நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 19, 2016

பயணங்கள் முடிவதில்லை

1981 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தின் ஒருநாள்..

சென்னை மீனம்பாக்கத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் முதன்முதலாக சிங்கப்பூருக்கு பயணம்..

அங்கு இருந்தபோது (50 + 50) 100 கி.மீ., கடலில் பயணம்..

மேலும், சந்தோஷா தீவுக்கு தொங்கு தொட்டிலில் (Cable Car) பயணம்..

வாழ்க்கையில் இன்று வரைக்கும் எத்தனையோ பயணங்கள் -

பெட்ரோல் டேங்கர், லாரி, பேருந்து, சிற்றுந்து, சைக்கிள், மாட்டு வண்டி!..

ரோடு ரோலரில் - கூட பயணித்திருக்கின்றேன்..

ஆனாலும் -

ரயில் பயணம் தான் எப்போதுமே மகிழ்ச்சியானது!..

அன்றைய நாட்களில், கரிப்புகையுடன் -

ஜிகு.. ஜிகு.. ஜிகு.. ஜிகு.. க்கூகூ.. ஊ!.. - என, ஓடிய புகை வண்டி தான் மனதில் நிறைந்து நிற்பது..

இடையில் ஆற்றுப் பாலங்களைக் கடக்கும்போது,
தடக்.. தடக்.. தடங்..தடங்!.. - என்று பேரிரைச்சல் வேறு..

அவ்வப்போது,  ....ப்ப்பூஸ்!.. - என்று நீராவியின் வெளியேற்றம்..

என்னதான் நவீன வசதிகளுடன் புதிய ரயில்கள் வந்தாலும் - மனதிற்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது - பழைய புகை வண்டிதான்!..


சில தினங்களுக்கு முன்னால் - 

மகிழ்நிறை தளத்தில் திருமிகு மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தொடர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்..

நம்மை யார் அழைக்கப் போகின்றார்களோ!..  - என, நினைத்துக் கொண்டேன்..

இரு பொழுதுகளுக்குள் - அபுதாபியிலிருந்து அழைப்பு..

தண்ணீர் நிற்பதற்குள் பிடித்துக் கொள்ள வேண்டும்!.. - என,
தெருக் குழாயடியில் குடங்கள் இடித்துக் கொள்வதைப் போல - 

இங்கே, இணைய இணைப்பு - மிகவும் இழுவையாக இருக்கின்றது..

இருந்தாலும், பற்பல இடையூறுகளுக்கு இடையில்,
பதிவுகளை வழங்குவது இனிமையாகவும் இருக்கின்றது...

தொடர் பதிவினை ஆரம்பித்து வைத்த -
திருமிகு மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும்

தொடர் பதிவினுக்கு அழைப்பு விடுத்த -
திருமிகு தேவகோட்டை கில்லர் ஜி அவர்களுக்கும்

பயணங்கள் முடிவதில்லை என,  என்னுடன் பயணித்து
(இனிய!) கருத்துரை வழங்கக் காத்திருக்கும் அனைவருக்கும்
உளமார்ந்த நன்றி..
* * *

1 உங்களது முதல் பயணம் எப்போது என நினைவில் இருக்கின்றதா?..

பரிசல்..

அதில் தான் முதல் பயணம்..

அந்தப் பயணம் ஐந்து வயதில்.. இன்றும் நினைவில் உள்ளது..

தஞ்சை அரியலூர் சாலையில் திருவையாற்றைக் கடந்ததும் கொள்ளிடம் ஆறு.. ஆற்றில் பாலம் கிடையாது..


அந்த காலகட்டத்தில் கொள்ளிடத்தைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டுமானால் பரிசல் ஒன்றே உற்றதுணை..

கொள்ளிடத்தின் தென்கரையில் விளாங்குடி - தஞ்சை மாவட்டம்..
வடகரையில் திருமானூர்.. தற்போது அரியலூர் மாவட்டம்..

நீர் வறண்டிருக்கும் காலத்தில் மாட்டு வண்டிகளில் ஆற்றைக் கடக்கலாம்.. சுமை ஏற்றப்பட்ட வண்டிகள் என்றால், பெருத்த சிரமம்..

தஞ்சையிலிருந்து அரியலூர் பெரம்பலூர் பகுதிகளுக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்பவர்கள் - விளாங்குடியில் மூட்டைகளை இறக்கி பரிசலுக்கு மாற்றி -  கொள்ளிடத்தைக் கடந்ததும் - திருமானூர் கரையில் பரிசலில் இருந்து மூட்டைகளை இறக்கி மீண்டும் வண்டியில் ஏற்றிச் செல்வார்களாம்..

2 மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?..

மணமகனாகச் சென்று மனைமங்கலம் கொண்டு -
இனியவளோடு இல்லந்திரும்பிய நாள்!..

வாழ்க்கைப் பயணம்!..
அன்றைய மகிழ்ச்சிக்கு ஈடு இணை - இப்புவியில் இனியும் உண்டோ!..

