நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

கண்ணன் வரும் நேரமிது

கங்கைக்கரைத் தோட்டம்  கன்னிப் பெண்கள் கூட்டம் 
கண்ணன் நடுவினிலே!..

கங்கைக்கரைத் தோட்டம்  கன்னிப் பெண்கள் கூட்டம் 
கண்ணன் நடுவினிலே!.. 
காலையிளங் காற்று பாடி வரும் பாட்டு 
எதிலும் அவன் குழலே!..  
 
கண்ணன் முகத் தோற்றங் கண்டேன் 
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்!..
கண் மயங்கி ஏங்கி நின்றேன் 
கன்னிச் சிலையாகி நின்றேன்!..
 
கண்ணன் முகம் கண்ட கண்கள் 
மன்னர் முகம் காண்பதில்லை!..
கண்ணனுக்குத் தந்த உள்ளம் 
இன்னொருவர் கொள்வதில்லை!.. 
(கவியரசர் கண்ணதாசன்)


கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப்படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள!..

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்!..
(கவியரசர் கண்ணதாசன்)
 

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்!..
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!.. 

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒரு நாள் - என்னை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம் 
தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று 
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!.. 


நேரம் முழுதிலும் அப்பாவி தன்னையே - நெஞ்சம் 
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்!.. 
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால் 
பின்னர் தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!.. 
(மகாகவி பாரதியார்)



சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..

4 கருத்துகள்:

  1. ராச லீலைகள் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் விகல்பமாகப் படுவதில்லை. கோபியர் அனைவரும் பரம்பொருளை அடையும் மார்க்கத்தை உணர்த்துவது போல் தோன்றும்.
    கிருஷ்ண ஜெயந்தி பதிவுகள் மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எல்லாரும் பசுக்கள். இறைவன் ஒருவனே பதி என்பார்கள்.. அதுவே ராசலீலாவின் பொருள்!..தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..

    கன்ணனின் ராசலீலைகள் ஹ்ருத்தாபம் போக்கும் அற்புத மருந்து..!

    பதிலளிநீக்கு
  3. ராசலீலையின் பொருள் உணர்ந்தால் - நம் மனம் கண்ணனுடன் வாழ்ந்ததாகச் சொல்லுகின்றது!..
    தங்களின் வருகை கண்டு மகிழ்கின்றேன்..நன்றி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..