கட்டுகளின் வழியே கீழிறங்கி -

Atlantis - The Palm Hotel & Resorts - ன் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருக்கும் - 
கடல் மீன்களின் காட்சியகத்திற்குச் சென்றோம்..

முன்னதாகவே - பதிவு செய்யப்பட்டிருந்த சீட்டுகளைப் பரிசோதித்த பின்னரே, உள்ளே அனுமதிக்கின்றனர்..

இந்த நாட்டின் விசா (Visa) உடையவர்களுக்கு - 75 Dhrms என்றும்,
சுற்றுலா பயணிகளுக்கு - 100 Dhrms என்றும் கட்டணம் வைக்கப்பட்டுள்ளது..

மீன்காட்சியகத்தின் உட்புறம் மங்கிய ஒளியில் - 
உட்புறமாகப் பொருத்தப்பட்டிருக்கும் பலவகையான மீன்கள் - கண்களுக்கு விருந்தாகின்றன..

பார்வைக்கு அழகான வண்ண மீன்களும்  -
பார்க்கவே அச்சமூட்டும் பயங்கர மீன்களும் தொட்டிகளுக்குள் சுழன்று திரிகின்றன..

மற்றொரு பெருந்தொட்டிக்குள் - ஏராளமான மீன்களுக்கிடையே - நீர்மூழ்கி உடையுடன் உலா அழைத்துச் செல்கின்றனர்..

அதற்கு பிரத்யேகக் கட்டணம்.. கொஞ்சம் தான் - 1000/- Dhrms..சுற்றுலா பயணிகளுக்கான பேருந்து

மாலை மயங்கும் வேளை
துபாயிலிருந்து அபுதாபியை நோக்கி....
மீன்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்து - 
எதிரிலிருந்த கடற்கரைச் சாலையில் சற்று நேரம் நின்றிருந்தோம்..

இளங்காற்று முகத்தை வருடினாலும் ஏதோ ஒன்று மனதை நெருடியது.. 

காட்சியகத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பரவசத்தில் இருக்கின்றனர்..
ஆனால் - அந்த மீன்கள் பரிதாபத்துக்குரியவையாக இருக்கின்றன..

அலைகடலுக்குள் ஆனந்தமாகச் சுற்றித் திரிந்த அந்த ஜீவன்கள் - 
நம் பொருட்டு - சிற்றறைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றன..

நமக்கு வாசல் திறந்து கிடக்கின்றது..
அந்த மீன்களுக்கு!?...

வாழ்க நலம்..
* * *

26 கருத்துகள்:

 1. அழகான ஊருக்கு உங்கள் தயவில் பார்த்து ரசித்தேன் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமை. உங்கள் தயவில் நானும் Palm Islands பார்த்துவிட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தாங்களும் என்னுடன் பயணித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அழகான படங்கள்! பமைரா தீவைக் காட்டியதற்கு மிக்க நன்றி!

  மீன்கள் மட்டுமா? எல்லா விலங்குகளும்தானே ஐயா மிருகக் காட்சி சாலைக்குள்....பாவம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   விலங்குகளும் கூண்டுக்குள் தான் சிக்கிக் கிடக்கின்றன.. என்ன செய்வது.. அதுவும் சுதந்திரம் என்கின்றார்கள்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வணக்கம்,
  அழகாகன படங்கள் நல்ல விளக்கம், அருமை,
  உங்கள் மனம் அந்த மீன்களுக்காக இளக்கிற்றே, இன்னும் எத்தனையோ உயிர்கள் சுதந்திரக் காற்றை மறந்து,
  அருமை, அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அன்பின் ஜி அழகான புகைப்படங்கள் நான் பலமுறை சென்று வந்துள்ளேன் இந்த மீன்களைவிட மிருகங்களையும், பறவைகளையும்தான் மனிதன் தனது சுயநலத்துக்காக கூண்டில் அடைத்து ரசிக்கின்றான் இந்த வேதனையின் விளைவில்தான் சிறையிலிருந்து... சின்னக்குயில் பதிவு எழுதினேன்

  விளக்கிய விதம் நன்று வேர்ல்ட் டவர் புர்ஜ் கலீஃபா போகவில்லையா ? ஜி
  பிறகு வரும் என்று எதிர் பார்க்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   புர்ஜ் கஃலீபாவிற்கு இன்னும் திட்டமிடவில்லை.. அதற்குள் வேறு சில அலுவல்கள் இருக்கின்றன..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. கண்டிப்பாக சென்று வாருங்கள் ஜி இணையத்தில் கட்டணச்சீட்டு 125 திர்ஹாம்ஸ், நேரடியாக 400 திர்ஹாம்ஸ் மாலை 05.00 மணி நேரத்தை தேர்ந்தெடுங்கள் இரவும், பகலும் பார்த்து விட்டு வரலாம் கிடைக்காவிடில் மாலை 04.30 க்கு பதிவு செய்யுங்கள் இரண்டையும் ரசித்து வரலாம்

   நீக்கு
  3. அன்பின் ஜி..

   தங்களின் விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. படங்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா
  தாங்கள் தஞ்சை வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இந்த மாத கடைசியில் இங்கிருந்து தஞ்சைக்கு புறப்படுகின்றேன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. படங்கள் அனைத்தும் அருமை ஐயா...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. படங்களும் பதிவும் மிகவும் அருமை ஐயா!

  பல விடயங்களை அறிந்து கொண்டேன்!
  அடைக்கப்பட்ட அந்த உயிரினங்கள் மேல் கொண்ட
  கருணையையைப் பரிவைத் தங்கள் மனம் கொண்டதாகக்
  கூறியபோது உங்களுள் பிரதிபலித்த ஜீவ காருண்யத்தைக் கண்டேன்!..

  அனைத்தும் மிகச் சிறப்பு! பகிர்விற்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   அந்த மீன்காட்சியகத்தை - ஒரு நிலைக்கு மேல் என்னால் ரசிக்க முடியவில்லை...

   தங்கள் வருகையும் அன்பான வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. பனந்தீவுச் சுற்றுலா அருமை. புகைப்படங்களும் செய்திகளும் மிக அருமையாகத் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. எங்களால் காணமுடியாத பல இடங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. நீங்கள் அதிகம் சொல்லா விட்டாலும், தீவின் பெருமையையும், உங்கள் சுற்றுலாவின் மகிழ்ச்சியையும் வண்ணப்படங்களே பறைசாற்றி விட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு