நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
ஆவணி 20
புதன்கிழமை
அனைவருக்கும்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
நல்வாழ்த்துகள்..
எங்கும் சுப மங்கலங்கள்
நிகழ்வதற்கு வேண்டிக் கொள்வோம்..
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதி ஆய் காலிப் பின்னே
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.. 1504
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில்
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர்
கார் தழைத்த திரு உருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே!.. 1534
கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத் திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்
அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து அணிஅழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.. 1625
-: திருமங்கையாழ்வார் :-
க்ருஷ்ண க்ருஷ்ண
ஓம் ஹரி ஓம்
***
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்!
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
கண்ணன் எல்லோருக்கும் நல்ல வழி காட்ட வேண்டும்.
பதிலளிநீக்குஎங்கும் சுப மங்கலங்கள் நடக்க கண்ணன் அருள்வான்.
நீக்குகண்ணன் எல்லோருக்கும் நல்ல வழி காட்ட வேண்டும்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைவரின் மனக்கவலைகளூம் குட்டிக் கிருஷ்ணனால் இல்லாமல் போகட்டும்.
பதிலளிநீக்கு