நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 12, 2013

திருப்பாவை - 28

ஆண்டாள் அருளிய திருப்பாவை  
திருப்பாசுரம் - 28
உந்தனைப் பெறும் புண்ணியம் உடையோம்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறை ன்றும்  ல்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர்  எம்பாவாய்!...


கறவைப் பசுக்களையும் எருமைகளையும் கன்றுகளுடன் ஓட்டிச் சென்று காட்டிலே மேய விட்டு - அவைகளின் பின்னே மேய்வதைக் கண்காணித்து - பின் ஓரிடத்தில் நிழலில் கூடி அமர்ந்து நாங்களும் உணவு உண்டு இளைப்பாறுவோம்..

நிறைந்த ஞானம் என்று, பெரிதாக  எதையும் ஆராய்ந்து மனதில் இருத்திக் கொள்ளும் அளவுக்கு - எதிலும் ஈடுபட்டு அறியாதவர்கள்... 

நாங்கள் உண்டு எங்கள் கறவையினங்கள் உண்டு என்ற எல்லையைத் தவிர - வேறு ஏதும்  தெரியாதவர்கள்...

உலகியலில் மலிந்து கிடக்கும் வஞ்சனை, பொய், சூது, சூழ்ச்சி, பகை, பொறாமை - இவைகளின் நிழல் கூட எம் மீது படியாதவர்கள்...

இப்படி அறியாதவர்கள், தெரியாதவர்கள், படியாதவர்கள்  ஆகிய எங்கள் - யாதவர் குலத்தினில் நீ பிறந்தனையே!... பெருமைப்படுகின்றோம்!... உன்னை எங்கள் குலத்தவனாக பெறுதற்கு பெரும் புண்ணியத்தை, எம் முன்னோர்களும் நாங்களும் செய்துள்ளோம்...

யாதொரு குறைவும், யாதொரு குறையும் இல்லாதவனே!... 

'கோவிந்தன்' என்னும் திருப்பெயரினைக் கொண்ட எம்பெருமானே!... உன்னுடன் எங்களுக்கு ஏற்பட்டுள்ள  இந்த உறவு, யாராலும் அழிக்கவோ ஒழிக்கவோ  இயலாதது..


அறியாத பிள்ளைகளாகிய நாங்கள், உன்னை சிறுபெயர் கொண்டு அழைத்திருக்கின்றோம்!... அதுவும் உன்னிடம் நாங்கள் கொண்டுள்ள மிகுந்த அன்பினாலும் உரிமையினாலும் தான்!... 

உன்னை சிறுபெயர் கொண்டு அழைத்த - அதற்காக அன்புச் செல்வமே!.. அருள் வடிவே!... எங்கள் மீது சீற்றம் கொள்ளாமல், சிரித்து அருள வேண்டும்!.... 

பெருமாளே!.. எங்களை அடைக்கலமாக ஏற்றுக் கொள்வாக!.. உன்னிடம் நாங்கள் வேண்டி வந்த பெரும் பறையினைத் தந்தருள்வாயாக!....
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..