நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 08, 2018

மார்கழிக் கோலம் 24

தமிழமுதம்

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..(127) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 24அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி 
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் 
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்..   

தித்திக்கும் திருப்பாசுரம்


உற்று வணங்கித் தொழுமின் உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம் - பற்றி
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை ஏத்துமென் நெஞ்சு..(2275)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணைசிவ தரிசனம்

திருத்தலம்
திருஆலங்காடு


இறைவன்
ஸ்ரீ வட ஆரண்யேஸ்வரர்  

அம்பிகை
ஸ்ரீ வண்டார்குழலி

தல விருட்சம் - ஆல்
தீர்த்தம் - முக்தி தீர்த்தம்இத்தலத்தில்
 காளிகாம்பிகையுடன் ஈசன்
ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்தினன்.. 

ரத்ன சபை என்று
புகழப்படுகின்றது..


காரைக்கால் அம்மையார்
முக்தி நலம் எய்திய திருத்தலம்..

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதமும் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே..(1/45)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


கூடினார் உமைதன்னோடே குறிப்புடை வேடங்கொண்டு
சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாமவேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே..(4/68)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

வண்டார்குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங்காடா உன்னடியார்க்கு அடியன் ஆவேனே..(7/52) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை
11 -  12


செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்...

மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய்...


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

 1. காலை தரிசனம் ஆச்சு. ஓங்கி உலகளந்த பெருமாள்.

  பதிலளிநீக்கு
 2. திரு ஆலங்காடு காணும் நாளை எதிர்நோக்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இன்றைய தரிசனம் நலமுடன்....

  பதிலளிநீக்கு
 4. துரை செல்வராஜு சகோ. இனியா காலை வணக்கம்....ஓங்கி உலகளந்த உத்தமனையும் காரைக்கால் அம்மையார் முக்திநலம் எய்திய திருத்தல த்தையும் தரிசனம் கண்டோம்...அருமை..திரு அம்மானையில் ஏதோ ஒரு பாடல் பள்ளியில் படித்த நினைவு...பார்த்த்துக் கொண்டே வருகிறேன்...

  ஆ...இக்கருத்தை காலையில் எபி யில் கருத்து போட்டு.. இங்கும் பார்த்து கொடுத்தது...போகாமல் அப்படியே நின்றது...சுற்றிக் கொண்டே...இதோ அதை இப்ப மொபைலில் அடித்து அனுபரேன்...கணினி எழுவதற்கு இன்னும் நேரம் பிடிக்கும்....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஓங்கி உலகளந்த உத்தமன், நடனமாடும் நடராஜர் இருவரின் தரிசனமும் கிடைத்தது.

  தொடரட்டும் மார்கழி கோலங்கள்...

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா!

  உலகளந்தான் ஊர்த்துவத் தாண்டவத்தான் எங்கள்
  புலனளந்தால் ஊழ்வினையும் போம்!

  அற்புதத் திருக்காட்சிகள்! மனம் நிறைந்த தரிசனம்!
  நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. அச்சச்சோ இன்று படங்களைப் பார்க்கவே நடுங்குது:) அனைவரும் ருத்ர தாண்டவம் ஆடீனம்... நானில்ல நானில்ல என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்கோ மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊஊஊ:))

  பதிலளிநீக்கு