ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 09
மாமாயன் மாதவன் |
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உம் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்!
துயிலணை மேல் கண் வளரும் மாமன் மகளே |
எம் பாவாய்!.... இன்னும் உணர்ந்திலையோ!...
மணிக்கதவுகள் பொருத்தப்பட்டுள்ள சயன அறையில், அன்னத்தின் மெல்லிய தூவிகளால் நிறைக்கப்பட்ட சில்லென்ற துயிலணை. அதனைச் சுற்றிலும் நறுமணப் புகை கமழும் சந்தன தூபங்கள்.. சுவர்களில் மாசற்ற மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள்... அந்த மாடங்களில் ஏற்றி வைக்கப்பட்ட தூங்காமணி விளக்குகள்...
ஆனால்... நீ மட்டும் இன்னமும் மஞ்சத்தில் தூங்கிக் கொண்டு.....
என்ன பொருத்தம் இது!... மாமன் மகளே!.. எழுந்து வந்து உன் திருக்கரங்களால் மணிக்கதவின் தாள் திறக்க மாட்டாயா!..
மாமீ!... நீங்களாவது அவளுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?...உங்கள் அன்பு மகள் எங்களுக்கு பதில் ஏதும் கூறாமல் கிடக்கின்றாளே!...
''மாயனே!... மாதவனே!...கேசவனே!... வைகுந்தவாசனே!...என்று மனதிற்கு இனியவனின் திருநாமங்கள் பலவற்றையும் பரவி நிற்கின்றோம்...
மணிக்கதவின் தாள் திறந்து, மலர்ந்த முகத்தினளாய் .....வாராய்!...
எம் பாவாய்!... வாராய்!...
***
ஜி இதன் இரண்பாவது பகுதி கடைசிவரை குழறுபடியாக உள்ளது.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
பதிலளிநீக்குஇதெல்லாம் பழைய பதிவுகள்..
சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..
நன்றி..