நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 28, 2012

திருப்பாவை - 13

ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 13

thanjavur14
புள்ளின் வாய் கீண்ட கோகுலச் செல்வன்
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள்  எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர்  எம்பாவாய்!.


எம் பாவாய்!....இது நியாயமா...உனக்கு!....

ஒரு கொக்கைப் போல வந்து - கொடுமை செய்ய முயன்ற அரக்கனை  - வாயைப்  பிளந்து - அழித்து ஒழித்தவன்  கண்ணன்.

அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
மீண்டும் நெடிய பாம்பென வந்த அகாசுரனையும்  - பயிர்களின் ஊடாக களைகளைக்  கிள்ளுவதைப் போல கிள்ளி அகற்றி அழித்தவன். 

அவனுடைய இணையில்லா திருப்புகழினைப் பாடிக் கொண்டு பெண் பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்குச் சென்று விட்டனர்.. 

விடியலுக்கு முன் கீழ்வானில் வெள்ளி முளைத்துத் தோன்ற, வியாழனும் தன் வேலை முடிந்தது என்று கண்களிலிருந்து மறைகின்றது.  எழுந்து வந்து  அந்த அற்புதத்தினைக் காண்!...

உறங்கிக் கிடந்த பறவைகள் எல்லாம் பாடித் திரிய தொடங்கி விட்டன. எழுந்து வந்து பறவைகளின் இன்னிசையைக் கேள்!...

மலர்ந்தும் மலராத மலர் போன்ற மலர் விழியாளே!... குளிர்ந்த நீரில் கூடிக்  குடைந்து  - நீராடிக் குதூகலிக்காமல் - இன்னும் உறங்கிக் கிடக்கின்றாயே!....

நல்ல நாளாகிய இன்றேனும் பொய்த் தூக்கத்தைத் தவிர்த்து எழுந்து வா! உன் கள்ளத்தனம் போதும்.  

நீரொடு நீர் கலந்தாற்போல்  நாம் நீராடச் செல்வோம்... வா!...
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..