ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 27
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் |
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே, பாற்சோறு
மூடநெய் பெய்து, முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!...
கூடாரை - எதிலும் சேராதவரை - சேர விரும்பாதவரை,
அன்புடன் கூடார், அறிவுடன் கூடார், பண்புடன் கூடார், பணிவுடன் கூடார் -
இப்படி - எதிலும் , எதற்கும் - கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனே!...
உன்னுடைய புகழினைப் பாடி அல்லவா நாங்கள் நோன்புப் பொருள்களான - பெரும் பறையினைப் பெற்றோம். பின்னும் நாங்கள் உன்னிடமிருந்து நாடு புகழும் வகையில் பரிசுகள் எனும் சன்மானங்களைப் பெறுகின்றோம்...

கை நிறைய வளையல்கள், தோள் வளைகள், காதணிகள், சின்னஞ்சிறிய செவிப்பூக்கள், பாதங்களில் அணிய சலங்கைகள் இன்னும் பற்பல ஆபரணங்களையும் அணிந்து மகிழ்வோம்.
புத்தம் புதிய ஆடைகளைப் பெருமையுடன் உடுத்திக் கொள்வோம்.
நெஞ்சம் நெகிழ்ந்து - நெய்யுடன் மகிழ்ச்சியும் பொங்கி வழியும்படி உண்போம்!..
பொங்கலோ பொங்கல்!...
பொங்கலோ பொங்கல்!...
பொங்கலோ பொங்கல்!...
எவ்வித பேதங்களும் இன்றி, அடியவர்களும் அன்பர்களும் - அனைவரும் -
உன் நினைவில் - ஒன்றாகக் கூடி - குளிர்ந்து இருப்போம்!...
கோபாலா சரணம்!....கோவிந்தா சரணம்!...
பசும்பாலில் பச்சரிசியுடன் நல்ல கரும்பின் சர்க்கரையைச் சேர்த்து பொங்கலிட்டு, அந்தப் பொங்கலை மூடும்படியாக நறுமணம் கமழும் நெய்யினை நிறைத்து, ''சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்'' என்று சமர்ப்பித்து ,
முழங்கை வழியே நெய் வழியும்படி - பொங்கலை - பால் சோற்றை உண்ணும் போதும் உன்னை நினைந்தே உண்போம்!...
நெஞ்சம் நெகிழ்ந்து - நெய்யுடன் மகிழ்ச்சியும் பொங்கி வழியும்படி உண்போம்!..
பொங்கலோ பொங்கல்!...
பொங்கலோ பொங்கல்!...
பொங்கலோ பொங்கல்!...
எவ்வித பேதங்களும் இன்றி, அடியவர்களும் அன்பர்களும் - அனைவரும் -
உன் நினைவில் - ஒன்றாகக் கூடி - குளிர்ந்து இருப்போம்!...
கோபாலா சரணம்!....கோவிந்தா சரணம்!...
நன்றி - ரதி, தேவி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..