நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 23, 2023

திருப்பாசுரம் 1

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 6
முதல் சனிக்கிழமை


திவ்யதேசம்

திரு அழுந்தூர்
(தேரழுந்தூர்)

மூலவர்
ஸ்ரீ தேவாதிராஜன்
ஸ்ரீ செங்கமலவல்லி

உற்சவர்
ஆமருவியப்பன்

ஸ்ரீகருட விமானம்
தீர்த்தம்
தர்சன புஷ்கரிணி, காவிரி
மங்களாசாசனம் 
திருமங்கையாழ்வார்




தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும்  அணியார் வீதி அழுந்தூரே.. 1588

பாரித்தெழுந்த படை மன்னர் 
தம்மை மாள பாரதத்து
தேரில் பாகனாய் ஊர்ந்த 
தேவதேவன் ஊர்போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு 
அஞ்சிப் போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் 
அணியார் வயல் சூழ் அழுந்தூரே.. 1589

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு 
இறைவன் சிரங்கள் ஐயிரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த 
உரவோன் ஊர்போலும்
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல் 
கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் 
ஐம்பால் அணையும் அழுந்தூரே.. 1590

வெள்ளத்துள் ஓர் ஆலிலைமேல் மேவி 
அடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் 
நின்றார் நின்ற ஊர்போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் 
போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும் 
அணியார் வயல் சூழ் அழுந்தூரே..1591

பகலும் இரவும் தானேயாய் பாரும் 
விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் 
நின்ற ஊர்போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் 
துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் 
அணியார் வீதி அழுந்தூரே.. 1592
-: திருமங்கையாழ்வார் :-
**
ஓம் ஹரி ஓம்
***

4 கருத்துகள்:

  1. பெருமாளே.. பெருமாளே.. கோவிந்தா.. கோவிந்தா... புரட்டாசி சனி.. பெருமாள் தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புரட்டாசி சனிக்கிழமை தேரழுந்தூர் பெருமாள் தரிசனம்.
    நிறைய தடவை பார்த்த ஊர்.
    திருமங்கையாழ்வார் பாசுரம் படித்து வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆமருவியப்பன் என்னும் பெயரில் முகநூல் சிநேகிதர் ஒருத்தர் இருக்கார். இந்தக் கோயில் போனது ஒரே தரம் தான். இன்னிக்கு முதல் சனிக்கிழமை. ஆனாலும் பெருமாளூக்கு வழக்கமான சாதம், பருப்புத் தான். முடியலை. :( விரதம்னு தனியா வைச்சுக்காட்டியும் எப்போவுமே இரவுப் பலகாரம் தானே. அதான் இன்னிக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..