நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 09, 2023

சந்நிதி தேடி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 23
சனிக்கிழமை


திருச்செந்தூரில் இருந்து மதியத்திற்கு மேல் புறப்பட்டு உடன்குடி வழியாக மாலைப் பொழுதில் செட்டியாபத்து எனும் கிராமத்தில் ஸ்ரீ ஐந்து வீட்டு ஸ்வாமிகள் திருக்கோயிலை அடைந்தோம்..

திருச்செந்தூரில் இருந்து செட்டியாபத்து கிராமம் 18 கிமீ.,

இந்தக் கோயிலைப் பற்றி சென்ற ஆண்டில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன..

ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ பெரிய பிராட்டியார், ஸ்ரீ வயணப் பெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்தி ஸ்வாமி, ஸ்ரீ குதிரை ஸ்வாமி, ஸ்ரீ திரு புளி ஆழ்வார், ஸ்ரீ ஹனுமன் என சந்நிதிகள்..

ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணப் பெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள் மூவரும் மானுடப் பிறப்பில் தெய்வ நிலை அடைந்தவர்கள்..

இங்கே சந்நிதிகளுக்குள் வலம் செய்து வணங்கலாம் என்பது சிறப்பு..

கோயில் திருநடை திறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

































துப்புரவுப் பணியாளர் பொருட்டு அற்புதங்கள் நிகழ்ந்த கோயில் இது..

கோயில் வளாகத்தில்
பக்தர்கள்
தங்குவதற்கும்
 சமைப்பதற்கும்
வசதிகள் உள்ளன..









ஐந்து வீட்டு ஸ்வாமிகள்
போற்றி.. போற்றி..
*
 
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

8 கருத்துகள்:

  1. படங்கள் சிறப்பு.  முன்பும் பார்த்த நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் .. சென்ற ஆவணியிலும் சென்றிருந்தோம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஆமாம் துரை அண்ணா ஸ்ரீ ஐந்துவீட்டு சுவாமிகள் கோயில் பற்றியும் படங்களோடு பதிவுகள் போட்டிருந்தீங்க நல்ல நினைவு இருக்கு.

    படங்கள் எல்லாம் மிக அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற ஆவணியிலும் இந்த கோயிலுக்குச் சென்றிருந்தோம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  3. படங்கள் எல்லாம் அருமை.
    கோவில் மிக சுத்தமாக பராமரிக்கப்படுவது தெரிகிறது.
    ஐந்து வீட்டு சாமி தரிசனம் நன்றாக அமைந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் தரிச்னம் எதிலும் எவ்விதக் குறையும் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..