நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 20, 2023

நீதியும் ஜோதியும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 3
 புதன்கிழமை


குறுக்காய் விழுந்து கெடுத்தாலும் 
முறுக்காய் எழுந்து தடுத்தாலும் 

அடியவர்க் கென்றும் பயமில்லை
கொடியவர்க் கென்றும் ஜெயமில்லை..

குலத்தின் தெய்வம் குளிர் நிலவாய்
கேட்டதைத் தருமே கடல் அளவாய்!..

கொடியார் நடுங்கிட வரும் தெய்வம்
அடியார்க்கு அமுதாய் வந்திடுமே..

அடங்கார் பகையை அறுத்தெறியும்
அடியார் வினையை துடைத்தெறியும்..

பிணியார் பகையை முடித்து விட்டு
பொங்கலும் பூசையும் தான் ஏற்கும்!..
 
சந்நிதி தேடி 3  - எனும் பதிவில் குல தெய்வம் குறித்து எழுதிய பாடல் அது.

இந்நிலையில்
கடந்த (15/9) வெள்ளியன்று இரவு குலதெய்வக் கோயிலில் இருந்து சிவாச்சாரியார் அலை - வழி அழைத்துப் பேசினார்..

நல்ல செய்தி தான்..

அதன்படி,
தொடுக்கப்பட்டிருந்த வல்லடி வழக்கு தள்ளுபடியாகி விட்டது.. 

கோயிலின் வெளியிலும்  உட்புறமும் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு விட்டன..

சிவாச்சாரியார்கள் வழக்கம் போல கைங்கர்யங்களைத் தொடர்கின்றனர்..

இந்த நிலையே தொடர வேண்டும் என்பதே நல்லோர் தம் விருப்பம்..

இறைவன் நல்லருள் புரிய வேண்டும்.. 

எழுதி வைத்த பாடல் சிறிது மாற்றங்களுடன்!.


குறுக்காய் விழுந்து கெடுத்தோரும்
முறுக்காய் எழுந்து தடுத்தோரும் 

மிடுக்காய் எழுந்த சுடர் கண்டார்
நடுக்காய் நின்றார் நடை வீழ்ந்தார்

ஐயன் அவனே அருகில் இருக்க
அடியார்க் கென்றும் பயமில்லை

குணமே கெட்டுக் குறையே புரிந்தார்
கொடியவர்க் கென்றும் ஜெயமில்லை..

குலத்தின் தெய்வம் நிலவாய்க் குளிர்ந்து
கேட்டதைத் தந்தது மனம் நிறைவாய்!..

கொடியார் நடுங்கிட வந்தது தெய்வம்
அடியார்க்கு அரணாய் நின்றது தெய்வம்..

அடங்கார் பகையை அறுத்தெறிந்து
அடியார் பழியை துடைத்தெறிந்து

பிணியார் பகையை முடித்ததுவே
இனி யார் எதிராய் நிற்பதுவே..

பிணியார் பகையை முடித்த தெய்வம்
பொங்கலும் பூசையும் ஏற்றிடுமே..

ஊரும் உயிரும் தான் காத்து
ஒளியாய் திகழும் குல தெய்வம்..

நீதியும் ஜோதியும் தானாய் நின்று
நித்தம் அருளும் குல தெய்வம்..

நள்ளிருள் நட்டம் பயிலும் தெய்வம்
நாளும் நல்லருள் நல்கும் தெய்வம்

நல்லார் நாவில் இருக்கும் தெய்வம்
நயந்தார்கென்றும் அருளும் தெய்வம்

இல்லார் இடரைத் தீர்க்கும் தெய்வம்
பொல்லார் பகையைத் தொலைக்கும் தெய்வம்

உணர்வது ஒன்றே உலகில் வாழ்வு
உணரார் என்றால் என்றும் தாழ்வு..
**
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. தெய்வம் நின்று நீதி வழங்கி இருக்கிறது.  இதே போல மற்ற கோவில்களில் நடக்கும் காசு பார்க்கும் அநீதிகளும் களையப்பட்டால் சந்தோஷமாகும். மகிழ்ச்சியில் எழுந்த பாடல் அருமை.

    பதிலளிநீக்கு
  2. பாடல் அருமை.

    வல்லடி வழக்கு போட்டு என்னத்த காணப் போறாங்களோ. இதுமாதிரி சல்லித்தனமான வழக்குகள் பல கோவில்களில், நடைமுறைகளில் போடப்பட்டு, தேவையில்லாமல் தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. பழைய பதிவைப் படிக்காததால் தொடர்ச்சி புரியலை. அவற்றைப் படிக்கணும். மற்றபடி நல்லதே நடந்ததுக்கு இறைவனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. குலதெய்வ பாடல் மிக அருமை.
    வழக்கில் வெற்றி! இறைவன் அருளால் .
    புதிதாக எழுதிய பாடலும் அருமை.
    குலதெய்வம் என்றும் இடரை நீக்கி காக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..