நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 26, 2018

நாடு வாழ்க...

வாத்யாரே.. வாத்யாரே!..
இன்னைக்கு என்னா பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் லீவா?..

ஆமா.. இன்னைக்கு குடியரசு தினமாச்சே... விடுமுறை தான்!..
காலை..ல போய் கொடியேத்திட்டு இப்போ தான் வந்தேன்..


குடியரசு தினம்... ந்னா இந்த சுதந்திரக் கொடியேத்தி
மிட்டாய் எல்லாம் கொடுப்பாங்களே அதானே!..

சுதந்திரக் கொடி... ந்னு இல்லை... அது நம்ம தேசியக் கொடி...
வெள்ளைக் காரனுங்க கிட்டயிருந்து விடுதலையான நாளும்
குடியரசு ஆன நாளும் முக்கியமானவை..
அதனால அந்த நாளை சந்தோஷமா கொண்டாடுறோம்...

ஏங்க.. நாம மெய்யாலுமே விடுதலை ஆயிட்டமா!...

என்ன இது.. ஏன்.. சின்னமணி இப்படிக் கேக்கிற?...

குடியரசு.. அப்படி..ன்னா என்னாங்க!...

மக்களுக்கான.. மக்களின் ஆட்சி.. மக்களாட்சி.. குடியாட்சி!..

அப்போ அதுக்கு முன்னால?...

அது மன்னராட்சி.. முடியாட்சி!..

ஓஹோ!.. மக்களுக்கான.. ஆட்சி.. அப்படீ...ங்கிறீங்க...

ஆமா!...

மக்கள்.. அதாவது.. நம்மளோட ஆட்சி..

ஆமா..மா!..

அப்புறம்.. ஏங்க...
எங்க பேங்கு கணக்குல எங்க பணம் கம்மியா இருக்கு...ன்னு
எங்களோட பணத்தை அவங்க எடுத்துக்கிட்டாங்க!..

அது... நிர்வாகம்.. பராமரிப்பு!... அதுக்குன்னு சொல்றாங்க!..

அதாவது தினசரி எங்களோட பணத்தை வெளியில எடுத்து
சுத்தம் பண்ணி துடைச்சி வெச்சாங்களாமா!?..

.... .... ....

அந்த பேங்குல எழுதியிருக்கான்.. இது உங்களோட பேங்கு..ன்னு!...
உங்களோட பேங்கு..ன்னு எழுதிட்டு எங்களோட பணத்தை அவன்....ல
எடுத்துக்கிட்டுப் போயிட்டான்!...

பொன்னுமணி ரெண்டு நாளா அழுதுக்கிட்டு இருந்தா... தெரியுமா!..
அது அவ கஷ்டப்பட்டு சேத்து வைச்ச காசு...

போன வரைக்கும் சரி..ன்னுட்டு வேற பேங்குக்கு
பணத்தை மாத்தி வெச்சிருக்கா!...

இப்படித்தான்..
இது உங்கள் சொத்து...ன்னு சொல்லிக்கிட்டு இருந்தானுங்க..
திடீர்....ன்னு பஸ்ஸு டிக்கெட் விலை ஏறிப் போச்சு...
ஒரு நாளைக்கு எட்டு ரூவா ஜாஸ்தியா கொடுத்து
அரிசி மில்லுக்குப் போக வேண்டி இருக்கு...

பஸ் டிக்கெட்டு நமக்கு கட்டுப்படியாகாது...ன்னு
சுமாரான சைக்கிள் ஒன்னு வாங்கிட்டேன்...

பொழப்பு ஓடணுங்களே... இதெல்லாம் சொல்லி முதலாளி....கிட்ட
சம்பளம் கூடுதலா கேட்டா.. இஷ்டம்..ன்னா இரு.. அப்பிடிங்கிறார்...

பாலு சீனி மண்ணெண்ணை..ன்னு எல்லாம் ஏகத்துக்கு
வெலை ஏறினா எங்க மாதிரி ஏழை பாழைங்க.. என்னா செய்யிறது..ங்க!...

இது தான் நம்மளோட ஆட்சி...ங்களா!..

தெருவுல பொறம்போக்கு ஒருத்தன் இருக்கிறான்...
பொழுதுக்கும் சாராயக் கடையில சுத்துறதும்
பொண்ணுங்க...கிட்ட வம்பு வளர்க்கிறதும் தான் வேலை...
போன வாரம் அவனைப் புடிச்சி அடிச்சி உதைச்சி
போலீஸ்... ல கொடுத்தோம்...

இதோ நேத்து வெளியில வந்து சுத்திக்கிட்டு இருக்கான்...
அதுக்குத் தான் நாங்க ஒரு ஐடியா வெச்சிருக்கோம்!..

