நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்துமஸ்


 இறைமகன் பிறந்த நன் நாளில் 
அன்பும் அருளும் எங்கும் பரவுவதாக!...


கன்னிமரியாள் திருவயிறு தாங்கி இறைமகனைப் பெற்றெடுத்த திருநாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

லூக்கா அளித்த நற்செய்தியின்படி இயேசுவின் பெற்றோராகிய மரியாவும், யோசேப்பும், நாசரேத்து என்னும் ஊரில் வாழ்ந்து வந்தனர். 

கன்னி மரியாளுக்கு கடவுளின் தூதுவர்  தோன்றி " அருள் மிகப் பெற்றவரே வாழ்க! கடவுள் உம்முடனே இருப்பார். உன் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.' என்று வாழ்த்தினார். இந்த வாழ்த்துச் செய்தி மார்ச் 25ல் கொண்டாடப்படுகிறது

அந்தக் காலத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால், அவரவர் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. யோசேப்பும் தம் மனைவி மரியாவோடு பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து, யூதேயாவிலுள்ள பெத்லகேம் சென்றார். அங்கேதான் மரியா ஓர் மாட்டுத் தொழுவத்தில் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டனர்.

வாழ்த்துச் செய்தி நாளிலிருந்து 9 மாதங்கள் கழித்து, டிசம்பர் 25ல் இயேசு பிறந்தார். 

இயேசு பிறந்ததை ஞானிகளுக்கு முன்னறிவிக்கும் விதமாக அதிசய விண்மீன் ஒன்று வானத்தில் தோன்றியது. அந்த விண்மீன் இயேசு பிறந்துள்ள பெத்லகேமுக்கு ஞானிகளை அழைத்து சென்றது. இதன் நினைவாகவே, வீடுகளின் முன் நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது. 

இந்தப் பண்டிகையில், முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாட்களில், பசுமை மாறா ஊசியிலை மரங்களை வண்ண விளக்குகளுடன் தேவாலயங்களிலும், வீடுகளிலும் அலங்கரித்திருப்பர். இந்த மரம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..