நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 12, 2023

சந்நிதி தேடி 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 26
செவ்வாய்க்கிழமை
 
உடன்குடி - செட்டியாபத்து கிராமத்தில் ஐந்து வீட்டு சுவாமிகள் தரிசனம் முடித்து விட்டு குலசேகரன் பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்றோம்..  

நெரிசல் இன்றி ஸ்ரீ முத்தாரம்மனையும் ஸ்ரீ ஞான முத்தீசரையும் வணங்கி விட்டு உவரிக்குச் சென்றபோது  இரவு மணி ஒன்பதாகி இருந்தது.. அங்கே திருச்சுற்றில் தூக்கம்.. 

பொழுது விடிந்ததும் முடி காணிக்கை செலுத்திவிட்டு ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி தரிசனம்.. 

தஞ்சையில் இருந்து எனது சகோதரர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். மனதுக்கு மிக்க மகிழ்ச்சி..

இந்த வருடமும் ஆவணி கொடை (திருவிழா) நடத்த முடியாதபடிக்கு இங்கே ஏதேதோ பிரச்னைகள்.. 

கோயிலின் தலைவாசலில் பளபளப்பான கம்பிகள் பதிக்கப்பட்டு  ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.. 

வழக்கமாக பணி புரிகின்ற சிவாச்சாரியார்களையும் காண இயல வில்லை. புதிதாக சிலர் இருந்தனர்.. இவை எதற்கானவை என்று தெரியவில்லை..

(இதற்குள் - அந்நியர்களின் தலையீடு - என்று பேசிக் கொண்டனர்..)

இருப்பினும் கொடை விழாவின் உள்ளூர் முறை தாரர்கள் சம்பிரதாயப்படி செய்தனர்.. 

எங்கள் வழக்கப்படி வஸ்திர காணிக்கை வழங்கினோம்.. மாவிளக்கு ஏற்றி பொங்கல் வைத்து வழிபட்டோம்..

என்ன ஒரு குறை - எனில்
நடுப்பகலிலும் நள்ளிரவுப் பொழுதிலும் பெரும் படைப்பு நடத்தி பிரம்மசக்தியம்மன், பேச்சியம்மன் மற்றும் மாடசாமி அழைப்பு நிகழவில்லை.. 

அடுத்த வருடம் கொடை நடத்திக் கொள்வோம் -  என்று அருள்வாக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி..

கொடை விழாவும் சாமி அழைப்பும் இல்லாத இரவுப் பொழுதில் அங்கேயே தூங்கி எழுந்து,

மறுநாள் காலையில் புறப்பட்டு திருநெல்வேலி ஜங்ஷன் ஸ்ரீ கொடி மாடசாமி ஐயனை தரிசித்து விட்டு இன்டர் சிட்டி விரைவு ரயில் மூலம் நல்லபடியாக இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம்..








கீழ்வரும் படங்கள் வன்னியடி 
ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில்




திருநெல்வேலி

ஸ்ரீ கொடிமாடசுவாமி திருநெல்வேலி

குறுக்காய் விழுந்து  
கெடுத்தாலும்
முறுக்காய் எழுந்து
 தடுத்தாலும் 
அடியவர்க் கென்றும்
பயமில்லை
கொடியவர்க் கென்றும்
ஜெயமில்லை..

குலத்தின் தெய்வம் 
குளிர் நிலவாய்
கேட்டதைத் தருமே
கடல் அளவாய்!..

கொடியார் நடுங்கிட
வரும் தெய்வம்
அடியார்க்கு அமுதாய்
வந்திடுமே..

அடங்கார் பகையை
அறுத்தெறியும்
அடியார் வினையை
துடைத்தெறியும்..

பிணியார் பகையை
முடித்து விட்டு
பொங்கலும் பூசையும்
தான் ஏற்கும்!..
**
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. கோவில் சுற்று ஒன்று முடிந்து இனிதாக இல்லம் திரும்பியது மகிழ்ச்சி. படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அடியவர்க்கு என,றும் பயமில்லை. கொடியவர்க்கு என்றும் ஜெயமில்லை.

    பாரம்பர்ய நிகழ்வுகள் நடப்பதில் தடங்கலா? இது நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // பாரம்பர்ய நிகழ்வுகள் நடப்பதில் தடங்கலா? இது நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியா?.. //

      அப்படித் தான் தோன்றுகின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நீக்கு
  3. யாத்திரை நலமானதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. குலதெய்வ வழிபாடு அனைத்து நலன்களையும் தரட்டும்.

    அடுத்த வருடம் கொடை நடத்தி கொள்ள அருள்வாக்கு வந்தது இறைவன் சித்தம்.

    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை ரசித்தமைக்கு நன்றி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. குலதெய்வ வழிபாடு மற்றும் கோயில் தரிசனங்கள் இனிதாக முடிந்து நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தது நிறைவான விஷயம், நல்ல பயணம்.

    படங்கள் அருமை. அடுத்த வருடம் கொடை நல்லபடியாக நடக்கும் துரை அண்ணா. கொடைவிழா பார்த்து பல வருடங்கள் ஆயிற்று.

    உங்கள் கவிதை மிகவும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. தங்கள் அன்பின் வருகையும் சிறப்பும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..