ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 25
தேவகி நந்தனம் |
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்!...
வசுதேவ சுதம் |
தேவகியின் மணிவயிற்றில் திருக்குமரனாக ஒரு நாள் இரவில் அவதரித்து,
அந்த நள்ளிரவிலேயே - யசோதாவின் செல்வக் குமரனாகி வளர்ந்தாய்!...
உன்னை மணிவயிற்றில் சுமந்து பெற்றெடுத்தவள் மாதரசி தேவகி!... ஆனால்....
யசோதைதான் - உன்னைத் தொட்டுத் தழுவி, உச்சி முகர்ந்தவள்!...
உயிரில் சுரந்த அமுதூட்டி ''கண்ணே... கனியே...'' என்று தாய்மை பகர்ந்தவள்!...
வாரி அணைத்து வகிடு எடுத்து வாஞ்சையுடன் முத்தாடினாள்!...
உன் முகம் பார்த்து அதில் தன் முகம் பார்த்து - உன் மேல் பித்தாகினாள்!...
நந்தகோபன் கையிரண்டில் மலரானவன் நீ!...
கோகுலத்தில் வளர்கின்ற நிலவானவன் நீ!...
யாரும் அறியா வண்ணம் யாதவ மாளிகையில் தவழ்ந்த மாதவனே!...
யாம் பெற்ற பெரும் பேறென யசோதை விழி நிறைந்த யாதவனே!..
உன்னைத் தாங்கிக் கொள்ள மாட்டாதவனாக...
உனக்குத் தீங்கு நினைத்து - ''அதில் வென்று விடலாம்'' என்று - தனக்குத்தானே தீங்கு நினைத்துக்கொண்ட, கம்சனின் -
எண்ணத்தைப் பிழையாக்கி - அவன் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி,
அவன் வயிற்றில் - அவனே வைத்துக் கொண்ட -
உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்தோம்!...
எங்களுடைய விருப்பமான நோன்புப் பறையினை வழங்குவீராகில் ,
திருவளர் செல்வனே!...உன்னை அடைந்து,
'' கண்ணா!... நீ திரு வளர் செல்வனா?... திரு நிறை செல்வனா?...''
உனக்கே திருத்தொண்டு புரியும் பெரும் பேற்றினையும் அடைந்து,
அதனால் எங்கள் வருத்தம் எல்லாம் தீர்ந்து, ஆங்கே விளையும் பேரானந்தத்தில் - நெகிழ்ந்திருப்போம்!...
கால காலத்திற்கும் உன் திருவடித் தாமரைகளில் மகிழ்ந்திருப்போம்!.....
அந்த நள்ளிரவிலேயே - யசோதாவின் செல்வக் குமரனாகி வளர்ந்தாய்!...
திருவளர் செல்வன் |
யசோதைதான் - உன்னைத் தொட்டுத் தழுவி, உச்சி முகர்ந்தவள்!...
உயிரில் சுரந்த அமுதூட்டி ''கண்ணே... கனியே...'' என்று தாய்மை பகர்ந்தவள்!...
வாரி அணைத்து வகிடு எடுத்து வாஞ்சையுடன் முத்தாடினாள்!...
உன் முகம் பார்த்து அதில் தன் முகம் பார்த்து - உன் மேல் பித்தாகினாள்!...
நந்தகோபன் கையிரண்டில் மலரானவன் நீ!...
கோகுலத்தில் வளர்கின்ற நிலவானவன் நீ!...
ஆயர்பாடி மாளிகையில் |
யாம் பெற்ற பெரும் பேறென யசோதை விழி நிறைந்த யாதவனே!..
உன்னைத் தாங்கிக் கொள்ள மாட்டாதவனாக...
உனக்குத் தீங்கு நினைத்து - ''அதில் வென்று விடலாம்'' என்று - தனக்குத்தானே தீங்கு நினைத்துக்கொண்ட, கம்சனின் -
எண்ணத்தைப் பிழையாக்கி - அவன் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி,
அவன் வயிற்றில் - அவனே வைத்துக் கொண்ட -
நெருப்பு என நின்ற நெடுமாலே!....எங்கள் பெருமாளே!...
உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்தோம்!...
எங்களுடைய விருப்பமான நோன்புப் பறையினை வழங்குவீராகில் ,
திருவளர் செல்வனே!...உன்னை அடைந்து,
'' கண்ணா!... நீ திரு வளர் செல்வனா?... திரு நிறை செல்வனா?...''
உனக்கே திருத்தொண்டு புரியும் பெரும் பேற்றினையும் அடைந்து,
அதனால் எங்கள் வருத்தம் எல்லாம் தீர்ந்து, ஆங்கே விளையும் பேரானந்தத்தில் - நெகிழ்ந்திருப்போம்!...
கால காலத்திற்கும் உன் திருவடித் தாமரைகளில் மகிழ்ந்திருப்போம்!.....
நன்றி - ரதி, தேவி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..