நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

வருவாள் வரலக்ஷ்மி

ஸ்ரீவரலக்ஷ்மி விரதம்!..

இன்று (16.8.2013) ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமை!..


எல்லாவகையான செல்வத்துக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியைக் குறித்து நோன்பு நோற்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டியது எல்லாவற்றையும் ஈடேற்றி  அன்னை ஸ்ரீ வரலக்ஷ்மி நல்லருள் புரிவாளாக!..-

பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையன்று - கணவனின் நலத்திற்கும் செல்வ வளத்திற்கும் - வேண்டிக் கொண்டு சுமங்கலிப் பெண்களும் , நல்ல கணவன் அமையவும் இல்வாழ்க்கை சிறக்கவும் வேண்டிக் கொண்டு கன்னிப் பெண்களும் வரலக்ஷ்மி நோன்பினை பக்தி பூர்வமாகக் கடைப்பிடிக்கின்றனர். 


வீட்டைச் சுத்தம் செய்து, வாழைக்கன்று மாவிலைத் தோரணங்களுடன் மண்டபம் அமைத்து,  வாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி - அதில் மஞ்சள் பூசிய தேங்காயுடன் கலசம் அமைத்து - மஹாலக்ஷ்மி திருமுகம் வைத்து,  அலங்கரித்து, ஒற்றைப்படை எண்ணிக்கையிலான மஞ்சள் சரடுகளைச் சூட்டி-  ஸ்ரீஅஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்,  சகஸ்ரநாமம் சொல்லி  - தூப தீப ஆராதனைகளுடன் இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து வழிபடுவர்.  

விரதம் இருந்தோர் - பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்வர். வழிபாட்டில் கலந்து கொண்ட எல்லாருக்கும் சந்தனம் , மஞ்சள் குங்குமத்துடன் தாம்பூலம் வழங்கி - வாழ்த்துக்களுடன் விரதத்தினை மன நிறைவுடன் பூர்த்தி செய்வர். 


அகமும் புறமும் தூய்மையாகி, 
மனநிறைவுடன் கொள்வதும் கொடுப்பதும் 
வரலக்ஷ்மி நோன்பின் அடிப்படை.

மங்கலமாக வாழ்வதென்பது  பெறுதற்கரிய பேறு. கணவன் பூரண நலத்துடன் வாழ்வாங்கு வாழ்வதே எல்லாப் பெண்களுடைய வேண்டுதல். 

அதே சமயம் - மனைவியும் மக்களும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ வேண்டும் என -  வேண்டுவதும், அதற்காக உழைப்பதும் ஒவ்வொரு அன்பான கணவனின் கடமை.

அந்த அளவில் - நாமும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வேண்டிக் கொள்வோம்!..


ஸ்ரீ தன லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஸ்ரீ வித்யா லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஸ்ரீ தான்ய லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு க்ஷூதா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஸ்ரீ செளபாக்ய லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஸ்ரீ வீர லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு முஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஸ்ரீ சந்தான லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஸ்ரீ காருண்ய லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஸ்ரீ மஹா லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

(ஸ்ரீதேவி சூக்தம் - தஞ்சை ஸ்ரீநீலமேகப்பெருமாள் திருக்கோயிலில் இருந்து பெறப்பட்டது)


மனைவிக்காக கணவனும், கணவனுக்காக மனைவியும் வாழ்வதென்பதே - நமது பண்பாட்டின் அடிப்படை. அந்த அடிப்படையில் -

சர்வ மங்கலங்களையும் தந்தருளும் 
இறை வழிபாட்டில் மனம் ஒன்றும் போது - 
தெய்வம் தேடி வந்து அருள் புரியும்!.. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே 
விஷ்ணு பத்னீ ச தீமஹி 
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்

திருமகள் வருவாள்!.. அருள்மழை பொழிவாள்!..

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்!.. எல்லாருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவருள் பொங்கிப் பெருகுவதாக!..

      நீக்கு
  2. மிகவும் அருமையான பதிவு. பதிவுலகமெங்கும் வரலக்ஷ்மி வாசம் செகிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மங்கலம் அருள்வாள் மஹாலக்ஷ்மி!..வாழ்க.. வளர்க!..

      நீக்கு
  3. இந்த நாளுக்கேற்ற அழகான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. எல்லாருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவருள் பொங்கிப் பெருகுவதாக!..

      நீக்கு
  4. அகமும் புறமும் தூய்மையாகி,
    மனநிறைவுடன் கொள்வதும் கொடுப்பதும்
    வரலக்ஷ்மி நோன்பின் அடிப்படை.

    அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. எல்லாருக்கும் அன்னை மஹாலக்ஷ்மியின் திருவருள் பொங்கிப் பெருகுவதாக!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..