அருள்மிகு சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்,
உவரி.
உவரி.
திருச்செந்தூரில் இருந்து, கன்னியாகுமரியை நோக்கி - தெற்காக கடற்கரை ஓரமாகவே செல்லும் சாலையில் சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது உவரி எனும் அழகிய கடற்கரை கிராமம்.
உவரிக்கு அருகில் உள்ள கிராமம் கூட்டப்பனை. அங்கு வசித்து வந்த மக்கள் அதிகாலைப் பொழுதில் வளர்ப்பு பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து - விற்பதற்காக எடுத்துச் செல்வர்.
அப்படிச் செல்லும் போது இந்த வழியில் - ஒரு கடம்ப மரம். அதனடியில் ஒரு பெண் கால் இடறி விழுந்தார். பால் கலயங்களும் மண்ணில் சாய்ந்தன.
சரி.... விடியற்காலையில் கனமாக பார்த்து நடக்காதது நமது குற்றம் என அவர் மனம் சாந்தி அடைந்தார்.

மறுநாள் - அதே இடம்... கவனம் ... மீண்டும் கால் இடறல்....
என்ன செய்வது!....
இரண்டாம் நாள் - அதே இடம்.. அதிக கவனம்... மீண்டும் கால் இடறல்....
அவ்வளவு தான் - உடன் பாதுகாப்பாக வந்தவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த மண்வெட்டியால் அந்த இடத்தை அகழ்ந்திட - கடம்ப மரத்தின் வேரிலிருந்து குருதி பீறிட்டது.. வெட்டியவர்கள் மயங்கி விழுந்தனர்...
அப்போது அசரீரியாக, "தாம் இவ்விடத்தில் குடி கொண்டிருப்பதாக '' அருளி - இறைவன் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டார்.
மக்கள் தம் பிழை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டு பனை ஓலையினால் சிறு குடில் அமைத்து வழிபட்டனர்.
குருதிப் பெருக்கு நிற்பதற்காக சந்தனம் அரைத்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து சந்தனமே ப்ரசாதம்.
இப்படி கடற்கரையில் - ஈசன் சுயம்பு லிங்கமாகத் தோன்றி மக்களின் உடற் பிணியுடன் பிறவிப் பிணியையும் நீக்கி அருள் புரியும் திருத்தலம் தான் உவரி.
முதலில் அமைக்கப்பட்டது பனை ஓலைக் குடில். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அதன் கீழ் சிறிய சுயம்பு லிங்கமாக ஸ்வாமி எழுந்தருளி உள்ளார். "மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது" என்பதை உணர்த்தும் முகமாக இங்கு சிவபெருமான் காட்சி அளிக்கின்றார்.
திருக்கோவிலின் கன்னி மூலையில் விநாயகர் திருக்கோயில் தனியாக உள்ளது. அருள்மிகு பத்ரகாளி முன்னோடியார் ஸ்வாமியுடனும் பரிவார தேவதைகளுடனும், பிரம்மசக்தி அம்மன் எனும் திருப்பெயரில் திகழ்கின்றாள். முன் மண்டபத்தில் வேறு ஒரு பிரம்மசக்தியும் சிவன் அணைந்த பெருமாளும் அருள்கின்றனர்.
பிரம்ம சக்தி அம்மன் சன்னதிக்கு அருகில் அருள்மிகு பேச்சியம்மனும், அருள்தரு மாடசாமியும், அருள்தரு இசக்கி அம்மனும் விளங்குகின்றனர்.
சற்று தொலைவில் பெரிய குதிரை வாகனத்துடன் அருள்மிகு வன்னியடி சாஸ்தா - பூர்ணகலா, புஷ்கலா சமேதராக கோயில் கொண்டு அருள்கின்றார்.
இங்கு சுவாமியை வழிபட பெருநோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. மனமுருக வழிபட்டால் வயிற்று வலி குணமாகிறது. மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து மீள்கின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள், பேய் பிசாசு பிடித்த பிரச்னைகள் இங்கு வழிபட்டால் தீருகின்றன.
அவ்வளவு தான் - உடன் பாதுகாப்பாக வந்தவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த மண்வெட்டியால் அந்த இடத்தை அகழ்ந்திட - கடம்ப மரத்தின் வேரிலிருந்து குருதி பீறிட்டது.. வெட்டியவர்கள் மயங்கி விழுந்தனர்...
