நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 04, 2015

தைப்பூசத் திருவிழா - 1

நேற்று தைப் பூசத் திருவிழா.

தமிழகத்தில் முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சிவாலயங்களிலும் முருகன் கோயில்களிலும் பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டு மகிழ்ந்தனர்.


பழனி, திருச்செந்தூர் - என முருகன் திருக்கோயில்கள் தோறும் மகிழ்ச்சிப் பெருக்குடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் மட்டுமின்றி - மலேஷியா சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நேற்று மதுரையம்பதியில் தைப்பூசத் தெப்பத் திருவிழா சிறப்புடன் நிகழ்ந்தது.

அதிகாலை திருக்கோயிலில் இருந்து பரிவாரங்களுடன் இனிதே புறப்பட்ட
ஸ்ரீ மீனாட்சியும் சுந்தரேசரும், பிரியாவிடையும் காலையில் வண்டியூர் வந்தடைந்தனர்.

வண்டியூர் தெப்பக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மனும் ஸ்ரீ சுந்தரேஸ்வரரும் பிரியா விடையுடன் தெப்பத் திருவிழா கண்டருளினர்.

ஸ்வாமி எப்போ வருவாரோ!..
ஸ்வாமிக்காகக் காத்திருக்கும் அலங்காரத் தெப்பம்
பச்சைப் பட்டுடுத்தி பைங்கிளியுடன் வருகின்றாள்
அங்கயற்கண்ணியுடன் ஐயன் சுந்தரேசன்






நீராழி மண்டபத்தில் திருக்காட்சி
அன்னையின் பெயர் சொல்லும் அகல் விளக்கு
கரை சேர்க்கும் அம்பிகைக்கு கரையெல்லாம் திருவிளக்கு
அரசாளும் அம்பிகைக்கு அலங்கார திருவிளக்கு
திசை ஆளும் தேவிக்கு திசை எங்கும் திருவிளக்கு
தேனார்மொழி மீனாட்சிக்கு தீபங்களால் ஆராதனை
திருவிழா காண வந்த தைப் பூச வெண்ணிலா
அலங்காரத் தெப்பத்தில் அரசாளும் மீனாட்சி
காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் என இருமுறை தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தது.

தெப்பக் குளத்தைச் சுற்றிலும் பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

தெப்பத் திருவிழாவின் இனிய காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்..

அழகிய படங்களை தமது தளத்தில் வழங்கிய அன்பின் குணா அமுதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!..

திரு. குணா அமுதன்
நண்பர் குணா அமுதன் அவர்களின் கை வண்ணங்களைக் காண -

https://www.facebook.com/GunaAmuthanPhotography


வாழ்க வளமுடன்!.. வாழ்க நலமுடன்!..  
* * *

24 கருத்துகள்:

  1. திருத் தலங்களுக்கே சென்று முருகனை வழிபட்ட திருப்தி
    மனதில் ஏற்பட்டது.
    நன்றி.
    முருகா முருகா.

    வண்ணப்படங்கள் வலைபதிவாளர் தொடர்பு லிங்க் தரவும்.

    சுப்பு தாத்தா.
    www.kandhanaithuthi.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நண்பர் குணாஅமுதன் Facebook -ல் படங்களைப் பதிவிடுகின்றார்.
      Link: https://www.facebook.com/GunaAmuthanPhotography

      தங்கள் இனிய கருத்துரைக்கு நன்றி ஐயா!..

      நீக்கு
  2. மிகவும் திருப்தி ஐயா... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. படங்கள் மூலமாவது மதுரை தைப்பூசத் தெப்பத் திருவிழா கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா ..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. நன்றி ஐயா
    படங்கள் ஒவ்வொன்றும் கானணக் கிடைக்காத காட்சி அல்லவா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார் ..
      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. புகைப்படம் அருமை அதை எடுத்த விதம் தனினும் அருமை வாழ்த்துகள் நண்பரே,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      வாழ்த்துக்கள் அனைத்தும் நண்பர் - குணா அவர்களுக்கு!..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தைப்பூசத்தன்று தங்களுடன் வந்த உணர்வு. மிக அழகான புகைப்படங்கள். நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நானும் இந்த தடவை தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழா பார்த்தேன். ஐ போனில் வீடியோ, படங்கள். எல்லாம் எடுத்தேன்.
    திரு. குணா அமுதன் அவர்கள் எடுத்தப்படங்கள் எல்லாம் அழகு.
    தைபூசப்பதிவு மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மதுரைக்கு சென்றிருந்தீர்களா!.. நன்று..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  9. மதுரை தைபூச திருவிழா...சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி.

      நீக்கு
  10. புகைப் படங்கள் அருமை! பளிச்! தெப்பக் குளம் மிகவும் அழகாக இருக்கின்றது. அதில் நடுவில் ஒரு மண்டபம் இருக்கின்றது. அது தெரியும். அதன் பின் மரங்களுடன் கோயில் போன்று தண்ணீருக்கு நடுவில் கோயிலா ஐயா! அழகாக உள்ளதே! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மரங்களின் நடுவே இருப்பது கோபுரம் போன்றதே தவிர கோயில் அல்ல!.. அழகான மண்டபத்தின் சிகரம் அது..

      திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது

      பகல் பொழுதில் - அந்த கோபுர மண்டபத்தில் தான் மீனாட்சி சுந்தரேசர் வீற்றிருப்பர்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  11. தைப்பூசம் நேரில் கண்ட நிறைவு ஏற்பட்டது. அன்று நான் ரயிலில் மங்களூரிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன். அன்பின் குணாவின் படங்கள் அருமை! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய கருத்துரைக்கு நன்றி.. மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  12. அழகிய படங்கள். படங்கள் எடுத்த குணா அவர்களுக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..