நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 15, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 2
சஷ்டி திதியுடன் 
கார்த்திகை நட்சத்திரம் கூடிய
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
திருவிடைக்கழி


தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான ... தனதான

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
     பகரும்வினைச் செயல்மாதர் ... தருமாயப்

படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
     பழமைபிதற் றிடுலொக ... முழுமூடர்

உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
     யொருபயனைத் தெளியாது ... விளியாமுன்

உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
     உனதுதிருப் புகழோத ... அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
     திடுதிடெனப் பலபூதர் ... விதமாகத்

திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
     ஜெயஜெயெனக் கொதிவேலை ... விடுவோனே

அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
     அடல்தருகெற் சிதநீல ... மயில்வீரா

அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
     அதிபஇடைக் கழிமேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


பழி பாவங்களுக்கு 
இருப்பிடமான குடிசை - 
என,  இந்த உடலை எடுத்து

இழிந்த பேச்சும் செயலும் உடைய  
பெண்டிரின் மாயப் படுகுழியில் வீழ்ந்து 

நல்லபடியாக கரையேறும் 
வழி உண்டோ என்று அறியாமல்
 
பழங்கதைகளைப்
பேசிப் பிதற்றுகின்ற 
இவ்வுலக முழுமூடர்கள்
 
 குழப்பம் மிகும்
நூல்களை விருப்பமுடன் 
தேடிப் பிடித்து வாசித்து

எந்த ஒரு பயனையும் 
தெரிந்து கொள்வதற்கு முன்
 
உனது தாமரைப் பதங்களை 
நினைத்துருகும் உள்ளத்தில் 
பக்தி அமுதமாக ஊறுவதற்கு

உனது திருப்புகழை ஓதும்படி 
அருள்வாயாக..


மொகு மொகு என்று முழங்குகின்ற
உப்புக் கடல் கொந்தளித்துக் கொதிக்கவும்
பெரியமேரு மலையானது திடுதிடு 
என்று இடிபடவும்

பற்பல பூதங்கள் திமிதிமி என்று 
விதவிதமாகக் கூத்தாடவும்

சண்டையிட்ட சூரன் மா மரமாகி நின்று 
நெறுநெறு என்று முறிந்து விழவும்,
 
தேவர்கள் ஜெய ஜெய 
என்று கோஷமிடவும்
கொதித்து எழுந்த 
வேலாயுதத்தை விடுத்தவனே..

அழகுமிகும் 
கடப்ப மாலையை அணிந்தவனே..
சரவணப் பொய்கையில் தோன்றிய வேலவனே..

வெற்றியை முழக்குகின்ற 
நீல மயிலின் மீது ஏறி வருகின்ற மாவீரனே..

திரு அண்ணாமலை திருத்தணிகை 
திருச்செங்கோடு பழநியம்பதி
வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் 
வாழ்கின்ற தலைவனே
திரு இடைக்கழித் தலத்தில் 
வீற்றிருக்கும் பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. காத்திடு குமரா... முருகா சரணம். வடிவேல் அழகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்
      அழகா சரணம்..

      முத்துக் குமரா சரணம் சரணம்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகு. அழகென்ற சொல்லுக்கே முருகன் என்ற அர்த்தந்தானே..!

    திருப்புகழ் பாடி அதன் விளக்கமுணர்ந்து முருகனை வணங்கி கொண்டேன். முருகன் அனைவருக்கும் நல்லருள் தரவேண்டும். பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// முருகன் அனைவருக்கும் நல்லருள் தரவேண்டும்...///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் முருகப்பெருமான் நல்லதே நல்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. கார்த்திகை நட்சத்திர நாளில் கார்த்திகேயன் பகிர்வு.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..