நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 12, 2018

மார்கழிக் கோலம் 28

தமிழமுதம்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து..(398) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 28


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் 
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்..
*
தித்திக்கும் திருப்பாசுரம்


இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்..(2320)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம் 

திருத்தலம்
உவரி


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றூணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையவது நம சிவாயவே..(4/11)
-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :- 

இறைவன்
ஸ்ரீ ஸ்வயம்புலிங்க ஸ்வாமி 
அம்பிகை
ஸ்ரீ மனோன்மணி அம்பிகை

தல விருட்சம் -  கடம்பங்கொடி
தீர்த்தம் -  அக்னி தீர்த்தம், நாழிக் கிணறு

திருக்கோயிலின் நுழைவு வாயில்
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே..

-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :- 

உவரி - கடற்கரையின் 
அருகாக விளங்கும் திருக்கோயில்..

ஏக நாயகனாக எம்பெருமான்
மூலஸ்தானம் மட்டுமே..

அம்பிகை சூட்சும ரூபமாக
கருவறையில் உறைவதாக ஐதீகம்..

எனவே
திருக்கோயிலில்
அம்பிகை சந்நிதி கிடையாது..தவிரவும்
விநாயகர் முருகன் 
தனிச் சந்நிதிகளும் இல்லை...

ஆயினும், 
உற்சவத் திருமேனிகள் உள்ளன..

மூலஸ்தான வாசலுக்கு அருகில்
விநாயகப் பிரதிஷ்டை மட்டுமே..ஸ்ரீ பத்ரகாளி - 
பிரம்ம சக்தி எனும் திருப்பெயருடன்
தனிக்கோயிலில் உறைகின்றாள்..

பரிவார மூர்த்திகளாக 
ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடசாமி மற்றும்
ஸ்ரீ இசக்கியம்மன் ஆகியோர் 
தனி மண்டபத்தில் விளங்குகின்றனர்..

ஸ்ரீ முன்னோடியார் ஸ்வாமி
பரிவாரங்களுடன் திகழ்கின்றார்..

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்
திருக்கோயிலின்
தென்புறம் பனஞ்சோலையில்
கன்னிமூலை கணபதியும்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத
ஸ்ரீ வன்னியடி சாஸ்தாவும்
தனிக்கோயில் கொண்டுள்ளனர்..
தைப்பூசத் தேரோட்டம்
வைகாசி விசாகம், ஆவணிக் கொடை,
கந்த சஷ்டி, தைப் பூசம், சிவராத்திரி
முதலானவை சிறப்பான 
உற்சவ நாட்கள்..

உவரி - எங்களது 
குலதெய்வத் திருக்கோயிலாகும் 
*
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்

பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே..5/100
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
திருப்பாடல்கள் 19 -20


முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் 
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்...

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்...

*

ஸ்ரீ மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி..
இந்த அளவில் 
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திரு அம்மானையின் 
திருப்பாடல்கள் நிறைவடைகின்றன.
*.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

 1. தமிழமுதம் பருகி உவரி பெருமானை வணங்கி தரிசனம் பெற்றேன்.

  பதிலளிநீக்கு
 2. 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு "எருமைக்கண்" ஏமாப்புடைத்து' என்று நான் பள்ளி நாட்களில் சொல்லி தெய்வசிகாமணி டீச்சரிடம் திட்டு வாங்கியது நினைவுக்கு வருகிறது!

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் துரை சகோ! அருமையான தரிசனம்....உவரி அப்பன் உங்கள் குலதெய்வமா!!? ஆஹா! சுயம்பு லிங்கம் மிக மிக அழ்காக இருக்கிறார். உவரி வழியாகச் சென்றதுண்டு ஆனால் கோயிலுக்குச் சென்றதில்லை..கடற்கரைக் கோயில் அழகு!! செல்ல வேண்டும் என்ற அவா வந்துவிட்டது....கோயில் பற்றியும் அறியமுடிந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  இனிய தரிசனம் இன்றும் பெற்றேன்!..
  உவரி திருக்கோயில் சிறப்புகளும் அறியத் தந்தமை மகிழ்ச்சி!

  நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 5. ஆவ்வ்வ்வ்வ் துரை அண்ணன்.. அதுக்குள் மாருவளி:) முடிஞ்சிடப்போகுதேஏஏஏஏஏஏ. இனிப் பொங்கலோஓஓஓஒ பொங்கல்ல்.. நீங்க பொங்கலுக்கு சாமான் எல்லாம் வாங்கிட்டீங்களோ? சக்கரைப் பொங்கல்? வெண் பொங்கல்? கற்கண்டுப் பொங்கல்.? என்ன பொங்கல்ல்ல்ல் பொயிங்கப்போறீங்க?:)...

  பதிலளிநீக்கு
 6. இன்றும் வருகைப் பதிவு செய்கிறேன்

  பதிலளிநீக்கு