ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 20
கப்பம் தவிர்க்கும் கலியே!... |
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
பக்தருக்கும் பணிந்தார்க்கும் - நேர்ந்தது ஒரு துன்பம் எனில் - பிரம்மாண்ட பிரபஞ்சத்தினைப் பேணிக் காத்து வரும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் - முன்னதாக சென்று -
( நீதான் செல்லவேண்டும் என்பது கூட இல்லை.. உன் படைக்கலங்களுள் ஒன்று.... அது போதுமே!... முதலையிடமிருந்து கஜேந்திரன் காக்கப்பட்டது இப்படித்தானே!... )
அவர் தம் துன்பத்தினைத் துடைத்து ஒழிக்கும் தூயனே!.... துயில் நீங்கி எழுவாயாக!...
தொட்ட காரியங்களைத் துலங்கச் செய்பவனே!... எடுத்த செயல்களை நிறைவுறச் செய்பவனே!... நிறைவாகச் செய்பவனே!.... பெருந்திறல் உடைய பெருமானே!...
*****************************************************************************************************
''என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்...'' - திருக்குறள்.
''செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி!...'' - தேவாரம்.
''மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று'' - திருப்புகழ்.
''அருள் ஒன்றில்லாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய'' -அபிராமி அந்தாதி

அன்பும் ஆகாது. அருளும் ஆகாது. எனில் -
ஆகக்கூடிய எதுவும் ஆகாது அவர்க்கு, ( எதுவும் ஒத்துக் கொள்ளாது)
ஆகக்கூடிய எதுவாகவும் ஆகாதவர்க்கு, (எதையும் ஒத்துக் கொள்ளாது)
அனலாய் - கனலாய் - வெந்தணலாய் நிற்கும் விமலனே!... துயில் நீங்கி எழுவாயாக!....
செப்பைப் போன்ற மென்மையான திருத்தன பாரங்களையும், சிவந்த இதழ்களையும், சிற்றிடையினையும் உடையவளே!... நப்பின்னையே!... நங்கையே!... செல்வனின் செல்வியே!... செந்தாமரைத் திருவே!...
துயில் நீங்கி எழுந்து வருவாயாக!... வருவாயாக - வருவாயாக!...
ஆலவட்டமும்,
கண்ணாடியும் தந்து கூடவே,
உன் கண்ணுக்குக் கண்ணான கண்ணனை - உன் மனத்துள் மன்னி நின்ற மணவாளனையும் தந்து -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..