அப்போது அசரீரியாக, "தாம் இவ்விடத்தில் குடி கொண்டிருப்பதாக '' அருளி - இறைவன் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டார்.
மக்கள் தம் பிழை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டு பனை ஓலையினால் சிறு குடில் அமைத்து வழிபட்டனர்.
அருள்மிகு சுயம்புலிங்க ஸ்வாமி |
இப்படி கடற்கரையில் - ஈசன் சுயம்பு லிங்கமாகத் தோன்றி மக்களின் உடற் பிணியுடன் பிறவிப் பிணியையும் நீக்கி அருள் புரியும் திருத்தலம் தான் உவரி.
சுயம்புலிங்கஸ்வாமி திருக்கோயில். |
திருக்கோவிலின் கன்னி மூலையில் விநாயகர் திருக்கோயில் தனியாக உள்ளது. அருள்மிகு பத்ரகாளி முன்னோடியார் ஸ்வாமியுடனும் பரிவார தேவதைகளுடனும், பிரம்மசக்தி அம்மன் எனும் திருப்பெயரில் திகழ்கின்றாள். முன் மண்டபத்தில் வேறு ஒரு பிரம்மசக்தியும் சிவன் அணைந்த பெருமாளும் அருள்கின்றனர்.
பிரம்ம சக்தி அம்மன் சன்னதிக்கு அருகில் அருள்மிகு பேச்சியம்மனும், அருள்தரு மாடசாமியும், அருள்தரு இசக்கி அம்மனும் விளங்குகின்றனர்.
சற்று தொலைவில் பெரிய குதிரை வாகனத்துடன் அருள்மிகு வன்னியடி சாஸ்தா - பூர்ணகலா, புஷ்கலா சமேதராக கோயில் கொண்டு அருள்கின்றார்.
இங்கு சுவாமியை வழிபட பெருநோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. மனமுருக வழிபட்டால் வயிற்று வலி குணமாகிறது. மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து மீள்கின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள், பேய் பிசாசு பிடித்த பிரச்னைகள் இங்கு வழிபட்டால் தீருகின்றன.
மார்கழி மாதம் முழுதும் சுயம்புலிங்க ஸ்வாமியின் சன்னதியில் சூரிய ஒளிபடும். மாதம் முழுதும் சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது இங்கு மட்டும்தான்.
கோயிலின் அருகில் கடற்கரை மணலில் நல்ல தண்ணீர் ஊற்றுகள் மூன்று உள்ளன. இவற்றில் ஒரு ஊற்று சுவாமியின் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
அருள்மிகு சந்திரசேகரர் - மனோன்மணிஅம்பிகை |
மகர மீனுக்கு சுவாமி காட்சி தரும் வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பான விழாக்களாகும்.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். தவிர, ஆடி அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் பக்தர்கள் கடலில் நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.
மாதந்தோறும் பௌர்ணமி, கார்த்திகை, பிரதோஷம், ஆகியன சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் நாட்களில் விஷேச பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கரையில் போட்டு வழிபடுதல் இங்கு விஷேசமான வழிபாடாக உள்ளது.
எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடல் நீராடி சுயம்புலிங்க ஸ்வாமியை வழிபட்டால் தீருகிறது. கல்யாண வரம் வேண்டியும் , குழந்தை பாக்கியம்
வேண்டியும் ஈசனை வணங்க - கோரிய வரங்கள் கிடைத்து வருவது, பக்தர்கள் காலம் காலமாக பார்த்து வரும் உண்மை.
இயற்கை எழில் கொஞ்சும் உவரி கடற்கரை - சமீப காலமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது
உவரி அருள்மிகு சுயம்புலிங்கஸ்வாமி திருக்கோயிலைச் சுற்றிலும் பனையும் தென்னையும் பலவகை மரங்களும் சூழ்ந்துள்ளன.
''மூர்த்தி, தலம், தீர்த்தம்'' என சிறந்து விளங்கும் இந்த கடற்கரைக் கோயிலுக்கு - மனஅமைதி இழந்து தவிப்போர் ஒருமுறை வந்தால் மிகுந்த மன அமைதி கிடைப்பதை உணர்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..