அட... சின்னமணி.. ஆத்திரத்து..ல ஏதாவது செஞ்சிடாதீங்க..
ஏடாகூடம் ஆகிடும்... அந்த வம்பெல்லாம் வேண்டாம்!...

அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீங்க பயப்படாதீங்க...

தெருக் குழாய்...ல தண்ணி வர்றதில்லை... 
ரோட்டு விளக்கு எரியறதே இல்லை...

குப்பை அள்ளுற லாரி இருக்கா.. இல்லையா..ன்னு தெரியலை...

இத்தனை வருசமா ஏழை ஜனங்களுக்கு..ன்னு ஒன்னும் செய்யலை..
இதுல.. மக்களாட்சி..மக்களாட்சி... ந்னு கூப்பாடு!..

வருத்தப்படாதே.. சின்னமணி...
இந்தக் கஷ்டம் எல்லாருக்கும் இருக்கு..
நிச்சயம் மக்களுக்கான ஆட்சி மலரும்!..

என்னமோ சொன்னீங்களே.. மன்னர் ஆட்சி...ன்னு..
அவங்க ஆட்சி செஞ்சப்போ ரோட்டு ஓரத்துல எல்லாம்
மரத்தை வெச்சாங்களாம்... குளத்தை வெட்டுனாங்களாம்...
தப்பு தண்டா செஞ்சா இழுத்துப் போட்டு மிதிச்சாங்களாம்..

ராஜாவும் மந்திரியும் மாறு வேசம் போட்டுக்கிட்டு
ஊரை சுத்தி வந்து ஜனங்களுக்கு எது நல்லது..ன்னு
யோசிச்சி செஞ்சு கொடுத்தாங்களாம்...
இன்னைக்கு அந்த மாதியா இருக்கு?..


நீ சொல்றதெல்லாம்..சரி தான்!...
காலகாலமா நல்லா இருந்த
நிர்வாகம் இப்போ புரையோடிப் போச்சி..
கொஞ்சம் கொஞ்சமாத் தான் சரியாகும்!..

என்னமோ..ங்க நான் அந்த அளவுக்கு படிக்காதவன்..
ஏதாவது குத்தங்குறையா சொல்லியிருந்தா பொறுத்துக்கணும்!...

நீ வேற சின்னமணி.. படிச்சவங்களும்
இப்போ இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க...

ஆனாலும் நம்ம நாடு நமக்கு முக்கியமில்லையா!..
ஜனங்க வருவாங்க..போவாங்க...
நம்ம நாடு நம்ம பூமி என்னைக்கும் நிலைச்சு இருக்கும்...

நீ சொன்ன மாதிரி பார்த்துப் பார்த்து ஆட்சி செஞ்ச
ராஜாக்களே போன இடம் தெரியாம போய்ட்டாங்க!...
இவங்கள்ளாம் எத்தனை நாளைக்கு?...

நீங்க சொல்றதும் சரிதான்..
எல்லாம் ஒரு நாளைக்கு மாறித் தானே ஆகணும்!..
எப்படியோ நாடு நல்லா இருக்கட்டும்..
நான் மாங்கா கதை கேக்கலாம்..ன்னு வந்தேன்!..

சின்னமணி... நம்ம நாட்டோட தேசிய பழம் எதுன்னு தெரியுமா!...

தெரியாதுங்களே!..


மாம்பழம் தான் நம்முடைய தேசிய பழம்!..

ஆகா!.. மாம்பழத்துக்குப் பெருமைதான்!..
அப்போ நான் புறப்படுறேன்...

நீ...வா.. மத்தியானத்துக்கு நம்ம வீட்ல தான் விருந்து..
பொன்னுமணிய அழைச்சுக்கிட்டு வந்துடு...

என்னா விசேஷங்க?...

குடியரசு நாள் தான் விசேஷம்!...

ஓகோ!...

பொன்னுமணி...ய சைக்கிள்.. ல வெச்சிக்கிட்டு தட...தட...ன்னு வராதே..
சாலையெல்லாம் குண்டும் குழியுமா கிடக்கு..
புள்ளத்தாச்சிப் பொண்ணு... உடம்புக்கு ஆகாது!..

சரிங்க வாத்யாரே!...
***


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறிமனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
- மகாகவி பாரதியார் - 

வாழ்க பாரதம்..
வளர்க தமிழகம்!..

அனைவருக்கும் 
குடியரசு தின நல்வாழ்த்துகள்..

ஜய் ஹிந்த்!..
 ***

12 கருத்துகள்:

  1. பேங்குல எழுதி வச்சிருக்கறதை அவங்க படிச்சா அது நம்ம பேங்க். நாம் படிச்சா அது அவங்க பேங்க்!

    நம்மை நாமே ஆளாகிறோம் என்று நமக்குள் பெருமைப் போட்டுக்கொள்ள மட்டுமே உதவுகிறது. ஆள்கிறோமா, சுரண்டுகிறோமா, சுரந்து அனுமதிக்கிறோமா...

