நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 16, 2012

திருப்பாவை - 01


சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் திருவடிகள் போற்றி!...

திருமலையில் மார்கழி முப்பது நாளும் அதிகாலையில் முழங்கும் திருப்பாவை பாசுரங்கள்!... 

அடைக்கலம் அறியாது அல்லறும் ஆன்மாக்களை 
அரவணையில் துயிலும் அரங்கனிடம் ஆற்றுப்படுத்தி
கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய திருப்பாவ



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்,  போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண், கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்தேலோர் ம்பாவாய்!... 01      


மாதங்களில் சிறந்ததாக விளங்கும் மார்கழியின் இந்நாள் - நிறை மதியுடைய நன்னாளாகவும் திகழ்கின்றது.  சீரும் சிறப்பும் பெருகி செல்வச் செழிப்புடன்  திகழும் ஆயர்பாடியின் இளங்கன்னியரே!.. இந்த நன்னாளில் - மார்கழி நோன்பினை நோற்க - நீராடச் செல்வோம் வாருங்கள்!....

கொடுந்தொழில் புரிவோரின் கொடுமைகளைக் களைவதற்காக - கூரிய வேல் ஒன்றினை ஏந்தியவனாக விளங்கும் நந்தகோபனின் செல்வக்குமரன். அழகான கண்களையுடையவளான யசோதை பெற்றெடுத்த அன்புச்செல்வன். இளஞ்சிங்கத்தைப் போ - ஒப்பாரும் மிக்காரும் இல்ல அவன்
 
வாரி வழங்கும் கார்மேகம் போல் பொலியும் திருமேனியழகன். சிவந்த கண்களை உடையவன். ஒளிரும் மதியினைப் போன்ற திருமுகத்தினன். அவனே - அந்தக் கண்ணனே... நாராயணன்..

அவனே...

நாம் நோற்கும் நோன்பின் பயனாகிய - அருள் எனும் அரும் பரிசினை அருள்பவன். அருள வல்லவன்..  

பாரோர் புகழ்ந்து போற்றும் -  

அவனை நோக்கி நோன்பு நோற்ம் வாருங்கள்!....
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..