நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

சதுர்த்தி விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 31
 ஞாயிற்றுக்கிழமை


பிள்ளையார் சதுர்த்தி..

சதுர்த்தி விழா சத்ரபதி சிவாஜி மகராஜ் காலத்திலேயே கொண்டாடப்பட்டிருக்கின்றது. 

இது இந்நாட்டின் கலாச்சார விழா..

இது மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிந்து மக்களின் குடும்ப விழா.. 

மகாராஷ்டிர மக்கள் விநாயக சதுர்த்தியன்று,  தத்தமது வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை செய்து வைத்து - கோலாகலமாக விழா நடத்தி - ஏழைகளுக்கு தானங்கள்  வழங்கி மகிழ்கின்றனர்...

அடிமைப்பட்டுக் கிடந்த மக்களிடையே தேசிய உணர்வு வளர்வதற்காக - சுதந்திரப் போராட்ட காலத்தில், பால கங்காதர திலகர் - இவ்விழாவினை ஊக்குவித்தார்..

சிவ பாரம்பரியத்தில்  தங்கள் இல்லங்களில் பிள்ளையாரை வணங்குவதற்குத் தயங்குவதில்லை.. 

நாளடைவில் இவ்விழாவில் அரசியலும் ஆடம்பரமும் புகுந்து கொண்டன...

தமிழகத்திலும் இத்தகைய ஆடம்பரம்  புகுந்து கொண்டது காலத்தின் கொடுமை..

அதுவரைக்கும் சிவ சமயத்தினரது வீடுகளிலும் கோயில்களிலும் நடத்தப்பட்ட விழா பொது வெளிக்கு வந்தது..  

சதுர்த்தி விழா - தடைகள் பலவற்றைக் கடந்திருந்தாலும்  - விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினால் என்ன பயன்?.. - என்று கேட்கும் நிலையை
இன்றைக்கு எய்தியிருக்கின்றது..

ஆடம்பர விழா கொண்டாட்டங்களால் யாதொரு பயனும் இல்லை தான்..

பண்டைய நாட்களில்
பசுஞ்சாணத்தைப் பிடித்து அருகம்புல் வைத்து வழிபடுவர்.. அதெல்லாம் இன்றைக்கு மலையேறி விட்டது..

களிமண் கொண்டு பிள்ளையார் அமைத்து வணங்கி மூன்றாம் நாள் நீரில் கரைத்து விடும் பழக்கமும் நம்மிடையே இருந்தது.. 

இன்றைக்கு,  நீர்நிலைகளில் பிள்ளையாரைக் கரைக்கக்கூடாது - என்று வழக்காடு மன்றத்திற்குச் செல்கின்ற  அளவுக்கும் ஆளாகியிருக்கின்றது.. 
அந்த அளவுக்கு விநாயகர் வடிவமைப்பில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள்..

மஞ்சளை அரைத்து - பிள்ளையார் பிடித்து வழிபடுவது தான் பவித்ரம்..

வீட்டில் இப்படியான வழிபாடு நடத்துவதற்கு இன்றைய சூழ்நிலையில்  யாதொரு தடையும் இல்லை..

இனிவரும் காலத்தில் எப்படியோ!..

விநாயக வழிபாடு என்பது தத்துவமாகும்..

எளிமையின் இலக்கணம் விநாயக மூர்த்தி.. 

பெற்றோருக்கு மரியாதை செய்வதும் ஊருக்கு உதவியாய் இருப்பதும் விநாயகர் நமக்குக் கூறுகின்ற அறிவுரைகள்..

பிள்ளையார் வழிபாடு யாருக்கானது?..  

நமக்கானது!.. கொழுக்கட்டையும் சுண்டலும் பூரணமும் நமக்கானவை.. 

நமது ஆன்ம நலத்திற்கானவை..


அதன்படி விநாயகரின்  
தத்துவத்தை உணர்ந்து 
வழிபட்டு நலம் பெறுவோமாக!..
**

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!..

வக்ர துண்ட மஹா காயா 
சூர்ய கோடி ஸமப்ரபா 
நிர்விக்னம் குரு மே தேவ 
ஸர்வ கார்யேஸு ஸர்வதா:

வளைந்த துதிக்கையும்   கம்பீரமான திருமேனியும் கோடி சூரிய  பிரகாசத்தையும் உடைய விநாயகப் பெருமானே.,  
அனைத்துத் தடைகளையும் நீக்கி , எனது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு அருள் புரிவீர்களாக!..
**
ஓம் 
கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. அன்று பொதுவெளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு மையப்பொருளாக இருந்தது.  இன்று இந்து எதிர்ப்பாளர்கள் காரணமாகி இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் நல்லதற்கே.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சிறப்பான விளக்கம் ஜி.

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். எளிமையான பிள்ளையார் வழிபாடு பற்றி சொன்னது சிறப்பு.
    விநாயகர் அனைவருக்கும் அனைத்து நலங்களும் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. சின்ன வயசில் மதுரையில் தெருவுக்குத் தெரு விநாயக சதுர்த்தி மாலை நேரம் கொண்டாடிப் பார்த்திருக்கேன். ஆனால் அவை எல்லாம் இப்போதைய ஆடம்பரக் கொண்டாட்டம் போல் அல்ல. இப்போதைய ஆடம்பரம் மனதில் ஒட்டவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..