நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், அக்டோபர் 29, 2015

சோலைவனச் சுற்றுலா 1

மஞ்சள் வண்ணம் உடையது.. பளபளப்பு மிக்கது..

ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றவல்லது..

இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்படுவனவற்றுள் உயர்வானது..

ஒரு குண்டுமணி அளவாவது வாங்கி வைத்திருக்க வேண்டும்!.. - என்ற, ஏக்கத்தை - விருப்பத்தை - அனைவருக்கும் ஏற்படுத்துவது..

ஒரு நாட்டின் நாணய மதிப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுவது..

ஒரு நிலையில் மருந்தாகவும் உரு மாற்றம் கொள்வது..

ஆடம்பர சூழல்களில் முதலிடம் வகிப்பது..

வேண்டுதல் வேண்டாமையற்ற மெய்ப்பொருளாகிய கடவுளுக்குக் காணிக்கை எனத் திகழ்வது..

கர்வம் கொண்டோர் - இல்லக் கதவுகளின் கைப்பிடியாக விளங்குவது..

காலங்கள் மாறினாலும் - மாறிடாதபடிக்குக் கள்வர்களின் இலக்காக இருப்பது..


தங்கம்...

செவிச் செல்வம் அல்லாத செல்வங்களுள் சிறந்ததாக இலங்குவது..

அதனால் தான் - நல்லவர் தம் மனங்களைக் குறிப்பதாயிற்று..

நாம் பெற்ற செல்வங்களைக் கொஞ்சி மகிழும் பெயராகவும் ஆயிற்று..

அரபு நாடுகள் தலையெடுக்கும்  - முன் சிங்கப்பூர் தங்க நகைகளை சிறப்பாகச் சொல்வார்கள்..

இப்போதும் அப்படித்தான்!..

ஆயினும், சமீபகாலமாக தங்க நகைகளின் மீதான மக்களின் கவனம் - துபாய்!..

சிலதினங்களுக்கு முன், துபை மாநகரைச் சுற்றி வந்த போது -
சென்ற இடம் - தங்க நகர் (Dubai City of Gold)..

கீழுள்ளவற்றில் முதல் மூன்று படங்கள் மட்டும் - இணையத்தில் பெற்றவை..

ஏனைய படங்களும் பதிவும் தங்களைக் கவரும் என நம்புகின்றேன்..

Thanks -Google
Thanks - Google
Thanks  Google

இந்த தங்க நகைக் கடைத் தெருவிற்குச் சென்றபோது - இரவாகி விட்டது..

மேலும் நெரிசலான கடைத்தெரு..

எல்லாவற்றையும் விட,
அங்கே உலவிக் கொண்டிருந்த - அரேபிய ஆப்ரிக்க பெண்கள்..

சமயத்தில் சிக்கல்கள் உருவாகிவிடக்கூடும்..

எனவேதான் - இன்னும் சிறப்பாக படமெடுக்க இயலவில்லை..
இருநூற்றுக்கும் மேலான கடைகள் இங்குள்ளன..

நம் நாட்டிலிருந்தும் - நகை வர்த்தக நிறுவனங்கள் இங்கு வந்து பெரிய அளவில் வணிகம் செய்கின்றனர்..

தங்கம் அறியப்பட்டதிலிருந்து அதை அடைவதற்கே மனிதன் மிகவும் முயற்சிக்கின்றான்..

குறுக்கு வழியில் தேடுவோர்க்கு இடையில் -
உழைப்பின் வழி நாடுவோர் தம் இல்லத்தில் உண்மையிலேயே தங்க மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றது..

அகமானாலும் புறமானாலும் - பழந்தமிழகத்தின் பனுவல்கள் பலவற்றிலும் தங்கத்தைப் பற்றி அறியக் கிடைக்கின்றது..

திருவாசகமாக - மாணிக்கவாசகப்பெருமான் - இறைவனைப் போற்றும்போது,

ஆடக மதுரைக்கு அரசே போற்றி!.. - எனத் துதிக்கின்றார்..

நால்வகைத் தங்க வகைகளுள் ஆடகம் என்பது ஒளிரும் செம்பொன்..

ஏனயவை - கிளிச்சிறை, சாதரூபம், சாம்புநதம் - என்பன..

கிளிச்சிறை என்பது வெள்ளியுடன் சேர்ந்த பசுந்தங்கம்..
சாதரூபம் என்பது வெட்டியெடுக்கப்பட்ட தூய தங்கம்..
சாம்புநதம் என்பது சற்றே செம்பு கலந்த மஞ்சள் நிறத் தங்கம்..

இதுவே - அணிகலன்களாகி நம்மிடயே இலங்குவது..

புற வாழ்வினில் மட்டுமின்றி
அக வாழ்வினிலும் பொன்னெனப் பொலிந்து
புகழ் பெறுவோம்!..

வாழ்க நலம்!..
* * * 

16 கருத்துகள்:

 1. பொன் பற்றிய அரிய கட்டுரை. துபாய் சென்றிருந்தபோது கோல்ட் சௌக் என்று கூறுவார்கள் என நினைக்கிறேன் அங்கே சென்று பார்த்ததுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தாங்கள் கூறும் இடம்தான்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. முற்றிலும் மாறுபட்ட பதிவு, தங்களிடமிருந்து. நன்றி. தங்கத்தைப் பற்றி பேச ஆரம்பித்து நாவுக்கரசப் பெருமான் சிவனைப் போற்றும் துதியைப் பகிர்ந்தது அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. வணக்கம் ஜி பலமுறை சென்று வந்தாலும் தங்களது பதிவில் ஏனோ ஜொலிப்பு அதிகமாக இருக்கிறது புன்னகையை விட பொன் நகை ஜொலிப்புதானோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   பொன் நகை ஜொலித்தாலும் புன்னகையே சிறப்பு..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஐயா! எனக்கு நீங்கள் பதிவில் எழுதியும் படங்களாகக் காட்டியும் என்ன சொல்லியிருந்தாலும் பதிவின் முடிவில் - கடைசியில் சொன்னீர்களே..
  ”புற வாழ்வினில் மட்டுமின்றி அக வாழ்விலும் பொன்னெனப் பொலிந்து புகழ் பெறுவோம்”
  ஆயிரத்தில் ஒரு வாசகம்! அதுவே மனம் நிறைத்தது!

  மகிழ்ச்சி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடயீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 6. பொன்நகை கண்கொள்ளாக் காட்சி. ஆசையைத் துற எனும் வாக்கியம் நினைவிற்கு வந்தது. மண், பொன், பெண் தானே உலக அமைதி கெடவும் கராணம். எனவே பொன்நகையைப் புன்னகையாய் மாற்றி இன்புறுவோம்...

  வாசகத்துடன் முடிவு வாசகர் எங்களுக்கும் வாசகமே!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   வகை வகையான பொன் நகைகளைப் பார்த்து மனம் மகிழ்ந்தாலும் - அதற்கப்புறம் வெற்றிடம் தான் மிச்சம்..

   தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. கடைசி பாடல் வரிகள் அருமை,
  புகைப்படங்கள் அனைத்தும் அழகு,
  வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. தங்கம் - திகட்டாத தங்கம்..... :)

  இங்கே பார்த்தால் ஆசை தான் அதிமகாகும் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு