தமிழமுதம்
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..(392)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
ஓம் ஹரி ஓம்
அவருக்கு ஏற்பட்ட சாபம் நீங்குதற்காக
வலியன் எனப்படும்
கரிக்குருவியாக வடிவம் கொண்டு
சிவபூஜை செய்தார் என்பது தலபுராணம்..
வள்ளி தேவயானையுடன் திருமுருகன் |
ஸ்ரீ தேவகுரு பிரகஸ்பதி - வியாழன் |
அவரது தந்தையாகிய பிரகஸ்பதியும்
இங்கே சிவ வழிபாடு செய்தமையால்
குரு ஸ்தலம் என விளங்குகின்றது..
ஸ்ரீ ராமபிரான், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்
வணங்கிய திருத்தலம்..
ஸ்ரீ காலபைரவர் |
நலம் விளைகின்றது என்பது
பக்தர்களின் நம்பிக்கை...
சென்னையில் அம்பத்தூருக்கு அருகில்
அமைந்துள்ளது பாடி..
*
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு
ஒற்றையேறதுடை யான் நடமாடியோர் பூதப் படைசூழப்
புற்றில்நாகம்அரை யார்த்துழல்கின்ற எம்பெம்மான் மடவாளோடு
உற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும் வலிதாயம்
பற்றிவாழும்அது வேசரணாவது பாடும் அடியார்க்கே..(1/3)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
திருப்பாடல்கள் 15 - 16
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்...
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்...
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ!!!
பதிலளிநீக்குமாலே மணிவண்ணனையும், ஜகதாம்பிகை அம்மையையும், ஸ்ரீவலிதாயநாயகன் அப்பனையும் தரிசனம் கண்டோம்!!! படங்கள் அருமை!
கீதா
தேவகுரு பிரகஸ்பதியின் மகன் பரத்வாஜர் (பரத்வாஜ முனிவர்??) என்பதை உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்...என் மகனின் அஃபிஸியல் பெயர் பரத்வாஜ்! பரத்வாஜ மினிவர் விமான ஸாஸ்திரம் எழுதியவர் என்பதால் அப்பெயரைச் சூட்டினார்கள் எங்கள் புகுந்த வீட்டில்...
பதிலளிநீக்குகீதா
சிறப்பான தரிசனம்.
பதிலளிநீக்குதொடரட்டும் மார்கழி சிறப்பு பதிவு.
பாடல்களைக் கண்டேன், அருமை. திருவலிதாயம் சென்றதில்லை ஐயா. செல்லவுள்ள கோயில் உலா பட்டியலில் சேர்த்துவிட்டேன்.
பதிலளிநீக்குஇன்றைய பாடல்களும், படங்களும் நன்று.
பதிலளிநீக்குபல சிறப்பான தகவல்களுடன்....
பதிலளிநீக்குஆலி இலை கண்ணனை தரிசித்தேன்....
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குகார்முகில் வண்ணனையும் திருவலிதாயத்தில் வீற்றிருக்கும்
எம் பெருமானையும் பிராட்டியையும் அவர் குமாரரையும்
காலபைரவரையும் கண்ணாரக் கண்டு தரிசித்தேன்.
திருவலிதாயத் திருத்தல மஹிமைகளையும் அறிந்துகொண்டேன்.
மிகச் சிறப்பு ஐயா!
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!
இன்றும் வந்து விட்டேன்
பதிலளிநீக்குநேற்றைய தரிசனம் இன்று... இன்றிய தரிசனம்? அதையும் இன்றே முடித்து விடுவோம்!
பதிலளிநீக்கு