நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 17, 2018

தித்திக்கும் திருவிழா

தை முதல் நாள் மகர சங்கராந்தி..

நன்னாளாகிய அன்று மாலை தஞ்சை பெரிய கோயில்
மகா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன..

அதனைத் தொடர்ந்து -

தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் (15/ ஜனவரி)

அன்றைய தினம் காலையில் 750 கிலோ காய்கனி வகைகளாலும் 250 கிலோ இனிப்புகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது..

மேலும் -
அன்றைய தினம் திருக்கோயில் வளாகத்தில் 108 கோபூஜையும் நடத்தப் பெற்றது..

தஞ்சை மாநகர மக்களும் சுற்று வட்டார மக்களும் வெளியூர் அன்பர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்...

அந்த நிகழ்வுகளின் படங்கள் இன்றைய பதிவில்!..

நந்தியம்பெருமானை அலங்கரித்த காய்கனி இனிப்புகள் எல்லாம் மறுநாள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..தை மூன்றாம் நாள் கன்னிப் பொங்கல்.. 

வெகு சிறப்புடன் -
தஞ்சை மேல ராஜவீதியில் மாபெரும் கோலப் போட்டி நடைபெற்றது..

பாட்டி முதல் பேத்தி வரை உற்சாகத்துடன் பலர் கலந்து கொண்டனர்..
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன..


அந்த நிகழ்வின் படங்கள் இதோ!..மேலே இணைக்கப்பட்டுள்ள
அனைத்துப் படங்களையும் வழங்கியவர்
திரு. ஞானசேகரன்., தஞ்சை..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***
கும்மி குலவையுடன்
கன்னித் தமிழ்ப் பொங்கல்..


பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்!..

பொங்கல் பதிவுகளுக்கு வருகை தந்து
வாழ்த்தி மகிழ்ந்த அன்பு நெஞ்சங்களுக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்...

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.. 
***

10 கருத்துகள்:

 1. தஞ்சை கோவில் நந்திக்கு வண்ணம்பூசி இருப்பதுபோல் இருக்கிறதே தெரு அடைத்த கோலங்கள் எனக்கு சிவகுமாரனின் கவிதையை நினைவு படுத்துகிறது நீளம் தாண்ட ப் பழகோணம்

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஜி
  புகைப்படங்களின் தெளிவு பிரமிக்க வைக்கிறது திரு. ஞானசேகரன் அவர்களுக்கு எமது நன்றிகளும்...

  பதிலளிநீக்கு
 3. பார்க்க‌ முடியாத காட்சிகளை பார்ப்பதற்கு அளித்த தங்களுக்கு அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  அறியாதன அறிந்துகொண்டேன்!
  அழகழகாய்ப் பிரமிக்க வைக்கும் வண்ணப் படங்கள் மிக அருமை!
  தங்களின் நண்பருக்கும் தங்களுக்கும் நன்றிகள் பல.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. தஞ்சைக்காட்சிகள் சிறப்பு. அங்கு போகாமலேயே இங்கேயே தரிசனம். தஞ்சை ஒளிர்கிறது.

  பதிலளிநீக்கு
 6. அருமையான விழா நிகழ்வுப் படங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நந்தி பெருமான் அலங்காரம் அருமை ...அழகு...

  கண் கொள்ளா கோலங்கள்....சிறப்பு

  பதிலளிநீக்கு
 8. நந்தி எம்பெருமானின் அலங்காரம் மனதைக் கொள்ளை கொள்ள வைக்கிறது. அதன் பின் அவை அடுத்த நாள் விநியோகம் செய்யப்பட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம். கோலப் போட்டியும் அருமை. அழகானகோலங்கள். படங்கள் வெகு அழகு!

  பதிலளிநீக்கு
 9. நந்தி அலங்காரம் கண்டுகொண்டேன். கோலப்போட்டியும் புதிது. சென்னையில் எங்கே இதை எல்லாம் காணுவது.

  பதிலளிநீக்கு