அன்றைக்கு நாடு முழுவதும் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களுமாகத்தான் இருந்தது. சாகுபடி காலத்தில் நாடு செழிக்கவும் நல்ல மழை பொழியவும், கன்னிப் பெண்கள் மார்கழியில் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். மார்கழியில் நோற்ற நோன்பினை தை முதல் நாளில் முடிப்பார்கள்.
அறுவடையில் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக இந்த பூமித்தாய்க்கும், வானில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கதிரவனுக்கும்,
ஆடி
மாதம் முதற்கொண்டு துணைக்குத் துணையாய் நின்று தோள் கொடுத்த
கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக உழைத்துச் சம்பாதித்த
பச்சரிசியில் பொங்கல் வைத்துப் படைத்து
வழிபட்டனர்.
பொங்கல் திருநாள் என்பதே இயற்கை வழிபாடு தான்.
இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள்
கொண்டாட்டங்களாக மாறியது என்கின்றனர்.
பொங்கலன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து நீராடி, முதல் நாளே சுத்தப்படுத்தி ஆயத்தமாக வைத்திருந்த வீட்டு முற்றத்தை பச்சரிசி மாவினால் கோலம் இட்டு அலங்கரிப்பர்.
தலை வாழையிலையில் பச்சரிசியுடன் புத்தம் புதிய காய்கறிகளையும் வாழைப்பழங்களையும் வெல்லக்கட்டிகளையும் பசு நெய்யினையும் வைத்து புதிய பானைக்கு மஞ்சள், இஞ்சிக் கொத்துகளைக் கட்டி மங்கலகரமாக திலகமிடுவர். குடும்பத்தில் உள்ள எல்லாரும் கூடியிருக்க வயதில் மூத்த பெண்கள் முன்னின்று மஞ்சளிலோ பசுஞ்சாணத்திலோ பிள்ளையார் பிடித்து குங்கும திலகம் இட்டு அருகம்புல் சாற்றி ,
குத்து விளக்கினை ஏற்றி குல தெய்வத்தையும் கதிரவனையும் மனதார வணங்கி தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி நெஞ்சுருகி நின்று வழிபட்டு நல்ல விறகுகளைக் கொண்டு அடுப்பில் நிறைத்து புதுப் பானையில் அறுவடையாகி வந்த புது அரிசியினை இட்டு, முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். பாரம்பரியமாக சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கலும் சமைப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..