ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 26
மாலே!... மணிவண்ணா!... |
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய்! அருளேலோர் எம்பாவாய்!...
திருவளர் செல்வனே!... திருமாலே!... நீலமணி போலும் நிறத்தழகா!...
மார்கழியில் நோன்பு நோற்றிருக்கும் நாங்கள் - எங்களுக்கு மேற்பட்டோர் செய்தவாறு - செய்யும்படியாக,
எங்களின் நோன்புக்குத் தேவையான மங்கலப் பொருள்களை நீ கேட்கும்படிக்கு கூறுகின்றோம்...
கற்பூர வாசம் வீசும் உன் செவ்விதழ் பதிந்து, உலகம் நடுங்கும்படிக்கு ஓங்காரமிடும் பாஞ்சசன்னியத்தைப் போன்ற -பால் வண்ண - வெண்சங்குகள்,
பேரொலி எழுப்பும் பெரும்பறைகள் - இவைகளை முழக்கியபடி ''பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு'' எனப் புகழ்ந்து இசை பாடும் அடியார்கள்,
கோல விளக்கு,
உன்னுடைய அடையாளமாக பகை வெல்லும் கருடக் கொடி, அழகிய முத்துப் பந்தல் ஆகியனவற்றை நீ எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக!...
ஊழிப் பெரு வெள்ளத்தின் நடுவில் ஆலிலையின் மேல் பச்சிளம் பாலகனாகத் தோன்றும் அருள் வடிவே!...ஆதி மூலனே!...அருள் புரிவாயாக!....

கோல விளக்கு |

நன்றி - ரதி, தேவி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..