நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 05, 2018

மார்கழிக் கோலம் 21

தமிழமுதம்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்..(121)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 21


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.. 
  
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள்
கோழிகுத்தி - மயிலாடுதுறை
பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு..(2262)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருச்செங்குன்றூர்


இறைவன் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ பாகம்பிரியாள்

தல விருட்சம் - இலுப்பை
தீர்த்தம் - தேவதீர்த்தம்இன்றைய நாளில்
திருச்செங்கோடு எனப்படுகின்றது..

மலையின் உச்சியில் 
திருக்கோயில் உள்ளது..

ஸ்ரீ தேவி பூதேவி சமேத 
ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும்
மலைமேலுள்ளது..


செங்கோட்டு வேலவன்
திருச்செங்கோட்டு வேலவன்
மிகவும் புகழ் பெற்றவன்..

இப்பெருமானை
அருணகிரியார் பலவாறாகத் துதிக்கின்றார்..

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருப்பாட்டு வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீறுரு செஞ்சடையன் கழலேத்தல் நீதியே..(1/107)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்
திருஅம்மானை 05- 06 

  
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையன் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்...

கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
நீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாங் காட்டிச் சிவங்காட்டி
தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி
நாட்டார்நகை செய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான் கொண் டாண்டவா பாடுதுங் காண் அம்மானாய்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

9 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை சகோ!!

  அழகான படங்கள். அதுவும் கடைசிப் படம் ரொம்ப அழகு அது போல கடல் காட்சி...

  வானமுட்டி சென்றதில்லை. இத்தனைக்கும் மயிலாடுதுறை வழியாகச் சென்றதுண்டு...

  திருச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) இதுவும் சென்றதில்லை..

  அழகான தரிசனம்..மனதிற்கு இதம்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. திருப்பாவைப் பாடல் படம். கண்ணன் வாயிலிருந்து வேய்ங்குழல் அகன்றதால் ராதையின் நடனம் Freeze ஆகியிருப்பது போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. திருப்பாசுரப் பாடலை கேட்கும்போது அதை ஒட்டி நம் திரைக்கவிஞர் எழுதி இருக்கும் பாடல் நினைவுக்கு வருகிறது. (மோசமான ஆளுய்யா நீ என்கிறீர்களா!) ராஜரிஷி படப்பாடலான "மான்கண்டேன் மான்கண்டேன் மானேதான் நான் கண்டேன் நான் பெண்ணைக் காணேன்..."

  பதிலளிநீக்கு
 4. அழகிய படங்கள். தரிசனம் செய்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 5. பாடல்களை ரசித்தேன். திருச்செங்கோடு இறைவனைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்....

  பதிலளிநீக்கு
 7. பாடல்களும், அழகிய படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஐயா!

  எங்குமுள ஈசனை எண்ணுவாய் நெஞ்சமே!
  பொங்கும் மகிழ்வொடு போற்றியே! - அங்கமதின்
  பங்கில் இடமீந்தான் பாவைக்கே! அன்னவனெம்
  சங்கரன் தாளே சரண்!

  அருமையான தரிசனம்!
  அறிந்தேன் இன்றும் பல விடயம்.

  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 9. படங்கள் ரொம்பவும் அழகு. தித்திக்கும் பாசுரங்களை திகட்டாமல் தரும் உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு