ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.!......
குத்து விளக்குகள் மென்மையாகப் பிரகாசிக்கும் சயன அறையில் - யானைத் தந்தங்களால் - இழைத்துச் செய்யப்பட்ட கட்டிலில் அழகும் மென்மையும் தூய்மையும் நிறைந்த குளுமையான நறுமணம் மிக்க மெத்தையின் மேல் -
அடர்ந்த கருங்கூந்தலை உடையவள் நப்பின்னை. அது கருங்குழலா?... பூங்குழலா?...
நிறை குழல் நிறைய - நறுமணம் மிக்க மலர்க் கொத்துகளைச் சூடியுள்ள நப்பின்னைப் பிராட்டியின் - திருத் தனங்களில் - மலர் மார்பில் - முகம் சாய்த்தவாறு உறங்கும் மலர் மார்பனே!....மங்கை மணாளனே!...திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை பேசக்கூடாதா?...
நிறை குழல் நிறைய - நறுமணம் மிக்க மலர்க் கொத்துகளைச் சூடியுள்ள நப்பின்னைப் பிராட்டியின் - திருத் தனங்களில் - மலர் மார்பில் - முகம் சாய்த்தவாறு உறங்கும் மலர் மார்பனே!....மங்கை மணாளனே!...திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை பேசக்கூடாதா?...
மை தீட்டப்பட்ட தடங்கண்களில் கருணை ததும்பும் கருங்கண்ணி!... நப்பின்னை!...
உன் கணவன் தூக்கத்தில் இருந்து எழ விட மாட்டாயா?...
உன் கணவனைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி விட மாட்டாயா?...
அவனுடைய பிரிவினை ஆற்ற மாட்டாதவளாய் - பிரிவினைத் தாங்க மாட்டாதவளாய், இமைப் போதும் பிரியாது - அவன் திரு மார்பினை விட்டு அகலாது இருப்பவளே!
உன்னைப் பற்றி - பின் பற்றி - அல்லவா, நாங்கள் அவனை அடைய வேண்டும்!.....
"நங்காய்!...இயற்கைக்கும்
உன் தயாள குணத்திற்கும் ஒத்து வரக்கூடியதாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..