ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 22
திங்களும் ஆதித்யனும் |
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல்வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!...
பரந்த பூமியினைக் கட்டி ஆண்ட மன்னவர் எல்லாம் - ''தம்மின் வலியார் யார்...'' என தருக்கித் தற்பெருமையுடன் தலை நிமிர்ந்து நின்ற நேரம் போய் -
நல்லறிவு வரப்பெற்றதனால் சின்னவர் ஆகி, கவிழ்ந்த தலையினராக - கர்வம் தொலைந்த நிலையினராக - நின் சபை முன் வந்து, சர்வமும் அடங்கியவராய் - ''ஏது சொல்வாயோ?... எப்படிச் சொல்வாயோ?... எப்போது சொல்வாயோ?...'' என்று ஏங்கி நிற்பதனைப்போல -
நாங்களும், நின் திருமுகம் காண வேண்டி - நின் திருவாசலின் முன்னிலையில் - பணிவுடன் நிற்கின்றோம்!...
சலங்கையில் சிலு சிலுக்கும் சின்னஞ்சிறு மணிகளைப் போல, மலர்ந்தும் மலராத பாதி மலர்களைப் போல -
திறந்தும் திறவாத செவ்வரி ஓடிய விழிமலர்களால் எங்களை நீ - நோக்கி அருள் செய்யலாகாதா?....
சந்திரனும் சூரியனும் ஒரு சேர உதித்தாற்போல - அவ்விழிகள் எங்களை நோக்கினால் - வந்த வினையும் வருகின்ற வல்வினையும் - வந்தவழியே ஓடித் தொலைந்திடுமல்லவா?...
சில்லென்ற செவ்விழிகளினால் சிறிதே நீ நோக்கினாலும், சிறுமை சிதறித் தொலைந்திடும் அல்லவா!....
அந்தரி நீலி அழியாத கன்னிகை எங்கள் அபிராமியின் கடைக்கண்கள் அருள்வதைப் போல -
அச்சுதன் - அனந்தன் - ஆராஅமுதனின் கடைக் கண்களும் அருள் தருமே!.... அருள் தர வேண்டுமே!...
நாங்களும், நின் திருமுகம் காண வேண்டி - நின் திருவாசலின் முன்னிலையில் - பணிவுடன் நிற்கின்றோம்!...
சலங்கையில் சிலு சிலுக்கும் சின்னஞ்சிறு மணிகளைப் போல, மலர்ந்தும் மலராத பாதி மலர்களைப் போல -
செங்கண் சிறுச் சிறிதே!.... |
சந்திரனும் சூரியனும் ஒரு சேர உதித்தாற்போல - அவ்விழிகள் எங்களை நோக்கினால் - வந்த வினையும் வருகின்ற வல்வினையும் - வந்தவழியே ஓடித் தொலைந்திடுமல்லவா?...
சில்லென்ற செவ்விழிகளினால் சிறிதே நீ நோக்கினாலும், சிறுமை சிதறித் தொலைந்திடும் அல்லவா!....
அந்தரி நீலி அழியாத கன்னிகை எங்கள் அபிராமியின் கடைக்கண்கள் அருள்வதைப் போல -
அச்சுதன் - அனந்தன் - ஆராஅமுதனின் கடைக் கண்களும் அருள் தருமே!.... அருள் தர வேண்டுமே!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..