நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 30, 2023

திருப்பாசுரம் 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 13
இரண்டாம் சனிக்கிழமை

திவ்யதேசம்
திருநறையூர்
நாச்சியார் கோயில்


ஸ்ரீ நறையூர்நம்பி வஞ்சுளவல்லி

ஹேம விமானத்தின் கீழ்
நின்ற திருக்கோலம்


ணிமுத்தா தீர்த்தம்
வகுளம் தல விருட்சம்


மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 
கல்கருடன் சிறப்பு


கலங்க முந்நீர் கடைந்து  அமுதம் கொண்டு  இமையோர் 
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலங்கொள் வாய்மை  அந்தணர் வாழும் நறையூரே.. 1488

முனையார் சீயம் ஆகி  அவுணன் முரண் மார்வம்
புனைவாள் உகிரால்  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்
சினையார் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே.. 1489.   
 
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நானப் புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே..      1490.  
 
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல்  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்
பொறியார் மஞ்ஞை பூம்பொழில்தோறும் நடம் ஆட
நறுநாள் மலர்மேல்  வண்டு இசை பாடும் நறையூரே.. 1491.  

விடையேழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்
பெடையோடு அன்னம்  பெய்வளையார் தம் பின்சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே.. 1492

பகுவாய் வன்பேய்  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின்
நகுவாய் மலர்மேல்  அன்னம் உறங்கும் நறையூரே.. 1493.  
-: திருமங்கையாழ்வார் :-

 நன்றி 
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
**

ஓம் ஹரி ஓம்
***

9 கருத்துகள்:

  1. திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே... திருமங்கையாழ்வார் நிறைய பதிகங்களைப் பாடியுள்ளார் இந்தத் தலத்தைப்பற்றி.... நிறைய எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. இன்னும் நிறைய எழுதலாம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி நெல்லை..

      நீக்கு
  2. பிரபந்த பாடலை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    ஓம் நமோ நாராயணாய !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் நமோ நாராயணாய...

      நீக்கு
  3. அந்த வழியாகவே கருவிலிக்குப் போய்க் கொண்டிருக்கோம். கோயிலுக்கு ஓரிரு முறை போனோம்,

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..