அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்!..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்!..
சிறையினிலே தான் அவன் பிறந்தான்
மழையினில் வேறு மனை புகுந்தான்
உறவறியாத குழந்தைக்கெல்லாம்
உறவினனாக அவன் வருவான்!..
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்!..
அன்பென்னும் சொல்லிருக்கும் சந்நிதானம்!..
சந்நிதானம்!..
கண்ணன் சந்நிதானம்!..
எங்கிருந்தோ வந்தான்..
இடைச்சாதி நான் என்றான்!..
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்!..
கண்ணன்.. எங்கிருந்தோ வந்தான்!..
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் - கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது!..
நண்பனாய்.. மந்திரியாய்.. நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்.. பார்வையிலே சேவகனாய்..
கண்ணன்!..
எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்!..
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ.! கண்ணன் பற்றி என் நினைவுகள் பதிவாய் என் தளத்தில் என் பாணியில் .அருமையான படங்களுடன் இப்பதிவில் கண்ணன். நான் வரைந்த படங்களுடன் என் பதிவில் கண்ணன். . இன்று தளங்களெல்லாம் கண்ணன்தான்.. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா!..
நீக்குஇங்கிவனை யான் பெறவே
பதிலளிநீக்குஎன்ன தவம் செய்து விட்டேன்!..
கண்ணன்.. எங்கிருந்தோ வந்தான்!..
கண்ணன் படங்களும் பாடல்களும் அருமை..பாராட்டுக்கள்..!
தங்களது வருகைக்கும் அன்பான பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..
பதிலளிநீக்கு