3  எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?..

அவ்வப்போது அமையும் சூழ்நிலைகள்.. இதுதான் என்றில்லை..

4  பயணத்தில் கேட்க விரும்பும் இசை?..

பின்னோக்கி ஓடும் இனிய காட்சிகளில் ஆழ்ந்திருப்பதே - சந்தோஷம்..

புறப்படும் இடம் பேருந்து நிலையம் எனில் -
பாட்டு போட்டு - மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் பேருந்துகளில் ஏறுவதில்லை..

5  விருப்பமான பயண நேரம்?..

இளந்தென்றல் தவழும் இனிய விடியற்காலை..


ஆனால்,
அடுத்தவர்களின் சூழ்நிலைகளை மனதில் கொள்ளாமல் -
விடியற்காலைப் பொழுதிலும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் செல்லும் -
ஈவு இரக்கமற்ற ஓட்டுநர்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்..

6  விருப்பமான பயணத் துணை?..

வேறு யார்!.. மனைமங்கலம் தான்!..

7  பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?..

பயணத்தின் போது புத்தகங்கள் வாசிப்பதில்லை...
கண்களைக் கருத்துடன் காக்க வேண்டாமா!..

8  விருப்பமான Ride அல்லது Drive ?..

என்றென்றும் விருப்பமானது - சைக்கிள்!..



ஆனால்,
சாலையில் நடந்து செல்வதே ஆபத்தாக இருக்கும் சூழல் இப்போது!..
எனவே - நெரிசலுக்கு இலகுவாக - TVS 50 XL Super..

சிற்றுந்து ஓட்டுதற்குத் தெரியும்.. வெகுதூரம் பயணித்ததில்லை..

9  பயணத்தின் போது முணுமுணுக்கும் பாடல்?..

சைக்கிள் பயணத்தின் போது - பாடலை முணுமுணுக்கும் வேலையெல்லாம் இல்லை..

கிராமத்தின் சாலைகள் தானே!..
மனம் மகிழ்ந்து - மடை திறந்தாற்போல பாடிக்கொண்டே செல்வேன்..

அப்படிப் பாடும் பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன..

ஆனாலும்,

ரத்தினம் - நவரத்தினம் போல சில வரிகள்..

இதோ உங்களுக்காக!..

பாடல்கள் - பயணக் காட்சிகளாக இருக்கும் என்பதை,
கனம் கோர்ட்டார் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன்!..

1)
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும்
உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும்
காரம் போகாது
பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு
பாழ்பட்டுப் போகாது
பாதை விட்டு விலகிய கால்கள்
ஊர்போய்ச் சேராது..

காற்றைக் கையால் பிடித்தவனில்லை
தூற்றித் தூற்றி வாழ்ந்தவனில்லை..

ஓஹோஹோ.. மனிதர்களே..
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்.. ஓஹோஹோ!..

2)_
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே..
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா..
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா..

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..



3)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே
குலமகளே வருக..
எங்கள் கோயிலில் வாழும் காவல் தெய்வம்
கண்ணகியே வருக..
மங்கலச் செல்வி அங்கயற்கண்ணி
திருமகளே வருக..
வாழும் நாடும் வளரும் வீடும்
வளம் பெறவே வருக..

ஒளிமயமான எதிர்காலம் 
என் உள்ளத்தில் தெரிகிறது..
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை
காதில் விழுகிறது..

4)
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே!..

வந்தநாள் முதல் இந்தநாள் வரை
வானம் மாறவில்லை வான்மதியும்
மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும்
கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை..

மனிதன் மாறிவிட்டான்..
மதத்தில் ஏறிவிட்டான்...


5)
கருவினில் வளரும் மழலையின் உயிரில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம்பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை..

அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உரிமையடா!..

6)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர் காற்று
எந்தன் இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்தில் சேரன் கொடிபறந்த
அந்தக் காலம் தெரிகிறது..
அந்தக் காலம் தெரிகிறது..

புதிய வானம்.. புதிய பூமி..
எங்கும் பனிமழை பொழிகிறது..
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது..

7)
காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே..
வானம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே..

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..

அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்..
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்...

8)
கொஞ்சநேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில்கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்...

ஒன்னா இருக்கக் கத்துக்கணும் -இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..
காக்கா கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக் 
கத்துக் கொடுத்தது யாருங்க?..

9)
காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதைக் கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன்..

ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி
சலசல எனச் சாலையிலே..
செல்செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே..


10 கனவுப் பயணம் ஏதாவது?..

உண்மையில் கனவுப் பயணம் என்றெல்லாம் ஏதும் இல்லை..
ஏனெனில், வாழ்க்கையே ஒரு பயணம் தான்!..


பயணங்கள் முடிவதில்லை..
முடிவதேயில்லை!..

