இன்று தைப்பூசத் திருநாள்..
உலகெங்கும் உள்ள சைவப் பெருமக்கள் அனைவரும்
முருகப் பெருமானைக் கொண்டாடி மகிழும் நன்னாள்...
தைப் பூசத் திருநாளினைப் பற்றி
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
திருப்பதிகங்களில் குறித்தருள்கின்றனர்..
சிவாலயங்கள் தோறும் கோலாகலமாக வைபவங்கள் நிகழ்கின்றன..
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான் ஜோதியாகிய நாளும் இதுவே..
பேற்றைத் தவஞ்சற்றும் இல்லாத என்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே..(01)
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டுஅரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே..(13)
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும் என்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே..(15)
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே..(22)
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே..(26)
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்திருக்கை
வேலென் கிலைகொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே..(30)
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே..(38)
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்குஎன்தலை மேலயன் கையெழுத்தே..(40)
ஆலுக் கணிகலம் வெண்தலை மாலை அகிலமுண்ட
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே..(90)
சலங்காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்டநோய் அணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தன் நன்னூல்
அலங்கார நூற்றுள் ஒருகவிதான்கற்று அறிந்தவரே..(101)
உலகெங்கும் உள்ள சைவப் பெருமக்கள் அனைவரும்
முருகப் பெருமானைக் கொண்டாடி மகிழும் நன்னாள்...
தைப் பூசத் திருநாளினைப் பற்றி
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
திருப்பதிகங்களில் குறித்தருள்கின்றனர்..
சிவாலயங்கள் தோறும் கோலாகலமாக வைபவங்கள் நிகழ்கின்றன..
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான் ஜோதியாகிய நாளும் இதுவே..
இந்த நன்னாளில்
அருணகிரிப்பெருமான் அருளிய
கந்தர் அலங்கார நூலில் இருந்து
சில திருப்பாடல்களைச் சிந்தித்திருப்போம்..
சிவகுமரனின் திருவடிகளை வந்தித்திருப்போம்...
பேற்றைத் தவஞ்சற்றும் இல்லாத என்னைப்ர பஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே..(01)
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டுஅரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே..(13)
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும் என்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே..(15)
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே..(22)
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே..(26)
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்திருக்கை
வேலென் கிலைகொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே..(30)
திருமுருகன் - கீழ்வேளூர் - திருஆரூர்.. |
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே..(38)
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்குஎன்தலை மேலயன் கையெழுத்தே..(40)
ஆலுக் கணிகலம் வெண்தலை மாலை அகிலமுண்ட
மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறும் ஐயன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே..(62)
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே..(70)
ஸ்ரீ வெற்றிவேல் முருகன் தஞ்சை பெரியகோயில் |
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவா தவர்க்கு ஒரு தாழ்வில்லையே..(72)
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்குங்
கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே..(79)
குமரகோயில் - கன்யாகுமரி |
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே..(90)
சலங்காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்டநோய் அணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தன் நன்னூல்
அலங்கார நூற்றுள் ஒருகவிதான்கற்று அறிந்தவரே..(101)
***
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை...
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்..
***
அன்பின்ஜி
பதிலளிநீக்குதைப்பூசத்தரிசனம் தந்தமைக்கு நன்றி
முருகா சரணம்
வேலுண்டு விலையில்லை
பதிலளிநீக்குமயிலுண்டு பயமில்லை.
முருகா சரணம்.
அருமையான தை பூச பதிவு.
வாழ்த்துக்கள்.
முருகா சரணம்...
பதிலளிநீக்குகந்தா சரணம்.....
வடிவேலா சரணம்.....
முருகனின் திருநாள். கந்தரலங்காரப் பாடல் வரிகள் சீர்காழி குரலில் மனதில் ஒலிக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதைப்பூசப் பக்திப் பரவசப் பதிப்புக் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.
கந்தரலங்காரத்திலிருந்து சிதறிய சில மணிகளும் மிக அருமை!
கருணைக் கந்தனின் படங்களும் அழகு!
அனைவருக்கும் கந்தன் நல்லருள் நல்கட்டும்!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
வேலைக் கையில் பிடித்துக் கொண்டு பாம்பாரை மிதித்த வண்ணம் நிற்கும் ஓவியம் ரவிவர்மா வரைந்ததோ? எல்லாப் படங்களும் அருமை! கந்தரலங்காரத்தின் பாடல்வரிகளும் ஶ்ரீராம் சொல்வதைப் போல் சீர்காழியின் நினைவை ஊட்டியது!
பதிலளிநீக்குமுருகா...
பதிலளிநீக்குஎன் அப்பனே...
அரோகரா...
யாமிருக்கப் பயமேன்!!!
பதிலளிநீக்குஅருமை.
முருகன் தரிசனம்!! ஆஹா! பாடல்களும், படங்களு அழகு.
பதிலளிநீக்குமனதிற்குப் பிடித்த இறைவன். தோழன்! அவ்வை பேசியது போல் முருகனுடன் நாமும் பேசலாம்...
கந்தரலங்காரப் பாடல்கள் அருமை. தமிழ் இனிக்கிறது இல்லையா...
கீதா: அக்கருத்துடன்..துரை அண்ணா..இவ்வளவு இனிய தமிழைக் கரைத்துக் குடித்ததனால்தான் உங்கள் தமிழும் இனிக்கிறதோ!!!!! அருமை!!
நன்றி ஐயா
பதிலளிநீக்குஎங்கள் வீட்டருகில் உள்ள கோயிலில் காலையில் பூசைகள் இருந்தாலும் மாலையிலும் நடக்கும். நேற்று சந்திரகிரகணம் என்பதால் கோயிலில் மாலை வழிபாடுகள் இல்லை. கோயில் மூடப்பட்டுவிட்டது...முன்பெல்லாம் மாலையில்தான் காவடி எடுப்பது எல்லாம் நடக்கும் என்பதால் நேற்று காலையிலேயே நடந்துவிட்டது....புறப்பாடு எல்லாம் நடத்திவிட்டதாக அறிந்தேன்....செல்ல முடியாமல் போய்விட்டது.
பதிலளிநீக்குகீதா