    என்னவோ போங்க...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஹப்பா இப்பத்தான் அண்ணா உங்க பதிவு திறந்துச்சு!!!!!! எபியோடவே இதையும் தொறந்துட்டேன்..மனசு சொல்லிச்சு இன்னிக்கு உங்க பதிவு இருக்கும்னு!!! இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...இதோ முழுசும் வாசித்துவிட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. முதல்ல அந்த பேங்கு கணக்குக்கு வரேன்...ரொம்ப தொந்தரவா இருக்கு எங்க அக்கவுன்ட்ல இருந்து பணம் இருக்கேனு எடுக்கலாம்னு போனா எடுக்க முடியலை...நாம எடுக்கவெ இல்லையே எப்படிப் பணம் போச்சுனு யோசித்து சரி அக்கவுன்ட் செக் பண்ணுவோம்னு பார்த்தா...அடப் பாவிங்களா....ஜிஎஸ்டினு கணக்கு போட்டு கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கும் மேல போயிருந்துச்சு....இது அம்பானி, அதானிகளுக்கும் அப்புறம் எங்கேயோ ஒளின்ஞ்சுருக்கானே ஒருத்தன் அவனுக்கு வேணா சின்ன காசா இருக்கலாம்...நம்மைப் போன்றவங்களுக்கு எல்லாம்....அவங்களை எல்லாம் பிடிக்க முடியலை நம்ம குடியரசு நாட்டினால...அப்புறம் எதுக்கு மக்களுக்காகனு...அட போங்க அண்ணா.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பானி, அதானிகள்! இந்தியாவிலேயே இவங்க ரெண்டே ரெண்டு தொழிலதிபர்கள் தான் போல! :))))) ஜிஎஸ்டி எங்களுக்கும் பிடிக்கிறாங்க வங்கியிலே ஆனால் ஆயிரக்கணக்கில் எல்லாம் இல்லை! இத்தனைக்கும் தனியார் வங்கி! ம்ம்ம்ம்ம்ம்? இது குறித்து வங்கி ஊழியரான என் தம்பியிடம் விபரமாக விசாரிக்கணும்!

      நீக்கு
  4. கீதா: பதிவில் பல ஆதங்கங்கள்! என்றாலும் நேர்மறையாகச் சிந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோம்!! வேறு வழி?!

    மன்னராட்சியே பரவாயில்லையோ என்று தோன்ற வைத்துவிட்டன நம் நாடு போகும் போக்கைப் பார்த்து...இப்போதும் சுதந்திரம் என்றும் குடியரசு என்றும் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உலகிற்கே தெரிந்தாலும் எந்த பணமுதலைக் குற்றவாளிகளும் சட்டத்தில் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். பாதிக்கப்படுவது எல்லாமே அடித்தட்டு மக்களும், நடுத்தரவர்கமும் தான்.

    துளசி: பதிவு அருமை. எல்லோர் மனதும் இங்கு வெளிப்பட்டிருக்கிறது.

    இனிய குடியரசுதின வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. ஹை மாம்பழம் மீண்டும்...ஆம் நம் தேசீய க் கனி

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஜி
    சமூக அவலத்துக்கு இதன் வழி ஒரு சாட்டையடி ஆனால் இவனுகளுக்கு வலிக்க மாட்டுதே......

    குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. என் வங்கி அக்கௌண்டைச் செக் செய்யணும் இருக்கும் பணமிருக்கா இல்லையா தெரிந்து கொள்ள நம்மை நாமே ஆள்கிறோம் என்று சொல்லியே 69 ஆண்டுகள் ஆகிறது

    பதிலளிநீக்கு
  8. பூனைவரும் பின்னே, கழுத்து மணி ஓசை வரும் முன்னே எண்டிச்சினமாம்:)...

    இதனாலதானோ இன்று குடியரசு தின வாழ்த்து.. நேற்று மாம்பழம் பற்றிய அருமை பெருமைப் போஸ்ட்டூஊஊஉ:))/...

    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... இன்றுகூட துரை அண்ணனை வேர்க் பண்ண வச்சிட்டினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  9. வங்கியிலே திறந்திருக்கும் கணக்கை நாம் அடிக்கடி பணம் போட்டு எடுத்துனு செய்யாமல் இருந்தால் தான் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பணத்தை வங்கி எடுத்துக்கும். இப்போக் கூட அப்பாதுரை அது மாதிரித் தான் சொல்லி இருக்கார்! ஆனால் ஏழை, எளியவர்கள் பணத்தை எடுத்துக்கும்னு சொல்றது! அதுவும் பணம் குறைச்சலா இருக்கிறதுக்காக எடுத்துக்கறது என்பது! விசாரிக்கணும்! தீர விசாரிச்சுட்டு இதைப் பத்திச் சொல்லணும்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..