வாழ்க நலம்.. 
***

28 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய பயணங்கள் தங்களது பாணியில் அருமையாக விவரித்தீர்கள்
    4 வது பதில் நெத்தியடி
    முத்தான 3 பாடல்கள் அருமை பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி
    தொடரட்டும் தங்களது வாழ்க்கைப் பயணம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் தாங்களே..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. பாடல்கள் மிகவும் கவர்ந்தது ஐயா... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      பாடல் பதிவுகளில் தங்களுக்கு இணை தாங்களே..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. ஜிகு.. ஜிகு.. ஜிகு.. ஜிகு.. க்கூகூ.. ஊ!.. - என எட்டாவது என்றென்றும் விருப்பமானது - சைக்கிள்...! அட...! எனது விருப்பமும் அதுவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. கனவுப்பயணம் இல்லை. வாழ்க்கையே பயணம் தான் சரியாச் சொன்னீங்க ஐயா.
    ஜன்னலில் காட்சிகளைக் கண்டு கொண்டே செல்வது இனிமை தான். வேறு யார் பயணத்துணை மனைமங்கலம் தான். ரசித்து உங்கள் பயணத்தை படித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஒருநிலைக்குப் பிறகு மனைமங்கலமாகிய இல்லாள் தான் வழித்துணை..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. உங்களின் சுவையான தொடர் பதிவைப் படிக்கும்போதே பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன. உங்கள் பரிசல் பயணம் பற்றி படித்தவுடன், ஆகா நாமும் இதனைப் பற்றி எழுதாமல் போய் விட்டோமே என்ற எண்ணம் வந்தது.. நீங்கள் பரிசல் பயணம் அதே கொள்ளிடத்தில், எனது சிறு வயதில் திருமானூருக்கு மேற்கே இருக்கும் திருமழபாடி மற்றும் ஆலம்பாடி பரிசல் துறைகளில் இருந்து எதிர்கரைக்கு பரிசல் பயணம் செய்து இருக்கிறேன். அன்றுபோல் இனி என்று கொள்ளிடம் நிரம்ப ஓடும்?

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மேலதிக செய்திகளும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. நீங்கள் எடுத்தாண்ட பாடல்கள், நீங்கள் அந்நாளைய மறக்க முடியாத இலங்கை வானொலி ரசிகர் என்பதனைக் காட்டுகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      உண்மைதான்..
      இலங்கை வானொலிக்கு நாமெல்லாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்..

      தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வட்டல் பரிசல் எல்லாம் பார்த்தே நாளாகிறது !எவ்வளவு இனிமையும் சுகமான பயணம் அல்லவா !
    அச்சம் என்பது மடமையடா ..உணர்ச்சிமிகு பாடல் எந்த சூழ்நிலையிலும் உற்சாகமூட்டும் .

    தங்கள் பயண அனுபவங்கள் மிக அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது சரியே..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பரிசலில் பயணம் செய்ய வேண்டும் என்பது என்து நெடுநாள் ஆசை ஐயா
    எப்போது நிறைவேறப்போகிறதோ
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இப்பொழுது கொள்ளிடத்தில் பரிசல் பயணம் இருக்கின்றதா தெரியவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பயணங்கள் முடிவதில்லை.... சிறப்பாகத் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

    எத்தனை பாடல்கள். அனைத்துமே அருமை. காணொளிகளும் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. தொடர் பயணப் பதிவில் உங்களது பயண அனுபவங்களை ரசித்தோம். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. உங்கள் பாணியில் பயண அனுபவங்களை விவரித்த விதம் அழகு! அருமையான கருத்துள்ள பாடல்கள்! அனைத்தும் எனக்கும் பிடித்தமானவை! சுவையான அனுபவங்கள்!

    பதிலளிநீக்கு
  12. பயணங்கள் பகிரும்
    பயன்தரும் தகவல்
    அருமை!

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பயணங்கள் முடிவதில்லை சிறப்பான பதிவு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. இந்தப் பகிர்வு அன்றே படித்துவிட்டேன்....
    கருத்து இடவில்லை...

    உங்கள் பாணியில் சிறப்பான கருத்துக்களோடு பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. ஆஹா அருமையான பயணங்கள்,,,

    பரிசில் பயணம்,, ம்ம் அருமை, அருமை,

    மறக்க முடியாத பயணம், அருமை,

    விடியற்காலையில் நிறுத்தாமல் செல்லும் பேருந்து ஓட்டுநர் தங்கள் பார்வையில்,,,

    வெளிப்படையான பதில்,,

    ஐ அப்ஜக்ஷன் யுவர் ஆனார் பாடல்கள் அனைத்தும் அருமை என்று சொல்லவந்தேன் கனம் கோர்ட்டார் அவர்களே,,

    அப்புறம் ஒரு சந்தேகம்,, எப்படி இவ்வளோ டைப் பன்ன முடிகிறது உங்களால்,,,

    வாழ்க்கையே ஒரு பயணம் தான்,,,

    அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உங்களுக்கெல்லாம் நிறைய தகவல்களைத் தரவேண்டும் என்ற ஆர்வம் தான் காரணம்!..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..